ஈரானும் இந்தியாவும் அமெரிக்காவும் இத்தாலியும் ஒரே இடத்தில் விற்பனை!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3039
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
ஈரானும் இந்தியாவும் அமெரிக்காவும் இத்தாலியும் ஒரே இடத்தில் விற்பனை!
உலக, இந்திய திரைப்படங்களைப் பற்றி நான் பத்திரிகைகளிலும், முக நூலிலும், லேகா புக்ஸ் இணைய தளத்திலும் எழுதுவதை வாசிக்கும் ஒவ்வொருவரும் என்னிடம் கேட்கும் கேள்வி ' நீங்கள் இந்த அளவிற்கு அருமையான படங்களை எங்கு வாங்குகிறீர்கள்?' என்பதுதான்.
தினமும் நான் சந்திக்கும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், உதவி இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று எல்லோருமே இந்த கேள்வியை தவறாமல் கேட்கின்றனர். பத்திரிகை அலுவலகங்களிலிருந்தும் இதே கேள்விதான். வெளிநாடுகளில் வாழும் திரைப்பட ஆர்வலர்களும் தொலைபேசியில் இதே கேள்வியை கேட்கின்றனர்.
அவர்கள் எல்லோருக்கும் இதோ பதில்:
நான் திரைப்படங்களின் டிவிடி வாங்கும் கடை சென்னை ஜெமினி பார்சன் கமெர்சியல் காம்ப்ளெக்ஸில் இருக்கிறது. இது பாம்குரோவ் ஹோட்டலுக்கு அருகில் இருக்கிறது. கடையின் பெயர்:கிங்க்ஸ் பார்க். கடையின் உரிமையாளரின் பெயர் காதர். புகைப்படத்தில் எனக்கு அருகில் நின்று கொண்டிருப்பவர்தான் காதர். அவரின் அலைபேசி எண்:98411 76631.
ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக தகவல் கூறிக் கொண்டிருக்க முடியாது என்பதால், ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் இந்த பதில். திரைப்படங்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த கடையில் நான் வாங்கி, பார்த்து, ரசித்த படங்கள் பலவற்றையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அடடா. . . ஒவ்வொன்றும் எப்படிப்பட்ட படங்கள்!
காலத்தால் அழியாத ' பென்ஹர்' . . . என்றும் நினைவில் நிற்கும் 'லாரென்ஸ் ஆஃப் அரேபியா' . . . ஒப்பற்ற காவியமான 'டென் கமான்ட்மென்ட்ஸ்' . . . இன்றும் மனதிற்குள் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் ' சவுண்ட் ஆஃப் ம்யூசிக்' . . . என்றுமே மறக்க முடியாத ' மெக்கனாஸ் கோல்ட்' . . . காதல் காவியமான ' டாக்டர் ஷிவாகோ' . . . நிகரற்ற ' கன்ஸ் ஆஃப் நவ்ரோன்' . . . அருமையான சீன படமான 'நாட் ஒன் லெஸ்' . . . மிகச் சிறந்த ஈரான் படங்களான ' சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' . . . 'பாரன்' . . . ' வேர் ஈஸ் மை ஃப்ரண்ட்ஸ் ஹோம்' . . . ' ப்ளாக் போர்ட்' . . . 'தி சைக்லிஸ்ட்' . . . ' கலர் ஆஃப் பேரடைஸ்' . . . 'காந்தஹார்' . . . ' தி மிர்ரர்' . . . 'ஏ செப்பரேஷன்' . . . 'தி பாஸ்ட்' . . . ' லெய்லா' . . . ' சாங்க் ஆஃப் ஸ்பேரோஸ்' . . . மறக்கவே முடியாத 'சினிமா பேரடைஸோ' . . . புகழ் பெற்ற தென் கொரிய இயக்குநர் கிம் கி-டுக் இயக்கிய ' தி போவ்' . . . வியக்க வைக்கும் ஸ்பெயின் நாட்டு படமான 'மேட்ரிட்-1987' . . . வரலாற்றில் இடம் பெற்ற 'தி லாஸ்ட் எம்பெரர்' . . . பிராட் பிட் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட்' . . . சிறந்த திரைக்கதைக்கு உதாரணமான ' பேபெல்' . . . இளமை தவழும் சீன படமான ' பால்ஸாக் அண்ட் தி லிட்டில் சைனீஸ் ஸீம்ஸ்ட்ரெஸ்' . . . சார்லி சாப்ளினின் ' தி கிட்' . . அடூர் கோபால கிருஷ்ணனின் ' நிழல் கூத்து' . . . சத்யஜித் ரேயின் ' சாருலதா' . . . சரத் சந்திர சட்டர்ஜியின் காதல் காவியமான ' பரினீதா' . . . குரு தத்தின் ' காகஸ் கே ஃபூல்' . . . காலத்தை வென்று நிற்கும் ' க்ளாடியேட்டர்' . . .
*********************************************************************************
பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டான ' க்ளியோபாட்ரா' . . . நம் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்' சஸாங்க் ரெடெம்ப்ஷன்' . . . யாராலும் மறக்க முடியாத ' லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்'. . . அல் பஸினோவின் முத்திரை நடிப்பு கொண்ட ' ஸென்ட் ஆஃப் ஏ உமன்' . . . ஆச்சரியப்பட வைக்கும் 'தி பியானிஸ்ட்' . . . அபர்ணா சென் இயக்கிய ' 36 சவ்ரங்கீ லேன்' . . . 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்' . . . ' ஜப்பானீஸ் ஒயிஃப்' . . . '14 பார்க் அவென்யூ' . . . என்றும் பெருமைப்பட வைக்கும் 'மொகல் ஏ ஆஸாம்' . . . ஆஸ்கார் விருது பெற்ற ' தி ஆர்ட்டிஸ்ட்' . . . மார்கரெட் தாட்சரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி அயர்ன் லேடி' . . . பரபரப்பாக பேசப்பட்ட ' ஸீரோ டார்க் தேர்ட்டி' . . . லியோனார்டோ டீ காப்ரியோவின் மிகச் சிறந்த நடிப்புத் திறமையைக் கொண்ட 'எட்கர் ஜே' . . . மாறுபட்ட ஆஃப்ரிக்க படமான ' மூலாடே' . . . பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் வாழும் ஜப்பானிய படமான ' கிக்குஜிரோ' . . . நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்' ஸ்ட்ரேய் டாக்ஸ்' . . . உயிர்ப்புடன் இப்போதும் மனதில் நிறைந்திருக்கும் 'தி ஃபாரஸ்ட் கம்ப்' . . . டாம் ஹேங்க்ஸின் பண்பட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்திய ' கேஸ்ட் அவே' . . . அகிரோ குரோசோவாவின் 'ட்ரீம்ஸ்' . . . அருமையான குஜராத்திப் படமான ' தி குட் ரோட்' . . . வித்தியாசமான இந்திப் படமான ' ஹை வே' . . . எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத 'ரோட் ஹோம்' . . . ' வே ஹோம்' . . . அமெரிக்கர்களின் இல்லங்களில் வேலை செய்யும் கருப்பின பெண்களின் பிரச்னைகளைப் பற்றி எடுக்கப்பட்ட ' தி ஹெல்ப்' . . . சுனாமியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ' தி இம்பாஸிபில்' . . . புகழ் பெற்ற நாவலான பியேல் எஸ். பக்கின் திரை வடிவமான ' குட் எர்த்' . . . ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ' டைட்டானிக்' . . . ' காந்தி' . . . தீபா மேத்தாவின் ' வாட்டர்' . . . அருமையான குடும்பக் கதை கொண்ட ' ஏ ட்ரீ ஆஃப் லைஃப்' . . . மாறுபட்ட முயற்சியான ' ரன் லோலா ரன்' . . . இளமை ததும்பும் ' ஆகஸ்ட் ரஷ்' . . . மனதை கனக்கச் செய்யும் ' பியானோ டீச்சர்' . . . க்ளின்ட் ஈஸ்ட் உட் இயக்கிய ' ஏ மில்லியன் டாலர் பேபி' . . . வில் ஸ்மித்தின் மிகச் சிறந்த படமான ' தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்' . . . நம் இந்திய குடும்ப கதையைப் போலவே இருக்கும் ஹாலிவுட் படமான ' க்ரேமர் வெர்சஸ் க்ரேமர்' . . . பொறுமையின் சின்னமான ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ' லிங்கன்' . . . உலக புகழ் பெற்ற ஓவியனான வின்சென்ட் வான்காவின் வாழ்க்கையைக் காட்டும் ' லஸ்ட் ஃபார் லைஃப்' . . . ஃபிடெல் கேஸ்ட்ரோ, சே குவேரா இருவரையும் மைய பாத்திரங்களாக வைத்து எடுக்கப்பட்ட ' மோட்டார் சைக்கிள் டயரீஸ்' . . .
இப்படியே நான் அங்கு வாங்கிய படங்களை மணிக் கணக்கில் கூறிக் கொண்டே போகலாம். நான் பெற்ற பயனை எல்லோரும் பெற வேண்டும் என்பதே என் ஆசை. . .