Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
யாத்ர
(மலையாள திரைப்படம்)
பாலு மகேந்திரா இயக்கிய படம். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவரும் அவர்தான். 1985ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
இதே படம் முதலில் தெலுங்கில்தான் உருவாக்கப்பட்டது. ‘நிரீக்ஷனா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட அப்படத்தையும் பாலுமகேந்திராதான் இயக்கினார். தெலுங்கு படம் 1982இல் திரைக்கு வந்தது. தெலுங்கில் பானுசந்தரும், அர்ச்சனாவும் இணைந்து நடித்தார்கள்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Life, and Nothing more…
(ஈரானிய திரைப்படம்)
ஈரானிய பட உலகில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த படங்கள் பலவற்றை இயக்கி உலக அளவில் தனக்கென்று ஒரு அருமையான பெயரைப் பெற்று வைத்திருப்பவர் Abbas Kiarostami. மக்களின் வாழ்க்கையை, மிகவும் யதார்த்தமாக, உயிரோட்டத்துடன் படமாக எடுக்கக் கூடிய அபார ஆற்றல் பெற்ற அவருக்கு உலகமெங்கும் கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் இயக்கிய மிகவும் வித்தியாசமான ஒரு படமிது. இது ஒரு கதை கொண்ட முழு நீள படமா அல்லது ஒரு ஆவணப் படமா என்று மனதில் சந்தேகப்படுகிற அளவிற்கு, ஒரு மாறுபட்ட கதைக் கருவை இதற்கென தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
எலிப்பத்தாயம்
(மலையாள திரைப்படம்)
இதற்கு மலையாளத்தில் ‘எலிப் பொறி’ என்று அர்த்தம். 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்று, விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது.
படத்தின் இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன். அவர் இயக்கிய படங்களிலேயே குறிப்பிடத்தக்க படமாக விமர்சகர்கள் கருதும் படம் இது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பாரன்
(ஈரானிய திரைப்படம்)
பாரசீக மொழியில் ‘பாரன்’ என்றால் ‘மழை’ என்று அர்த்தம். கவித்துவம் நிறைந்த இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் உலகத் தரம் வாய்ந்த பட வரிசையில் இடம் பிடிக்கக் கூடிய சில படங்களை இயக்கி, தனக்கென்று ஒரு அருமையான பெயரைப் பெற்றிருக்கும் Majid Majidi. படத்தின் கதையை எழுதியிருப்பவரும் அவர்தான்.