Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
மான்சூன் வெட்டிங்
(இந்தி திரைப்படம்)
2001ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஒரு மிகச் சிறந்த படம். இயக்கம்: மீரா நாயர். பஞ்சாபைச் சேர்ந்த குடும்பத்திலிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு டில்லியில் திருமணம் நடைபெறுகிறது. அதைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் – இதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
இந்தியன் ருப்பி
(மலையாள திரைப்படம்)
2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். கதாநாயகி – ரீமா கல்லிங்கள். முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் திலகன். படத்தின் தயாரிப்பாளர்கள்: ப்ரித்வி ராஜ், சந்தோஷ் சிவன்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
The Impossible
(ஆங்கிலப் திரைப்படம்)
சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படம். 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உண்டான சுனாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மரியா, அவளுடைய கணவர் ஹென்ரி, அவர்களுடைய 13 வயது மகன் லூக்காஸ், ஏழரை வயது மகன் தாமஸ், 5 வயது மகன் சைமன் – இவர்கள்தான் படத்தில் வரும் குடும்ப உறுப்பினர்கள்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டானி
(மலையாள திரைப்படம்)
என் இதயத்தின் அடித் தளத்தில் உயிர்ப்புடன் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப் படம். படத்தின் கதாநாயகன் - மம்மூட்டி. பல மிகச் சிறந்த கலைத் தன்மை கொண்ட படங்களை இயக்கி, விருது பெற்றிருக்கும் டி.வி. சந்திரன் இயக்கிய காவியம் என்றே நான் இதை கூறுவேன்.