
சுராவின் முன்னுரை
கடந்த முப்பது வருடங்களாக என் இதயத்தில் மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky) என்ற இலக்கிய மாமேதைக்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறேன். அவரின் My Childhood, In the world, My universities ஆகிய நூல்களை 70-களின் பிற்பகுதியிலேயே படித்து அவற்றில் என்னை மறந்தவன் நான். அவர் எழுதிய ‘Mother’ புதினத்தை 27 வருடங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் இரவும், பகலுமாக ஊண், உறக்கம் மறந்து படித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
கார்க்கி எழுதிய ‘First Love’ என்ற புதினத்தை ‘முதல் காதல்’ (Mudhal Kadhal) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘முதல் காதல்’ 1923-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இது கதை அல்ல; கார்க்கி தன் முதல் காதல் அனுபவத்தைக் கூறியிருக்கிறார். மிகவும் ஆழமான ஒரு விஷயத்தை, தனக்கேயுரிய அபாரமான எழுத்துத் திறமையால் ஒரு காவியமாகவே கார்க்கி படைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் காதலித்த அந்தப் பெண்ணை எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் கூட மறக்க முடியாது.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook