Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ரவியின் கதை

raviyin-kadhai

"என்னை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து 'லாக்'கைச் சுற்றி ஒரு நாள் பத்து முறை ஓட்டவில்லையா? சக் சக் சக் சக்... அன்ற நான் பயந்து உரத்த குரலில் சத்தம் எழுப்பியபோது என்னை 'பூனைக்குட்டி, தொந்தரவு தருபவளே, அறிவு இல்லாதவளே' என்றெல்லாம் அழைத்தது ஞாபகத்தில் இல்லையா? சொல்லுங்க ரவி...

ஞாபகத்தில் இல்லையா? பிறகு... ஒரு பள்ளிக்கூட நாளின் போது நான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன் அல்லவா? அதற்குப் பிறகு நாம் விக்டோரியா மெமோரியலிற்குள், கடலையைத் தின்று கொண்டே நடந்தோம்... ஞாபகத்தில் இல்லையா ரவி?"‘

தன்னுடைய கால்களுக்கு அரகில் வெறும் தரையில், அவிழ்த்துப் போடப்பட்ட கூந்தலுடன் அமர்ந்திருந்த பெண்ணின் கண்களையே பார்த்தவாறு, அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவளுடைய கண்கள் ஈரமாயின.

"உங்களுக்கு அவை எதுவும் ஞாபகத்திலேயே இல்லையா?" அவள் மீண்டும் கேட்டாள்: "ரவி, நீங்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டீர்களா என்ன?"

அவன் அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே தாழ்ந்த குரலில் சொன்னான்: "நான் ரவி இல்லை."

கதை ஆரம்பிக்கும்போது தந்தை இருந்தார். தாய் இருந்தாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தக்கூடிய இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்- ஒரு அண்ணனும் ஒரு தங்கையும், பொறாமைப்படக் வடிய அளவிற்கு பண வசதி கொண்ட ஒரு மலையாளி குடும்பம். கல்கத்தாவிலேயே மிகவும் நாகரீகமாக இருக்கும் ஒரு தெருவில், பத்தாம் எண்ணைக் கொண்ட வீடு, கார், வேலைக்காரர்கள், ட்யூஷன் மாஸ்டர்கள், நாகரீக உடைகள் அணிந்த விருந்தாளிகள். அத்த் வகையில் ஆர்ப்பாட்டமான ஒரு சூழல்... மெலிந்த கை கால்களையும் பெரிய கண்களையும் கொண்ட இளம்பெண் தன்னுடைய அண்ணனிடம் கூறினாள்:

"பேபி அண்ணா, என்னை கல்லூரிக்கு இந்தி திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்தச் செல்ல வேண்டும். அப்பாவும் அம்மாவும் வெளியே செல்லும் ஞாயிற்றுக்கிழமை அல்லவா? என்னால் இங்க தனியாக இருக்க முடியவில்லை."

பேபி கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் பின்னோக்கி வாரிக் கொண்டிருந்தான். அவன் ஒரு நிழல் வந்து விழுந்த தன்னுடைய மேலுதட்டையும், பிரகாசித்துக் கொண்டிருந்த தலைமுடியையும் பார்த்தவாறு முழுமையான மிடுக்குடன் சொன்னான்:

"முடியாது."

"அது நடக்காது. என்னை அழைத்துக் கொண்டு போகவில்லையென்றால், பிறகு எதற்காக இரண்டு டிக்கெட்களை வாங்க வேண்டும்? என்னால் இங்கு தனியாக இருக்க முடியாது. பேபி அண்ணா, நீங்க என்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்."

"என்னால் முடியாது."

இடையில் அவ்வப்போது அவளை அலட்டிக் கொண்டிருந்த அந்த எண்ணம், தான் யாருக்கும் தேவைப்படவில்லை என்ற அந்த நினைப்பு, பன்னிரண்டு வயது தாண்டிய  அந்த இளம் பெண்ணை திடீரென்று மீண்டும் பாதித்தது. அவள் தன்னுடைய அண்ணனை இறுக அணைத்துக் கொண்டு, அவன்மீது தன்னுடைய முகத்தை மறைத்து வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவன் பதைபதைப்பு அடைந்தான்.

"நீ ஏன் அழுகிறாய், லில்லி? நான் அழைத்தச் செல்லாமல் இருப்பேனா? உனக்கு இந்தி மொழி புரியாது என்று நினைத்துதான் வர வேண்டாம் என்று சொன்னேன். நீ வா. உனக்கு போராக இருக்காது என்றால், நீ வா. அழாதே லில்லி. லில்லி லில்லி... லில்லி... லில்லி..."

அவன் அவளடைய முகத்தைத் தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து, அவளைக் கிச்சுக்கிச்சு மூட்டியவாறு மீண்டும் சொன்னான்:

"லில்லி... லில்லி... லில்லி... லில்லி.."

அவள் சிரித்தாள்.

