நூறு ரூபாய் நோட்டு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9532
அதிகாலை வேளையில் குளித்து முடித்து, காப்பி குடித்து விட்டு, சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்ற விருந்தாளி, மதியம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வியர்வையில் நனைந்து களைப்புடன் திரும்பி வந்து தன்னை உபசரித்தவனுக்கு முன்னால் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டுச் சொன்னார்:
“மன்னிக்கணும். நான் பெரிய ஒரு தவறைச் செய்துவிட்டேன். படகுத் துறையில் உட்கார்ந்து கொண்டு நான் நீண்ட நேரம் சிந்தித்தேன். வாழ்க்கைக்கு ஒரு தத்துவ அறிவியலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சிந்தனைகள் இப்படியும் அப்படியுமாகப் பிணைந்து கிடக்கின்றன. மொத்தத்தில் - மிகவும் சிரமம். நீங்கள் என்னை நல்ல முகத்துடன் வரவேற்றீர்கள். பொருத்தமற்ற நேரத்தில் வந்த எனக்கு உணவு தந்தீர்கள். இரவில் படுப்பதற்கு சிறந்த இடத்தையும் தந்தீர்கள். நமக்கிடையில் ஒரு அறிமுகம் இல்லை. எனினும், நீங்கள் என்னை மரியாதைக்குரிய விருந்தாளியாக ஏற்றுக் கொண்டீர்கள். நான் உங்களுக்கு பெரிய ஒரு தவறைச் செய்து விட்டேன்.
“என்ன தவறு?''
“இந்த நூறு ரூபாய் நோட்டு. நேற்று பாதி இரவு தாண்டிய பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. நான் இந்த உலகத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே படுத் திருந்தேன். மனதில் அமைதியில்லை. விளக்கு எரிந்து கொண்டிருந் தது. நான் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். எதையாவது வாசிக்கலாம் என்று நினைத்தேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட் டிருந்த உங்களுடைய அலமாரி பூட்டப்படாமல் இருந்தது. நான் அதைத் திறந்தேன். ஏராளமான புத்தகங்கள் இருப்பதைப் பார்த் தேன். சுயசரிதைகள், பயண நினைவுகள், தத்துவ அறிவியல் நூல்கள், கவிதைகள், கதைகள்... அந்தக் கூட்டத்தில் பகவத் கீதை, பைபிள், குர்ஆன்... நான் அவற்றில் இருந்த குர்ஆனை எடுத்தேன். ஆங்கிலத் திலும் இந்தியிலும் இருந்தது. அழகான நூல். நான் சிறிது நேரம் அதன் முதல் பகுதியைப் படித்தேன். பின்னர் மடக்கி வைத்துவிட் டேன். நான் அதை என்னுடைய மார்பின்மீது வைத்துக் கொண்டு சிறிதுநேரம் படுத்திருந்தேன். குர்ஆன் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் வந்திருக்க வேண்டும். இது தெய்வத்தின் வார்த்தைகள் என்று கூறுகிறார்கள். மக்களில் எவ்வளவோ பேர் அப்படி நம்புகிறார்கள். ஜிப்ரில் என்ற தேவதூதன் அரேபியாவில் பிறந்த முஹம்மதிற்குக் கூறியவைதான் அது. முஹம்மதிற்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. நான் நினைத்துப் பார்த்தேன். தெய்வம் என்று ஒரு முதற்காரணம் இருக்கிறதா? பிரபஞ்சத்தையும் எல்லா வற்றையும் படைத்தது தெய்வம் என்று தானே கூறுகிறார்கள்! ஆனால், எல்லாம் தானே உண்டானவைதானே! நான் மீண் டும் குர்ஆனைத் திறந்தேன். நான் மொத்தத்தில்... என்ன கூறுவது?
எனக்கு ஒரு குழப்பம் போலத் தோன்றியது. குர்ஆனுக்கு உள்ளே நான்காக மடிக்கப்பட்ட ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டு இருக்கிறது! நீங்களும் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் இருக்கிறீர்கள் நான் நோட்டை எடுத்து என்னுடைய பாக்கெட்டில் வைத்துவிட்டு, குர்ஆனைத் திரும்பவும் அலமாரியில் வைத்தேன். பிறகு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். இன்று காலையில் குளித்து முடித்து, காப்பி தந்து நீங்கள் என்னை சந்தோஷத்துடன் வழியனுப்பி வைத்தீர்கள். வழிச் செலவிற்கு காசு இருக்கிறதா என்று நீங்கள் கேட்டீர்கள். இருக்கிறது என்று நான் சொன்னேன். என்னுடைய மனதில் குழப்பம் நிறைந்திருந்தது. நான் திருடன். நான் கிளம்பியபோது நீங்கள் சொன்னீர்கள்: "நம் எல்லாரையும் தெய்வம் காப்பாற்றட்டும்!' நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களுடைய இந்த நூறு ரூபாய் நோட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!''
என்னை உபசரித்தவர் நூறு ரூபாய் நோட்டைக் கையில் எடுத்து சிந்தனையில் மூழ்கியவாறு உட்கார்ந்துவிட்டார். பிறகு சொன்னார்:
“பரவாயில்லை. இந்த நோட்டில் ஒரு ஏமாற்றிய கதை இருக்கிறது. எது எப்படியோ - நீங்கள் சாப்பிட்டு முடித்து வெயில் குறைந்த பிறகு போனால் போதும். நான் இந்த நூறு ரூபாய் நோட்டை குர்ஆனுக்குள் வைத்திருக்கக்கூடாது. வாசித்துக் கொண்டி ருந்தபோது அடையாளத்திற்காக வைத்தேன். பிறகு மறந்து விட்டேன். நீங்கள் இதை எடுத்துக் கொண்டு போகாமல் திரும்பவும் வந்தது நல்லதுதான். இனி இதை வைத்திருக்க வேண்டாம். நான்தான் சொன்னேனே - ஒரு ஏமாற்றிய கதை இதில் இருக்கிறது.''
அவர் தீப்பெட்டியை உரசி நூறு ரூபாய் நோட்டின் ஒரு நுனியில் நெருப்பைப் பற்ற வைத்தார். அந்த ஜுவாலையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தார். எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். அவர் சொன்னார்: