
சுராவின் முன்னுரை
உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் எழுத்தாளரான ஸ்டெஃபான் ஸ்வைக் (Stefan zweig) 1922ஆம் ஆண்டில் எழுதிய ‘Letter from an unknown woman’ என்ற புதினத்தை ‘அறியாத பெண்ணின் அஞ்சல்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு இளம் பெண் வாசகியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. காலப் போக்கில் அந்த எழுத்தாளருக்கும் அந்த இளம் பெண்ணுக்குமிடையே உடல் ரீதியான உறவு கூட உண்டாகி விடுகிறது. அதற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை என்ன ஆனது?
உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் 1947ஆம் ஆண்டில் ‘Letter from an unknown woman’ என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook