Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ரவியின் கதை - Page 2

raviyin-kadhai

"இது சொர்க்கம் என்று தோன்றுகிறது. இந்தக் கதவுக்கு அருகில் வெள்ளை நிற ஆடை அணிந்து வந்து நின்று கொண்டிருக்கும் சிறிய உருவம், தேவதையாக இரக்க வேண்டம். ஹா... ஹ... ஹா..."

பேபியும் சிரித்தான். "இங்கே வா லில்லி... உன்னுடைய வாயில் இருக்கும் கம்பியைக் காட்டு. இவளுடைய பல் வெளியே நீட்டிக் கொண்டு தெரியக்கூடாது என்பதற்காக டென்டிஸ்ட் கட்டியிருக்கும் பாலத்தைப் பார்க்க வேண்டாமா? வா..."

லில்லி தலையை ஆட்டினாள். அவளுக்குத் தன்னுடைய அண்ணன் மீது கோபம் உண்டானது.  தன்னுடைய வாழ்க்கையின் ம்கவும் மோசமான அந்த ரகசியத்தை இந்த இளைஞனிடம் காட்ட வேண்டுமா என்ன?

"பல் வெளியே தெரிந்தால் என்ன? பல் வெளியே தெரியும்படி இரப்பவர்களைத் தான் எனக்குப் பிடிக்கும். வாயில் பல் இல்லை என்ற சந்தேகம் உண்டாகாது அல்லவா- வெளியே எல்லா பற்களும் தெரிந்தால்? ஹ...ஹ...ஹ..."

பேபி தன்னுடைய தங்கையைப் பிடித்து அருகில் நிற்க வைத்து அவளைக் கிச்சுக்கிச்சு மூட்டியவாறு சொன்னான்: "லில்லி... லில்லி... லில்லி... லில்லி... எனக்கென்று இருக்கும் ஒரேயொரு தங்கை இவள். இவள் பார்ப்பதற்கு கொஞ்சம் மோசம்தான். அது உண்மையும்கூட ஆனால், இவளை எங்காவது யாராவது திரடிக் கொண்டு போனால், அவனை நான் சும்மா விட மாட்டேன்."

ரவி தலையைப் பின்னோக்கித் திருப்பி, உரத்த குரலில் சிரித்தான். அன்றிலிருந்து லில்லியின் வாழ்க்கைக் கதையில், மாநிறத்தையும் முகத்தில் பருவையும் சுருண்ட தலைமுடியையும் கொண்ட ரவி மக்கியமான ஒரு கதாபாத்திரமாக ஆனான்.

 

ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்குப் பிறகு, தந்தையும் தாயும் தூங்குவதற்கு மாடிக்குப் போய்விட்டால், லில்லி கதவைத் திறந்து வெளியே தோட்டத்திற்குச் செல்வாள். அங்கிரக்கும் மரங்களுக்குக் கீழே கவிழ்ந்து படுத்துக் கொண்டு பேபியும் ரவியும் பேசிக் கொண்டிருப்பார்கள். லில்லி அவர்களுக்கு அரகில் சென்று புல்லில் உட்காருவாள். வெயில் பலமாகப் பிரகாசிக்கும்போது, நிழலில் படுத்திருக்கும் அந்த இளைஞர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டே லில்லி கண்களை மூடுவாள். வாழ்க்கை எந்த அளவிற்கு அமைதியானதாகவும் அழகானதாகவும் இருக்கிறது! அப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

பேபியின் அன்னை சொன்னாள்: "லில்லி உயரமாக வளர்ந்து கொண்டிருக்கிறாள். கொஞ்சம் காலம் ஆனால், புடவை அணிய வேண்டியதிருக்கும்."

"ஓ... மம்மி!" லில்லி முணுமுணுத்தாள்.

"இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால், திரமணம் செய்ய வேண்டியதிருக்கும்."

"ஓ... மம்மி!"

 

சமையல்காரன் வேலைக்காரியிடம் சொன்னான்: "மம்மி.. மம்மி... பப்பா... கப்பா.. பத்து பதிமூணு வயசு ஆகியும் நேரடியாக விஷயத்தைக் கூறத் தெரியவில்லை. பொண்ணு கொஞ்சிக் கொஞ்சிதான் விஷய்ததையே சொல்லுது... அதைக் கேக்குறப்போ எனக்கு சிரிப்புத்தான் வருது."

சமையலறைக்கு நீர் வேண்டும் என்பதற்காக வந்த லில்லி, அந்த வார்த்தைகளைக் கேட்டு வாசலிலேயே அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள். தன் மீது சமையல்காரனுக்கு இந்த அளவிற்கு வெறுப்பு இருக்கிறது என்ற விஷயமே அவளுக்கு அன்றுதான் தெரிய வந்தது. அவள் உள்ளே நுழையாமல், அப்போதே ஒடி தன்னுடைய படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

லில்லி வேலைக்காரியிடம் கேட்டாள்: "லட்சுமி, உங்களுடைய பொண்ணுக்கு என்னுடைய வயது இருக்குமா?"

