சூரத் காபி கடை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7109
இந்தியாவில் உள்ள சூரத் என்ற நகரத்தில் ஒரு காபி கடை இருந்தது. அங்கு நிறைய உலகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த வழிப்போக்கர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் ஒரு படித்த பாரசீக ஆன்மிகவாதி அந்த காபி கடைக்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை- கடவுளின் இயல்பைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், அதைப் பற்றிப் படிப்பதிலும் எழுதுவதிலும் கழித்தவர். அவர் கடவுளைப் பற்றி ஏராளமாக சிந்தித்தார், படித்தார், எழுதினார்.
அதனால் காலப்போக்கில் அவர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழந்து, மிகுந்த குழப்பவாதியாக மாறி, கடவுளின் தோற்ற இருத்தலில் நம்பிக்கை வைத்திருப்பதைக்கூட நிறுத்திக் கொண்டார். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ஷா, பாரசீகத்திற்குள் அவர் இருப்பதற்கு தடை விதித்தார்.
"முதல் காரணம்’’என்பதைப் பற்றி தன் வாழ்நாள் முழுவதும் விவாதம் செய்த அந்த அதிர்ஷ்டமில்லாத ஆன்மிகவாதி தனக்குத் தானே குழம்பிப் போயிருந்தார். தன்னுடைய அறிவையே இழந்து விட்டோம் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு அப்படியொரு உயர்ந்த அறிவு என்பது இல்லவே இல்லை என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.
அவருக்கு ஒரு ஆஃப்ரிக்க அடிமை இருந்தான். அவன் எல்லா இடங்களுக்கும் அவரைப் பின்பற்றி வருவான். அந்த ஆன்மிகவாதி காபி கடைக்குள் நுழைந்தபோது, அந்த அடிமை வெளியிலேயே இருந்துவிட்டான். அவன் கதவுக்கு அருகில், சூரிய வெளிச்சத்தில் ஒரு கல்லின்மீது உட்கார்ந்துகொண்டு தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தான். காபி கடைக்குள் இருந்த ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்த பாரசீக ஆன்மிகவாதி தனக்கு ஒரு கோப்பை "ஓப்பியம்’’ வேண்டுமென்று கேட்டார். அவர் அதைக் குடித்து முடித்தவுடன், "ஓப்பியம்’’ அவருடைய முளையின் வேலைகளைத் துரிதப்படுத்தியது. அப்போது அவர் திறந்திருந்த கதவு வழியாக தன்னுடைய அடிமையிடம் கேட்டார்:
“சொல்லு... நாசமாப் போன அடிமையே, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? நீ என்ன நினைக்கிறாய்?''
“அனேகமாக... இருக்கிறார்...'' அடிமை கூறினான். உடனடியாக அவன் தன்னுடைய இடுப்பிற்குள்ளிருந்து மரத்தாலான ஒரு சிறிய சிலையை எடுத்தான்.
“இவர்தான்...'' அவன் சொன்னான்: “இந்தக் கடவுள்தான் தான் பிறந்த நாளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். எங்கள் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை வழிபடுவோம். அந்த மரத்திலிருந்து உருவாக்கப்பட்டவர்தான் இந்தக் கடவுள்.''
ஆன்மிகவாதிக்கும் அவருடைய அடிமைக்குமிடையே நடை பெற்ற இந்த உரையாடலை அந்த காபி கடையில் உட்கார்ந்திருந்த மற்ற விருந்தாளிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆன்மிகவாதியின் கேள்விகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அதைவிட அதிகமான வியப்பு அந்த அடிமையின் பதிலைப் பார்த்து அவர்களுக்கு உண்டானது.
அவர்களில் ஒருவர் பிராமணர். அந்த அடிமையின் வார்த்தைகளைக் கேட்ட அவர், அவன் பக்கம் திரும்பிக் கூறினார்:
“பரிதாபத்திற்குரிய முட்டாள்! ஒரு மனிதனின் இடுப்புக்குள் கடவுளை வைத்துக் கொண்டு திரிய முடியும் என்று நீ நம்புகிறாயா? அது சாத்தியமா? ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவர்- பிரம்மா. அவர் முழு உலகத்தையும்விட மிகவும் பெரியவர். ஏனென் றால் அவர்தான் அதைப் படைத்தவரே. பிரம்மா மட்டுமே ஒரே கடவுள். அவர்தான் பலம் கொண்ட கடவுள். அவர்மீது கொண்ட பக்தியால் உருவாக்கப்பட்ட கோவில்கள் கங்கை நதியின் கரைகளில் இருக்கின்றன. அங்கு அவரின் உண்மையான துறவிகளான பிராமணர்கள் அவர்களை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான கடவுளைத் தெரியும். அதே நேரத்தில், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்தோடிவிட்டன. ஒரு புரட்சிக்குப் பிறகு இன்னொரு புரட்சி என்று பல நடந்தும், துறவிகள் தங்களுடைய நிலையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்- பிரம்மா என்ற உண்மையான கடவுள் அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.''
அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த பிராமணர் பேசினார். ஆனால், அங்கிருந்த ஒரு யூத தரகர் அவருக்கு பதில் கூறினார். அவர் சொன்னார்:
“இல்லை... உண்மையான கடவுளின் ஆலயம் இந்தியாவில் இல்லை. கடவுள் பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றவும் இல்லை. உண்மையான கடவுள் என்பவர் பிராமணர்களின் கடவுளும் அல்ல. உண்மையில் கடவுள் என்பவர் ஆப்ரஹாம், ஐசக், ஜேக்கப் ஆகியோரின் கடவுள்தான். அவர் யாரையும் காப்பாற்றவில்லை. அவர் தேர்ந்தெடுத்த ஆட்கள்தான் காப்பாற்றுகிறார்கள். அதாவது- இஸ்ரேலியர்கள். உலகம் ஆரம்பமானதிலிருந்து நம் நாடு அவர்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறது. அவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர். இப்போது நாம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறோம் என்றால், இது அவர் நம்மீது நடத்தும் சோதனையே. ஒருநாள் தன்னுடைய மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து ஜெருசலேமில் சேர்ப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். பண்டைய உலகின் ஆச்சரியச் சின்னமான ஜெருசலேமில் இருக்கும் ஆலயத்தின் அழகிய தன்மையுடன், எல்லா நாடுகளையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம் கொண்டதாக இஸ்ரேல் இருக்கும்.''
இப்படிக் கூறிய அந்த யூதர் கண்ணீர்விட்டு அழுதார். அவர் மேலும் சில விஷயங்களைக் கூற நினைத்தார். ஆனால், அங்கு இருந்த ஒரு இத்தாலிய மத ஊழியர் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது பொய்.'' அவர் அந்த யூதரைப் பார்த்துக் கூறினார்: “நீங்கள் கடவுளுக்கு தீங்கு இழைக் கிறீர்கள். மற்ற நாடுகளைவிட உயர்வாக உங்கள் நாட்டை கடவுள் நேசிக்க முடியாது. அது அப்படியே உண்மையாக இருந்தாலும், அதாவது- முன்பு கூறுவதைப்போல அவர் இஸ்ரேலியர்களின் பக்கம்தான் இருக்கிறார் என்றாலும், அவரை அவர்கள் கோபப்பட வைத்து இப்போது ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கடந்தோடிவிட்டன. தங்களுடைய நாட்டை அழிப்பதற்கு அவரைக் காரணமாக்கி, உலகம் முழுக்க தாங்கள் சிதறிக் கிடக்கும்படி செய்துவிட்டார்கள். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் உண்டாகி விடவில்லை. அவை செத்துப் போய்விட்டன. எங்கோ இங்குமங்குமாக இருக்கின்றன. அவ்வளவு தான். எந்தவொரு தனிப்பட்ட நாட்டிக்கும் கடவுள் முன்னுரிமை அளிப்பதில்லை. அதே நேரத்தில் ரோமில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்திற்குக் கீழே பாதுகாப்பு தேடும் அனைவரையும் அவர் அழைக்கிறார். அந்த தேவாலயத்தின் எல்லைகளைத் தாண்டி ஆறுதல் என்பது எங்கும் கிடைக்கவே கிடைக்காது.''
அந்த இத்தாலியர் இவ்வாறு கூறினார். ஆனால், அங்கு அமர்ந்திருந்த ஒரு ப்ராட்டஸ்டண்ட் பேராசிரியரின் முகம் வெளிறிப் போய்விட்டது. அவர் கத்தோலிக்க ஊழியரின் பக்கம் திரும்பி கிண்டலாகக் கேட்டார்.