
சுராவின் முன்னுரை
எம்.டி.வாசுதேவன் நாயர் (M.T.Vasudevan Nair) ‘குட்டியேடத்தி’ என்ற பெயரில் மலையாளத்தில் எழுதிய கதையை ‘குட்டி அக்கா’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
குட்டி அக்காவிற்கும், வாசு என்ற சிறுவனுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பையும், பாசத்தையும் மையமாகக் கொண்ட கதை இது.
வாசுவின் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் குட்டி அக்காவின் வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. எப்போதும் கண்ணீருடன் வாழும் அவள் ஒரு நாள் எல்லோரையும் அழச் செய்கிறாள். எப்படி?
நம் இதயங்களில் குட்டி அக்காவும் வாசுவும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
இந்தக் கதை 1971ஆம் ஆண்டில் ‘குட்டியேடத்தி’ (Kuttiyedathi) என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வந்தது. பி.என்.மேனன் இயக்கி பலரின் பாராட்டையும் அது பெற்றது.
உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook