
“மனிதன் எதற்காக ஏமாற்றுகிறான்? தெரிந்து கொண்டே ஏமாற்றுகிறான். கடவுளை நம்புபவனும் கடவுளை மறுப்பவனும் ஒரே மாதிரி தவறு செய்கிறார்கள். தீமைக்கு தண்டனை இருக்கிறது. அதை மனிதன் மறந்துவிடுகிறான். ஆனால் மறதிதானா? அறிந்து கொண்டே தவறு செய்கிறான். அந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்தபோது, நீங்கள் ஒரு தவறு செய்தீர்கள். இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை அடைய நினைக்கக் கூடாது. உங்களுடைய மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. இதயத்திற்குள் ஒரு கவலை. நீங்கள் அதைத் திரும்ப கொண்டு வந்து தந்து விட்டீர்கள். உங்களு டைய மனசாட்சி ஏன் சம்மதிக்கவில்லை? அந்த நூறு ரூபாய் நோட்டு எப்படி உண்டானது? தானே உண்டானதா? குர்ஆனுக்குள் எப்படி வந்தது? நான் சொன்னேனே... நான்தான் அதை வைத்தேன். நான் எப்படி உண்டானேன்? நீங்கள் எப்படி உண்டானீர்கள்? அந்த நோட்டு இங்கு எப்படி வந்தது என்பதைக் கூறுகிறேன். கடவுள் பக்தரான ஒரு மனிதன்... அவருக்கு இரண்டு மூன்று ஆண் பிள்ளை கள். பெரிய சொத்து இல்லை. சிரமப்பட்டு வாழலாம். வீடுதோறும் பத்திரிகைகளையும், மாத இதழ்களையும் கொண்டுபோய் கொடுப் பார். புத்தகங்களையும் அப்படித்தான். அவர் எனக்கு அறிமுகமா னார். நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர். அவர் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். மிகவும் சிரமப்பட்டுத்தான். மூத்த இரண்டு பிள்ளைகள் எம்.ஏ. வில் தேர்ச்சி பெற்றார்கள். அவர் களுக்கு வேலை கிடைத்தது. எல்லாரிலும் இளைய மகன் ப்ரீ டிகிரிக் குப் படிக்கும்போது, தந்தை காலமாகிவிட்டார். அந்த வகையில் அந்த இளைஞனின் படிப்பு நின்றுவிட்டது. ஆள் பார்ப்பதற்கு நல்ல குணங்களைக் கொண்டவன் என்பதைப் போலத் தோன்றியது. சிரித்துக் கொண்டேதான் பேசுவான். எல்லா நாட்களிலும் என்னைத் தேடி வருவான். தந்தையின் சிறப்புகளைப் பற்றி நான் பேசுவேன். பிள்ளைகளை நல்ல நிலையில் வளர்ப்பதற்கு முயற்சித்த தந்தை! அது ஞாபகத்தில் இருக்க வேண்டும். நல்ல நிலைமைக்கு வளர வேண்டும். நல்ல மனிதனாக வாழ வேண்டும். இளைஞன். கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. தவறுகளும் சரியானவை யும் இருக்கின்றன. தவறுகள் செய்யாமல் வாழவேண்டும். இப்படியே சிறிது காலம் கடந்தது. அவன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெற்றவனாக ஆனான். அரசியல் கட்சியில் சேர்ந்தான். என்னைத் தேடி வந்து அரசியல் விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு நாள் - என்னிடம் ஐந்து ரூபாய் கடனாகக் கேட்டான். நாள் அதைக் கொடுத்தேன். சொன்ன நாளில் திருப்பித் தந்தான். பிறகு பத்து ரூபாய்... இருபது ... ஐம்பது... எல்லாவற்றையும் மிகவும் சரியாக சொன்ன நாளில் திருப்பித் தந்தான். கடைசியாக நூறு ரூபாய் கடனாகக் கேட்டான். தோன்றும்போது பணத்தைக் எடுக்ககூடிய ஒரு நிலையில் நான் இல்லை. எனினும், நான் அதை உண்டாக்கிக் கொடுத்தேன். சொன்ன நாளில் தரவில்லை. அது மட்டுமல்ல - என்னை வந்து பார்ப்பதும் இல்லை. எப்போதாவது பார்த்தாலும், பார்த்தது மாதிரி அவன் காட்டிக் கொள்ளவதில்லை. நானோ மிகவும் சிரமப்பட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைத்த அவனுடைய தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். ஒரு நாள் மகனை நான் சாலையில் தடுத்தி நிறுத்திச் சொன்னேன்: "நீங்கள் திருப்பித் தருவதாகச் சொல்லி என்னிடம் நூறு ரூபாய் கடனாக வாங்கி யதை மறந்துடுங்க. நானும் மறந்து விடுகிறேன். ஷேக் ஹேண்ட்ஸ்...' அப்படியே நாங்கள் பிரிந்துவிட்டோம். இனிமேல்தான் சுவராசி யமே. மனிதன் எதற்கு இப்படி நடந்து கொள்கிறான்? சில மாதங்கள் கடந்த பிறகு, ஒரு இளைஞன் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, என்னிடமிருந்து ரசீது வாங்கிக் கொண்டு சென்றான். நான் பணத்தைக் கொடுக்கும்போது ரசீது வாங்கவில்லை. அந்த நூறு ரூபாய் நோட்டைத்தான் நீங்கள் குர்ஆனில் இருந்து எடுத் துக் கொண்டு போய், திருப்பிக் கொண்டு வந்து தந்திருக்கிறீர்கள்.''
“அதை ஏன் நெருப்பில் எரித்தீர்கள்?''
“உங்களுக்குப் புரியவில்லையா?'' - என்னை உபசரித்தவர் கேட்டார்.
“அது கள்ள நோட்டு! நூறு ரூபாய் நோட்டு!''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook