ரவியின் கதை - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7535
வேலைக்காரியை வேலையை விட்டு அனுப்பியபோது, அவள் வேலைக்காரியாக ஆனாள். அவளுடைய கை நகங்களின் நுனி, முறிந்தது. இருண்டது. அவளுடைய உள்ளங்கைகள் முரட்டுத்தனமாக ஆயின. அவளுடைய அழகு குறைந்தது. எனினும், அவன் சொன்னான். ‘நீ பழைய புடவைகளைச் சுற்றிக் கொண்டு நடக்கும்போதுகூட, உனக்குள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் அந்த ஆணவத்தை என்னால் உணர முடிகிறது. நீ வெளியே கூறவில்லையென்றாலும், நீ ªன்னையும் இந்த வாழ்க்கையையும் வெறுக்கிறாய். எல்லா நிமிடங்களிலும் நான் அதைப் புரிந்து கொள்கிறேன்.’
லில்லி யாரும் பார்க்காமல் இருக்கும்போது அழுதாள். தனக்க யாருமே இல்லை என்று அவளுக்குப் பல நேரங்களிலும் தோன்றியது. ஆனால், அந்தத் திருமணமும் ஒரு தோல்வியாக இருக்கவில்லை. அவளுக்கு குழந்தைகள் உண்டானார்கள். அவர்கள் அந்த வீட்டில் சந்தோஷச் சிரிப்புகளை எழச் செய்தார்கள்.
முக்கியமான காரணங்கள் எதுவும் இல்லாமலே அந்த மனைவிக்கும் கணவனுக்குமிடையே வெறுப்பு வளர்ந்து வந்தது. முட்களும் நீருள்ள இலைகளும் உள்ள ஒரு கள்ளிச் செடியைப் போல, அவர்கள் அதன் வளர்ச்சியை கவனிக்காமல் இருப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால், அந்தச் செடி வளர்ந்து மரமாக ஆனது. அது அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவாக ஆனது. பந்தை உருட்டிவிட்டு விளையாடுவதற்கு மத்தியில் அல்லது ஒருவரோடொருவர் எதையாவது கூறி சிரிப்பதற்கு மத்தியில், அவர்களுடைய குழந்தைகள் அந்த மரத்தின் மூச்சு சத்தத்தைக் கேட்பார்கள். கிளைகளை கைகளைப் போல நீட்டிக் கொண்டு, அது மீண்டும் மீண்டும் வளர முயற்சிப்பதை அவர்கள் பார்ப்பார்கள். அவர்களுடைய குரல்கள் இறங்கும். சிரிப்புகள் மறையம்.
அப்படிப்பட்ட அந்த வீட்டிற்கு ஒரு நாள் லில்லியின் தாயும் தந்தையும் வந்திருந்தார்கள். அவர்களுடைய தலை முடியில் வெள்ளை நிறம் வந்து சேர்ந்திருந்தது. ஆனால், நடந்துகொள்ளும் முறைகளில் எந்தவெவரு மாறுதலும் உண்டாகியிருக்கவில்லை. முழுமையான இரக்கமற்ற மனதுடன் லில்லியின் தாய் உரையாடலக்கு மத்தியில் சொன்னாள்:
‘‘ரவி இருக்கானே! நம்முடைய ஹோமியோ டாக்டரின் மகன்... அவன் போன வருடம் இறந்துவிட்டான். மோட்டார் சைக்கிளில் ஏறி போய்க் கொண்டிருக்கிறான். ஒரு லாரி வந்து மோதிவிட்டது. இப்போது டாக்டர் தனி ஆளாகிவிட்டார்.’’
‘‘அம்மா, நீங்க இந்தப் பொய்யைக் கூறி இருக்க வேண்டியதில்லை.’’ லில்லி சொன்னாள். அவளுடைய குரலில் நடுக்கம் இருந்தது.
‘‘எது பொய்?’’
‘‘ரவி இறந்துவிட்டார் என்பது...’’
லில்லியின் தாய் அவளின் முகத்தையே பார்த்தாள். அடுத்த நிமிடம் வெளிறிப் போனாள். அவள் சொன்னாள். ‘‘நான் எவையெல்லாம் முழுமையாக இல்லாமல் போயிருக்கம் என்று நினைத்தேன். கொஞ்ச காலம் ஆகிவிட்டது அல்லவா? ஓ! லில்லி. நீ இப்போதும்...’’
‘‘ஆமாம்... இப்போதும் நான் ரவியைக் காதலிக்கிறேன். அதனால் தான் இந்தப் பொய்யைக் கூறியிருக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.’’
‘‘பொய் இல்லை, லில்லி. நாங்கள் போயிருந்தோம். பாவம்... பேபியின் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். பேபி இறந்து விட்டான். அவனும் இறந்துவிட்டான். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கம் எவ்வளவு நாட்கள் வாழ்க்கை இருக்கிறது என்று யாரால் கூற முடியும்?’’
லில்லிக்க முப்பத்தைந்து வயது ஆனபோதுதான் அவன் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்து சேர்ந்தான். அதுவும் திடீரென்று அவள் சாளரத்தின் கண்ணாடிகளைத் துடைப்பதற்கு மத்தியில் தலையை உயர்த்தி தெருவின் எதிர்ப்பக்கத்திலிருந்த கட்டிடத்தைப் பார்த்தாள். ஒரு சாளரத்தின் கதவில் சாய்ந்தவாறு தனக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் இளைஞன் யார்? லில்லி திடீரென்று அதிர்ச்சிடையந்து விட்டாள். ரவி? சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது? மாநிறம், பெரிய கண்கள், சுருண்ட தலை முடி, மெலிந்த உடல்... ‘நான் எந்தக் காலத்திலும் உன்னை விட்டுப் போக மாட்டேன்’ என்று ரவி கூறினான் அல்லவா? தான் எப்படி அந்த வார்த்தைகளை மறந்தோம்? ரவி இறந்துவிட்டான் என்பதை நம்பினோமா? ரவி...
‘ரவி...’ - அவள் சொன்னாள்: ‘ரவி...’
அவன் அவளையே பார்த்தான். பிறகு எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல், சாளரத்தை விட்டு உள்ளே போய் மறைந்துவிட்டான்.
லில்லி நீண்ட நேரம் அந்த சாளரத்தின் கதவைப் பிடித்துக் கொண்டே நின்றிருந்தாள். ரவிக்கு தன்னை யாரென்று தெரியவில்லையா என்ன? அப்படி இருந்தால்கூட, ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? நான் தடிமனாக ஆகிவிட்டிருக்கிறோம் தன்னுடைய முகத்தின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக ஆகிவிட்டிருக்கிறது.
அவள் படுக்கையறைக்குள் சென்று அங்கிருந்த ஒரு சிறிய கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஆராய்ந்து பார்த்தாள். கன்னங்களின் அசாதாரணமான சிவப்பு அவளை வெட்கம் கொள்ளச் செய்தது.
சில நாட்களுக்குப் பிறகு மதிய வேளையில் வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் அவன் அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். அவள் தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணாக இருக்கலாம். திருமணம் ஆனவளாக இருக்கலாம். ஆனால், அவள் தன்னுடைய முகத்தைப் பார்த்து ஏன் சிரித்தாள்? அவளைப் பார்ப்பதற்கு தான் வரலாமா என்று தான் கேட்டபோது, சைகையால் என்ன காரணத்திற்காக அவள் அனுமதி அளித்தாள்? அவள் உண்மையாகவே கெட்ட நடவடிக்கைகள் கொண்டவளாக இருக்க வேண்டும். அவனுடைய சிந்தனைகள் அந்த வாசலுக்கு அருகில் திடீரென்ற நின்றன.
‘‘என் ரவி...’’ அவள் வாசல் கதவைத் திறந்தவாறு அழைத்தாள்: ‘‘உள்ளே வாங்க.’’
திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டு இருட்டாக ஆக்கப்பட்டிருந்த அந்த அறையில் இருந்து கொண்டு அவன் அவளிடம் கேட்டான்: ‘‘என்ன... எதுவுமே பேசாம இருக்கிறாய்? நீ பரிதாபப்பட ஆரம்பித்து விட்டாயா?’’
அவள் படுக்கையின் இன்னொரு முனையில் நின்று கொண்டு தளர்ந்துபோன ஒரு குரலில் சொன்னாள்: ‘‘பரிதாபப்படுவதா? எந்தச் சமயத்திலும் இல்லை. ஆனால், எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது?
‘‘ஆச்சரியமா? அது எதற்கு உண்டாக வேண்டும்? நீ என்னை இங்கு வேறு என்ன காரணத்திற்காக அழைத்தாய்?’3
‘‘ரவி... அப்படிப் பேசாதீங்க.’’ அவள் சொன்னாள்: ‘‘நீங்கள் மிகவும் மாறிப்போய் விட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.’’
‘‘பார்... நான் மீண்டும் ஒரு முறை சொல்லட்டுமா? நான் ரவி இல்லை. என்னுடைய பெயர் ஹலீத். போன மாதம் வரை எனக்கு உன்னை தெரியவே தெரியாது. புரியுதா? இது என் ஒரு விளையாட்டு! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?’’
‘‘ஹலீத்தா? அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே கேட்டாள்: ‘‘என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் ரவிதான். என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.’’
‘‘முட்டாள்... உன்னை நான் எதற்க ஏமாற்ற வேண்டும்?’’