"ஆமாம்..."

"என்னுடைய உயரம் இருக்குமா?"

 

 

"சிவ... சிவ.. அதொண்ணும் இல்லை. உங்களுடைய உயரம் இல்லை... அவள் தடித்து போய், வெளுத்து, ஒரு மாதிரி இரப்பாள்."

சில நேரங்களில் லில்லி அறையில் வேறு யாரும் இல்லாத போது நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு தன்னுடைய உருவத்தை ஆராய்ந்து பார்ப்பாள். தன்னுடைய அழகு எங்கே இருக்கிறது, எங்குமே இல்லையா என்ன? உடலின் இந்த மெல்லிந்த தோற்றம் என்றுமே மாறாதா? அவள் தன்னுடைய நீளம் குறைவான கூந்தலைப் பிடித்து இழுத்து முகத்தில் பிறரைக் கவர்வதைப் போன்ற ஒரு அமைப்பை உண்டாக்க முயற்சிப்பாள். ஆனால், அது நடக்காது. அவள் முகத்தில் பவுடர் தேய்த்து, அதன் தவிட்டு நிறத்தைச் சற்று நேரம் வாசனை பிடிக்க முயற்சிப்பாள். வாயில் இருக்கும் கம்பியை எடுத்து நீக்கி, முகத்தைச் சாய்த்து வைத்துக் கொண்டு சிரிப்பாள்... தன்னுடைய அழகற்ற தோற்றம் தனக்கு எப்போதும் வெறுப்பை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றும்.

அவள் தன்னுடைய தாய் இருக்கும் அறைக்குச் சென்று கேட்பாள்.

"மம்மி, என்னுடைய தலை முடியை இனிமேல் வெட்ட வேண்டாம். நான் இரண்டாகப் பின்னிவிடப் போகிறேன்."

"அது உனக்கு கொஞ்சமும் பொருத்தமாக இருக்காது."

"அப்படியென்றால் எனக்கு எதுதான் பொருத்தமாக இருக்கும்? ஒரு குரங்கின் வாலா? நான் ஏன் இப்படி ஆனேன்?"

"எப்படி?"

"இப்படி பார்க்க சகிக்காத மாதிரி... பேபி அண்ணனுக்கு நிறம் இருக்கு. அழகு இருக்கு. எல்லாம் இருக்கு. எனக்கோ... ஒண்ணுமேயில்ல..."

அம்மா அமைதியாக உட்கார்ந்திருப்பாள். அவளடைய அன்னையின் கையின் ஒரு தீண்டலைக்கூட லில்லியால் அன்ற அனுபவிக்க முடியவில்லை. அதனால், தன்னுடைய வாழ்க்கையில் அன்பு என்ற ஒன்று இருக்கிறதா என்றுகூட பல நேரங்களில் அவள் சந்தேகப்பட்டாள்.

 

பேபிக்க டைஃபாய்ட் வந்து பாதித்தபோது, அந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்குச் சில மாற்றங்கள் உண்டாயின. அவளுடைய தாய் நிலைக் கண்ணாடியையும் அழகுப் பொருட்களையும் முழுமையாக மறந்துவிட்டாள். இடையில் அவ்வப்போது நர்ஸ்கள் அவளுடைய அன்னையிடம் கூறுவார்கள்.

"கொஞ்சம் போய் படுங்க. நீங்கள் இப்படி தூக்கத்தை இழந்து இங்கு எதற்காக இருக்க வேண்டும்? பேபியைப் பார்த்துக் கொள்வதற்கு நாங்கள் இல்லையா?"

சுய உணர்வு இல்லாமல், கண்களை மூடிப் படுத்திருந்த பேபியின் வெளிறிப் போன முகத்தைப் பார்த்துக் கொண்டே அவளுடைய தாய் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதாள். கூடத்தில் இருந்து கொண்டு தன் தாய், தன் தந்தையிடம் கூறிக் கொண்டிருந்த சில வார்த்தைகளை லில்லி கேட்டாள்.

"ஏன் என்னிடம் பொய் சொல்றீங்க?" அவளுடைய தாய், அவளின் தந்தையிடம் கேட்டாள்: "அவனுக்கு உடல்நிலை சரியாக ஆகாது. அப்படித்தானே? என் குழந்தை சாகப் போறான். அது எனக்குத் தெரியும்."

லில்லிக்கு தன்னுடைய உடலே செயலற்று விட்டதைப் போல தோன்றியது. இந்தச் செய்தியை எதற்காகத் தன்னிடம் யாரும் கூறவில்லை? அவள் பேபி படுத்திருந்த அறையின் வாசலுக்குப் போய் நின்றாள்.

"உள்ளே வரக்கூடாது." ஒரு நர்ஸ் சொன்னாள்.

"நான் பார்க்கணும்."

"உங்களை உள்ளே விடக்கூடாது என்று அப்பா சொல்லியிருக்கார்."

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version