அவன் தன்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடக்வடிய மைதானத்தை நோக்கி நடந்தபோது, அவனைப் பற்றி எல்லாரிடமும், வீட்டில் இரப்பவர்களிடம் மட்டுமல்ல- வெளியே தெருவில் நடந்து செல்பவர்களிடம் கூட, எல்லாரிடமும் கூற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது: 'என்னுடைய அண்ணனைப் பாருங்கள்...  இந்த அளவிற்கு அருமையான ஒரு மனிதரை நீங்கள் பார்த்திருக்க முடியாது... இந்த அளவிற்கு இரக்க குணம் கொண்ட ஒரு ஆளை...'

 

கல்லூரியில் காட்டப்பட்ட 'பரதேசி' என்ற இந்தி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுடன் ரவியும் இருந்தான். பேபியின் நண்பன். தந்தையும் தாயும் தோட்டத்தில் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தாய் பேபியிடம் கேட்டாள்: "உடன் இருப்பது யார்?"

ரவி ஒரு சாதாரண காக்கித் துணியால் உண்டாக்கப்பட்டிருந்த பேண்ட்டை அணிந்திருந்தான். தன் தாய் அவனுடைய ஆடைகளைக் கூர்ந்து கவனிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதும், பேபியின் முகம் சிவந்தது. அவன் சொன்னான் "என்னுடைய நண்பன்."

"நான் பேபியின் வகுப்பில் படிக்கிறேன்." ரவி சிரித்துக் கொண்டே சொன்னான்: "என் பெயர் ரவீந்திரன். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்."

அவனுடைய தாய் அதற்குப் பிறகும் புன்னகைக்க வில்லை. பாதி மட்டுமே திறக்கப்பட்டிருந்த தன்னுடைய கண்களால் ரவியைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:

"அப்பா யாரு?"

"என் அப்பாவின் பெயர் டாக்டர் பிள்ளை."

"இங்கே ப்ராக்டீஸ் பண்ணி அதிக நாட்கள் ஆகிவிட்டனவா?"

"ஆமாம்... அப்பா போருக்குச் சென்றுவிட்டு, ஒரு கால் இல்லாமல் திரும்பி வந்தார். அதனால் ஹோமியோபதி கற்று, வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தார்."

ரவியின் உற்சாகம் நிறைந்த அந்தக் குரலைக் கேட்டோ என்னவோ, பேபியின் தந்தை தான் வாசித்துக் கொண்டிருந்த நாளிதழைச் சற்று தாழ்த்தி வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். ரவி அப்போது புன்னகையைத் தவழவிட்டான்.

"ஓ... ஹோமியோபதி... அப்படித்தானே?" பேபியின் தாய் கேட்டாள்: "ஹேமியோபதிமீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?"

"இருக்கிறது."

"நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதா?"

"பரவாயில்லை. ஒரு மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கிறது."

பேபியின் தாய் பேச்சை நிறுத்திவிட்டு, ஒரு உரோம சால்வையைப் பின்ன ஆரம்பித்தாள்.

"வா ரவி... அன்றைக்கு நான் சொன்ன கேமராவைக் காட்டுகிறேன்." பேசி சொன்னான். தன் தாயின் நடவடிக்கைகள் எப்போதும் போல அப்போதும் அவனைச் சற்று அவமானப்படச் செய்தன. ரவி பேபியின் தாயையும் தந்தையையும் பார்த்துச் சொன்னான்: "நான் வரட்டுமா?"

பேபியின் அறைக்குள் நுழைந்தவுடன் ரவி சொன்னான்: "அபாரமான அழகைக் கொண்ட வீடு! பணக்காரர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்ற விஷயம் எனக்கு இன்று புரிந்துவிட்டது."

அதைக்கேட்டதும் மீண்டும் பேபியின் முகம் சிவந்தது. அவன் எந்தவொரு காரணமும் இல்லாமல் அந்த அறையின் ஒழுங்கைக் குலைப்பதற்கு மயற்சித்தான். விரிக்கப்பட்டிருந்த அந்த படுக்கையில் கையால் அடித்து சில சுருக்கங்களை உண்டாக்கினான். மேஜையின் மீத வைக்கப்பட்டிருந்த சில தாள்களைச் சுருட்டி, தரையில் எறிந்தான். சாளரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நீல நிற திரைச்சீலைகளை அகற்றுவதற்கு பதிலாக அவற்றின் முனைகளை சிறிதும் ஒழுங்கு இல்லாமல் கட்டிவிட்டான். ரவி டஅவனுடைய முக வெளிப்பாடுகளையும் செயல்களையும் பார்த்து விழுநது விழுந்து சிரித்தான்.

"நான் வேலைக்காரனிடம் ஐஸ்க்ரீம் கொண்டு வரும்படி கூறட்டுமா?" வாசலில் வந்து நின்று கொண்டு லில்லி கேட்டாள்.

"ஹா... ஐஸ்க்ரீம்! இவை எல்லாவற்றுக்கும் மேலே ஐஸ்க்ரீம் வேறு இருக்கிறதா? இதுதான் சொர்க்கம், பேபி..." ரவி சொன்னான்:

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version