V.Chitralekha (V.சித்ரலேகா)
பல்வேறு துறைகளிலும் தன்னுடைய மிகச் சிறந்த எழுத்தாற்றலின் மூலம் மக்களின் வரவேற்பை பரவலாக பெற்றிருப்பவர்.
பொதுவாக, சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதிய பின்னர்தான் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றிற்கு கதையும், வசனமும் எழுதுவது வழக்கம். ஆனால் சித்ரலேகா முதன் முதலாக, எழுத்தாளராக அடியெடுத்து வைத்தது தொலைக்காட்சி தொடர்களில்!
தொடர்களுக்கு கதை, வசனம் எழுதிய இவரது எழுத்தாற்றல், நாவல்கள் எழுதுவதில் தொடர்ந்து, வளர்ந்தது.
பெண் எழுத்தாளர்களில் க்ரைம் கதைகள் எழுதுபவர்கள் இங்கே யாருமே இல்லை எனலாம். இவரது பெரும்பாலான கதைகள் குற்றவியலை அடிப்படையாகக் கொண்டவை. வாசிப்பவர்கள், யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் மற்றும் முடிவு வைத்து எழுதுவதில் தனித்தன்மை கொண்டவர்.
இவருடைய நாவல்களில், சிறிதும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும். அத்துடன் குடும்பப் பின்னணியில் தன்னுடைய பெரும்பாலான க்ரைம் கதைகளை இவர் படைத்திருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு உரிய `வேகம்’ இவருடைய எல்லா கதைகளிலும் இருக்கும்.
க்ரைம் நாவல்களில் கத்திமுனை, துப்பாக்கிச்சூடு, கொலை, களவு, கற்பழிப்பு போன்றவைகள் மிதமாக எழுதப்பட்டிருந்தாலும், காதல், கல்யாணம், குடும்பம், பாசம், சோகம், பிரிவு போன்ற சென்டிமென்ட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
சிறு கதைகள், கவிதைகள், சமூக விழிப்புணர்வு கட்டுரைகள், ஆன்மிக கட்டுரைகள், பாடல்கள், வசனங்கள், சமையல் குறிப்பு புத்தகங்கள் ஆகியவற்றை எழுதும் இவரது திறமை, போற்றுதலுக்குரியது.