Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
அயாளும் ஞானும் தம்மில்
(மலையாள திரைப்படம்)
2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளை அள்ளிச் சென்ற திரைப்படம். கதைக் கரு, கதையைக் கூறிய முறை, திரைக்கதை, கலைஞர்களின் நடிப்புத் திறமை, தேர்ந்த தொழில் நுட்பம் - அனைத்திலும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு சிறப்புத் தன்மைகள் இந்த படத்தில் இருந்தன.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி கலர் ஆஃப் பேரடைஸ்
(ஈரானிய திரைப்படம்)
மாறுபட்ட திரைப்படங்களை இயக்கி, உலகமெங்கும் இருக்கும் திரைப்பட ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு மிகச் சிறந்த பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கும் புகழ் பெற்ற ஈரான் நாட்டு திரைப்பட இயக்குநர் Majid Majidi. அவர் இயக்கிய படங்களைப் பார்ப்பதற்கென்றே, நல்ல ரசனை கொண்ட கூட்டம் இருக்கிறது. அவர் இயக்கிய ஒரு அருமையான படமிது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
காழ்ச்ச
(மலையாள திரைப்படம்)
என்னை மிகவும் கவர்ந்த ஒரு மிகச் சிறந்த திரைப்படம் இது. மம்மூட்டி கதாநாயகனாக நடித்த இப்படம் 2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த சில வருடங்களாக அருமையான திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ப்ளெஸ்ஸி இயக்கிய படம் இது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
நாட் ஒன் லெஸ்
(சீன திரைப்படம்)
என் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப்படம்.
சீனாவிலிருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம், அதில் படிக்கும் மாணவர்கள், அங்கு வாழும் சாதாரண மக்கள், அவர்களின் வாழ்க்கைகள் - இவைதான் இப்படத்தின் மைய அம்சங்கள். இவற்றை வைத்துக் கொண்டு ஒரு உலகத் தரம் வாய்ந்த படமாக இதை இயக்கியிருக்கும் புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குநரான Zhang Yimou வை நாம் உயரத்தில் வைத்து கட்டாயம் கொண்டாட வேண்டும்.