Lekha Books

A+ A A-

முதல் காதல் - Page 25

muthal kathal

16

டின்னருக்குப் பிறகு வழக்கமான குழுவினர் அந்தக் கட்டடத்தில் மீண்டும் வந்து கூடினர். இளைய இளவரசி அவர்களிடம் வந்தாள். அவர்கள் எல்லாரும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். நான் எந்தச் சமயத்திலும் மறக்க முடியாத முதல் சாயங்காலத்தைப்போல... சொல்லப் போனால் நிர்மாட்ஸ்கி கூட அவளைப் பார்ப்பதில் மிகவும் துடிப்புடன் இருந்தார்.மெய்டனோவ் இந்த முறை மற்ற எல்லாரும் வருவதற்கு முன்பே வந்து சேர்ந்திருந்தார். அவர் தன்னுடன் சில புதிய கவிதைகளைக் கொண்டு வந்திருந்தார். பொழுதுபோக்கு விளையாட்டு மீண்டும் ஆரம்பமானது- ஆனால்... வினோதமான குறும்புத் தனங்களோ, நகைச்சுவைத் துணுக்குகளோ, சத்தமோ இல்லாமல். நடோடித்தனமான எந்த விஷயங்களும் அங்கு இல்லாமலிருந்தன. ஜினைடா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு வித்தியாசமான வண்ணத்தை அளித்திருந்தாள். எனக்குத் தந்திருந்த புதிய பதவியையொட்டி நான் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். மற்ற விஷயங்களுடன், விளையாட்டில் ஈடுபட நினைக்கும் யாராக இருந்தாலும் அந்த நபர் தன்னுடைய கனவைக் கூற வேண்டும் என்ற நிபந்தனையை அவள் வைத்தாள். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை. ஒன்று- கனவுகள் மிகவும் சுவாரசியமே இல்லாமல் இருந்தன. (பைலோவ்ஸொரோவ் தன்னுடைய ஆட்டை புற்களில் மேயவிட, அதற்கு ஒரு மரத்தாலான தலை வந்து சேர்கிறது.) அல்லது- செயற்கையான, தானே கற்பனை பண்ணிக்கொண்ட கனவுகள். மெய்டனோவ் எங்களை ஒரு வழக்கமான காதல் கவிதையால் மகிழ்வித்தார். அவற்றில் கற்பனைகள் இருந்தன. யாழ் வாசிக்கும் தேவதைகள், பேசக்கூடிய மலர்கள், தூரத்திலிருந்து ஒலிக்கும் இசை... இப்படி. ஜினைடா அவரை முடிக்க விடவில்லை. "நாம் பாடல்களைக் கோர்க்க வேண்டுமென்றால்...” அவள் சொன்னாள்: "தாங்கள் ஏற்கெனவே மனதில் கற்பனை பண்ணி தயார் செய்து வைத்திருப்பவற்றை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.  அதைப் பற்றி போலியாக நடிக்கக் கூடாது.” முதலில் பேச எழுந்த நபர்- திரும்பவும் பைலோவ்ஸொரோவ்தான்.

அந்த இளம் குதிரை வீரன் மிகவும் குழம்பிப் போய்விட்டிருந்தான். "என்னால் எதுவும் செய்ய முடியாது!” அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுச் சொன்னான்.

"என்ன, முட்டாள்தனமாகப் பேசுகிறாய்!” ஜினைடா சொன்னாள்: "சரி... உதாரணத்திற்கு இப்படி கற்பனை பண்ணிப் பார். உனக்கு திருமணமாகிவிட்டது. எங்களிடம் நீ எப்படி உன் மனைவியை நடத்துவாய் என்பதைக் கூற வேண்டும். அவளை நீ பூட்டி வைத்து விடுவாயா?”

"ஆமாம்... நான் பூட்டித்தான் வைக்க வேண்டும்.”

"நீ அவளுடன் சேர்ந்து தங்குவாயா?”

"ஆமாம்... நான் நிச்சயம் அவளுடன் சேர்ந்து தங்கத்தான் வேண்டும்.”

"மிகவும் நல்லது... சரி... அவளுக்கு அந்த விஷயம் பிடிக்காமல் போய், அவள் உன்னை ஏமாற்றிவிட்டால்...?”

"நான் அவளைக் கொன்று விடுவேன்.”

"அவள் ஒருவேளை ஓடிவிட்டால்...?”

"நான் அவளைப் பிடித்து அதற்குப் பிறகு முன்பு சொன்னது மாதிரியே கொன்றுவிடுவேன்.”

"அப்படியா? உதாரணத்திற்கு நான்தான் உன் மனைவி என்று வைத்துக்கொள். அப்போது நீ என்ன செய்வாய்?”

பைலோவ்ஸொரோவ் ஒரு நிமிட நேரத்திற்கு அமைதியாக இருந்தான். "என்னை நானே கொன்றுகொள்வேன்.”

ஜினைடா சிரித்தாள். "அப்படியா? உன் கதை நீளமான கதையாக இல்லையே!”

