
சமீபத்தில் டில்லியில் இருக்கும் என் நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எழுதியிருக் கிறான்: "நண்பனே... நீ ஒரு எழுத்தாளன் தானே! நீ ஒரு சாதாரண துப்பறியும் நாவலை எழுதக்கூடியவனாக இருந்தா லும். நீ ஒரு எழுத்தாளன்தான். நான் இப்போது கூறப்போகும் சம்பவம் உனக்கு எந்த விதத்திலாவது உதவுமா என்று பார். ஞாயிற்றுக்கிழமையாதலால் நான் வெறுமனே வராந்தாவில் உட்கார்ந்து தெருவில் போவோர் வருவோரைப் பார்த்தவாறு இருந்தேன். அப்போது ஒரு ஆள் திடீரென்று என்னையே உற்றுப் பார்த்தவாறு கேட்டைத் திறந்து என் வீட்டுமுன் இருக்கும் பூச்செடிகளைத் தாண்டி என்னை நோக்கி வந்தான்.
தோளில் ஒரு துணி மூட்டை தொங்கிக்கொண்டி ருக்கிறது. கையில் ஆட்டு இடையர்கள் பயன்படுத்தும் ஒரு மரக்கொம்பு. தலையில் ஒரு தலைப்பாகை. அதற்கு மேல் ஒரு கம்பளித் தொப்பி. இந்த உஷ்ண நேரத்தில் இப்படியொரு வேஷம்! அவன் அணிந்திருந்ததுகூட ஒரு கிழிந்துபோன கம்பளி ஆடைதான். காலில் இறுக்கிப் பிடிக்கிற மாதிரி பைஜாமா அணிந்திருந்தான். அந்த ஆளுக்கு முப்பது... முப்பத்தைந்து வயது இருக்கும். சிவந்த முகத்தில் சிறு தாடி இருந்தது. இமாலய மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய ஆள் என்பதைப் பார்த்தபோதே புரிந்துகொள்ள முடிந்தது. ஏதாவது உதவி எதிர்பார்த்து வந்திருக்க வேண்டும். அவன் சிறிது நேரம் என்முன் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். நானும் அவனையே உற்றுப் பார்த்தேன். அடுத்த நிமிடம் அவன் தலைதாழ்த்தி என்னை வணங்கினான். தொடர்ந்து சொன்னான்: “பொறுத்துக்கணும், ஸாப்... கொஞ்ச நேரம் நான் உங்கக்கிட்ட பேசணும்...''
“என்ன சொல்லு...'' நான் சொன்னேன்: “இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. நேரம் நிறைய இருக்கு. தாராளமா பேசு. பணம் மட்டும் கிடையாது!''
நான் இப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவன் கேட்டைத் திறந்து பாதைப் பக்கம் தன் கையிலிருந்த கொம்பைக் காட்டினான். அடுத்த நிமிடம்- கேட் வழியே முதலில் ஒரு ஆட்டுக்குட்டி வந்தது. அதைத் தொடர்ந்து சுமார் அறுபது... எழுபது செம்மறி ஆடுகள் ஒரு பெரிய கூட்டமாக உள்ளே நுழைந்தன. வளைந்த கொம்புகளையும், சிவப்பு நிற மூக்குகளையும், பூனைக் கண்களையும், உடல் முழுக்க அழுக்கடைந்துபோன பஞ்சு போன்ற மிருதுவான ரோமத்தையும் கொண்ட ஆடுகள்.
இவ்வளவு பெரிய ஆட்டுக் கூட்டத்தைப் பார்த்த நான் உண்மையிலேயே பதறிப் போனேன். திடுக்கிட்டுப் போய் அந்த ஆளிடம் சொன்னேன்: “என்ன இது! என்னோட பூச்செடிகளை எல்லாம் இந்த ஆடுகள் தின்னுறப் போகுது.''
அதற்கு அந்த ஆள் சொன்னான்: “பயப்படாதீங்க, ஸாப். நான் சொல்லாம இந்த ஆடுங்க ஒண்ணுமே பண்ணாது. வழியில் ஏதாவது வண்டிகள் இடிச்சிடும்னு...''
சில ஆடுகள் என்னையே உற்றுப் பார்ப்பதுபோல் எனக்குத் தோன்றியது. எது எப்படியோ... தங்களின் குட்டையான வால்களை ஆட்டியவாறு ஏதோ ஒரு அபய கேந்திரத்திற்குள் நுழைந்தது மாதிரி என் பூச்செடிகள் நிறைந்த தோட்டத்தில் பொறுமையுடன் அவை காத்துக்கிடந்தன.
அப்போது இடையன் தன் கையில் இருந்த துணி மூட்டையை அவிழ்த்தவாறு சொன்னான்: “ஸாப்... நான் இந்தப் பொருட்களோட சொந்தக்காரரை இந்தப் பட்டணத்துல இப்போ தேடிக்கிட்டு இருக்கேன்.... இதை அவங்க கையில ஒப்படைச்சா பெரிய அளவுள சன்மானம் கிடைக்கும்னு சொன்னாங்க ஸாப். இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? படிப்பு வாசனை இல்லாத இந்த ஏழைக்கு ரொம்பவும் உதவியா இருக்கும்.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook