
ஒரே நேரத்தில் போராளியாகவும் எழுத்தாளராகவும் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் மனிதர் ந்குகி வா தியான்கோ. இவர் 1938-ஆம் ஆண்டில் கென்யாவில் உள்ள லிமுரு என்ற இடத்தில் பிறந்தவர். அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போர் முறைகளைக் கையாண்டிருக்கும் தியான்கோ, பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், சிறையில் இருக்கும்போதும் தொடர்ந்து எழுதி, சிறையில் தள்ளியவர்களைத் திகைக்க வைத்திருக்கிறார்.
கிகுயு மொழியின் ஆழத்தையும் அழகையும் தன்னுடைய எழுத்துகளில் கொண்டு வந்த தியான்கோவை கென்யாவின் மார்க்வெஸ் என்று கூறலாம்.
1964-ல் இவரின் முதல் புதினமான "Weep Not Child" பிரசுரமானது. 1967-ல் "A Grain of Wheat", 1977-ல் "Petals of Blood", 1980-ல் "Devil on the Cross" ஆகிய புதினங்கள் வெளிவந்திருக்கின்றன.
"Devil on the Cross" சிறையில் இருக்கும்போது ந்குகி எழுதிய நாவல். ஆப்ரிக்காவின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை தன் படைப்புகளின் மூலம் உலகத்திற்குக் காட்டிக்கொண்டிருக்கும் தியான்கோ, இப்போது இருப்பது அமெரிக்காவில்... நியூயார்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook