Category: சிறுகதைகள் Written by சுரா
பத்திரிகை அலுவலகத்தில் பாதி இரவு தாண்டி விட்டது. ஆட்கள் யாரும் இல்லாத மேஜைகளின் மேல் மின் விசிறிகள் வீசிக் கொண்டிருந்தன. கீழே சிதறிக் கிடந்த பேப்பர் துண்டுகள் இங்குமங்குமாய் காற்றில் அலைந்தன. செய்தித் துண்டுகள் தரையில் இலட்சியமே இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவை மேஜைக் கால்களை இறுக கட்டிப் பிடித்தன. சுவர்களில் ஏற முயற்சித்தன. அலமாரியின் அடியில் போய் ஒளிந்தன. மூலை முடுக்குகளில் காற்றில் விறைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தன.
Category: சிறுகதைகள் Written by சுரா
குமாரன் நாயரின் மரணத்தைப் பற்றி பலரும் பேசுவதை நான் கேட்டேன். தேநீர்க் கடைக்காரன் குஞ்ஞாமன் அதை ஒரு கொலை என்றான். வாசுக்குறுப்பின் கருத்தும் அதுதான். ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் அவர் கொலை செய்யப்பட்டு இறந்ததாகவே சொன்னார்கள்.
"நக்சலைட்டுகள்தான் அவனைக் கொலை செய்தது!"- வாசுக்குறுப்பு தன்னுடைய கண்களை சூரியனுக்கு நேராக அகல விரித்து வைத்துக் கொண்டு சொன்னார்.
Category: சிறுகதைகள் Written by சுரா
இன்று என் பெரிய மாமா என்னை அழைத்துச் சொன்னார்:
"டேய், கோபி. நாளைக்குத்தான் உஷாவோட நாள். சிஸேரியன். கட்டாயம் இரத்தம் வேணும். ஓ-நெகட்டிவ் இரத்தம் இருக்கிற ஆளுங்க யாரையும் உனக்குத் தெரியுமா?"
"பெரிய மாமா...." - நான் சொன்னேன்: "எனக்கு இருக்கிறது ஓ- நெகட்டிவ் இரத்தம்தானே?"
Category: சிறுகதைகள் Written by சுரா
வயநாட்டிலிருக்கும் 'க' எஸ்டேட்டிலிருந்து நிறைய காப்பி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்த லாரியுடன் குஞ்ஞிராமன் டிரைவர் வைத்திரி பஜாருக்கு வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. அவர் லாரியை நிறுத்திவிட்டு, அப்பு நாயரின் தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். அப்பு நாயரின் மனைவி டிரைவருக்கு ஒரு கோப்பை தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.