அடுத்த முறை ஜினைடாவிற்கு வந்தது. அவள் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே யோசித்தாள். "சரி... கேளுங்க...” இறுதியில் அவள் சொன்னாள்: "நான் என்ன நினைத்தேன் என்றால்... உங்களின் மனங்களில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு கோடைகால இரவு வேளை... ஒரு அழகான பந்து... அந்தப் பந்தை அளித்தவள் ஒரு இளம் மகாராணி. எங்கு பார்த்தாலும் தங்கம், பளிங்கு, படிகம், பட்டு, விளக்குகள், வைரங்கள், மலர்கள், நறுமணம் கமழும் வாசனைத் திரவியங்கள். ஒவ்வொன்றுமே ஆடம்பரத்தைக் காட்டக் கூடியவை.”

"உனக்கு ஆடம்பரத்தைப் பிடிக்குமா?” லூஷின் இடையில் புகுந்து கேட்டார்.

"ஆடம்பரம் அழகானது...” அவள் சொன்னாள். "நான் அழகாக இருக்கும் எல்லாவற்றையும் விரும்புகிறேன்.”

"எதைவிட எது சிறந்தது?” அவர் கேட்டார்.

"அது ஏதோ புத்திசாலித்தனம் கொண்டது. அது எனக்குப் புரியவில்லை. நான் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் தலையிடாதீர்கள். ம்... அந்த பந்து அழகானது. மிகப் பெரிய விருந்தினர்களின் கூட்டம்... அவர்கள் அனைவரும் இளம் வயதினர், அழகானவர்கள், தைரியசாலிகள். எல்லாருமே அரசியிடம் காதல் உணர்வு கொண்டவர்கள்.”

"அந்த விருந்தாளிகள் மத்தியில் பெண்களே கிடையாதா?” மாலேவ்ஸ்கி கேட்டார்.

"இல்லை... அல்லது ஒரு நிமிடம் இரு... ஆமாம்... சிலர் இருந்தார்கள்...”

"அவர்கள் எல்லாரும் அழகே இல்லாதவர்களா?”

"இல்லை... நல்ல அழகான தோற்றத்தைக் கொண்டவர்களே.. ஆனால், அங்கிருந்த ஆண்கள் எல்லாருமே அரசிமீது காதல் கொண்டிருந்தார்கள். அவள் நல்ல உயரத்தைக் கொண்டவள். வசீகரமான தோற்றத்தைக் கொண்டவள்.... தன்னுடைய கருப்பு நிற கூந்தலில் தங்கத்தாலான ஒரு சிறிய குப்பியை அணிந்திருந்தாள்.”

நான் ஜினைடாவையே பார்த்தேன். அந்த நிமிடம் எங்கள் எல்லாரையும்விட அவள் மேலானவளாகவே எனக்குத் தோன்றினாள். அவள் அந்த அளவிற்கு பிரகாசமான அறிவைக் கொண்டவளாக இருந்தாள். அவளுடைய அழகான புருவங்களைப் பார்த்து, நானே வியந்து நின்றுவிட்டேன். நான் மனதிற்குள் நினைத்தேன்: "நீதான் அந்த மகாராணி.”

"அவர்கள் எல்லாரும் அவளையே சூழ்ந்து கொண்டிருந்தனர்.” ஜினைடா தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தாள்: "அவர்கள் எல்லாரும் அளவுக்கு அதிகமான புகழ்ச்சியுரைகளை அவள்மீது கணக்கே இல்லாமல் வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.”

"அவளுக்கு அப்படிப் புகழ்வது பிடித்திருந்ததா?” லூஷின் கேட்டார்.

"எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாத மனிதராக இருக்கிறார்! தொடர்ந்து இடையில் புகுந்து தலையிட்டுக் கொண்டே இருக்கிறார். யாருக்குத்தான் புகழ்ச்சியைப் பிடிக்காது.”

"இன்னொரு இறுதி கேள்வி...” மாலேவ்ஸ்கி கேட்டாள்: "அந்த அரசிக்கு ஒரு கணவர் இருக்கிறாரா?”

"நான் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. இல்லை....

அவளுக்கு எதற்கு கணவன் இருக்க வேண்டும்?”

"உண்மைதான்.” மாலேவ்ஸ்கி சொன்னார்: "அவளுக்கு எதற்கு கணவன் இருக்க வேண்டும்?”

"அமைதி...!” உரத்த குரலில் மெய்டனோவ் ஃப்ரெஞ்ச் மொழியில் கத்தினார். அவர் அந்த மொழியை மிகவும் மோசமாகப் பேசினார்.

"நண்பரே...!” ஜினைடா அவரைப் பார்த்து சொன்னாள்: "அந்த அரசி அவர்களுடைய பேச்சுகளைக் கேட்டாள். அவர்களுடைய இசையை காது கொடுத்துக் கேட்டாள். ஆனால், அந்த விருந்தாளிகளில் ஒருவரை மட்டும் அவள் பார்க்கவேயில்லை. மேலேயிருந்து கீழே வரை ஆறு சாளரங்கள் திறந்திருந்தன. தரையிலிருந்து மேற்கூரை வரை... அவற்றைத் தாண்டி மிகப் பெரிய நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஒரு இருண்ட வானம்....

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel