Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
A River Runs Through It
(ஹாலிவுட் திரைப்படம்)
அமெரிக்கப் படம் என்றாலே படம் முழுக்க துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பார்கள், கார்கள் ஒன்றோடொன்று மோதி வானத்தில் பறந்து கொண்டிருக்கும், ஏராளமான மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் நெருப்பு பிடித்து எரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நம்மில் பெரும்பாலோரின் மனங்களில் தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்றல்ல.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கோலங்ஙள்
(மலையாள திரைப்படம்)
மலையாள பட உலகிற்கு பல அருமையான படங்களை இயக்கி, பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். அவர் இயக்கிய ஒரு மிகச் சிறந்த படமிது. இந்தப் படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான்.
1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் பி.ஜே.ஆன்டனி எழுதிய ‘ஒரு கிராமத்தின்டெ ஆத்மாவு’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆர்டினரி
(மலையாள திரைப்படம்)
அருமையான லொக்கேஷன், இனிமையான பாடல்கள், பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் – நடிகைகள், சுவாரசியமான சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள், எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சிகள் – இவற்றைக் கொண்டு ஒரு வெற்றிப் படத்தைத் தர முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
2012இல் திரைக்கு வந்த இந்தப் படத்தின் கதாநாயகர்கள் குஞ்சாக்கோ போபனும், பிஜு
மேனனும்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
அர்த் ஸத்ய
(இந்தி திரைப்படம்)
1983ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, பல விருதுகளைப் பெற்ற படம். திரைக்கு வந்த கால கட்டத்தில் பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட படம்.
படத்தின் இயக்குநர் : Govind Nihalani.
ஓம்புரி, அம்ரீஷ்புரி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
S.D.Palwalker எழுதிய ‘Surya’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பிரபல மராத்தி நாடகாசிரியர் Vijay Tendulkar. உரையாடல்களை எழுதியவர் Vasant Dev.