Lekha Books

A+ A A-

ஒரு முட்டாள்தனமான காதல் கதை

Oru Muttalthanamana Kadhal Kathai

மீபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்ரெண்ட் சங்கரமேனனின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்த போது, நான் என்னுடைய பழைய நண்பன் சந்திரனைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவனின் முட்டாள்தனமான காதலைப் பற்றியும்தான்.

மாணவர்களின் தலைவனாக இருந்தபோது சங்கரமேனனின் மகள் ராதிகாவைக் காதலித்தவன்தான் இந்த சந்திரன்.

அந்தக் காதலைப் பற்றி அது இதுவென்று பேசி என்னை பயங்கரமாக போரடித்தவனாயிற்றே இந்தச் சந்திரன்!

அந்த மடத்தனமான காதலின் முடிவு எப்படி இருந்தது என்பது உலகத்திலேயே ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவர்களில் குறிப்பிடத்தக்க மனிதன் நான்.

இது எல்லாமே நடந்தது எத்தனையோ வருடங்களுக்கு முன்பு.

நானும் சந்திரனும் கொல்லம் எஸ்.என்.கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது சங்கரமேனன் கொல்லம் மாவட்டத்திற்குக் காவல்துறை சூப்ரெண்ட்டாக இருந்தார். எங்களின் ஹாஸ்டலுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெரிய கட்டிடம்தான் அவரின் வீடு.

ஓணவிடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்த சந்திரன் என்னைப் பார்த்துக் கேட்டான் : 'என் கண்கள்ல புதுசா பிரகாசம் ஏதாவது தெரியுதா?'

'அப்படின்னா?...'  - நான் கேட்டேன்.

'ஒரு புது வெளிச்சம் தெரியுதான்னு கேக்குறேன்...'

'சந்திரா, விஷயம் என்னன்னு சொல்லு!'

'என் கண்கள்ல உன்னால ஏதாவது வித்தியாசத்தைப் பார்க்க முடியுதா?'

'ஒரு வித்தியாசமும் தெரியலையே!'

'நல்லா உற்று பார்த்து சொல்லு.'

'ஓ... நல்லா பார்த்துத்தான் சொல்றேன். உன் கண்கள் எப்பவும் போல முட்டையா இருக்கு. ஆமா... ஏன் இப்படியெல்லாம் என்கிட்ட நீ கேள்வி கேக்குற?'

நான் இப்படிக் கேட்டதும் சந்திரன் நெளிந்தான் : 'டேய் நீ ஒத்தாலும் ஒத்துக்கிடலைன்னாலும் என் கண்கள்ல எப்பவும் இல்லாத ஒரு பிரகாசம் இப்போ இருக்குன்றது உண்மை. தெளிவு... அதாவது ஒளி. புதிய பிரகாசம்! காரணம் என்னன்னு தெரியுமா?'

'எனக்கென்னவோ அப்படி எந்த புது பிரகாசமும் உன் கண்கள்ல இருக்குறதா தெரியல. அது தெரிஞ்சாத்தானே என்னால அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்?'

'நான் சொல்றேன் - காரணம் என்னன்னு. நான் காதல்ன்ற புதிய உணர்வுல இப்போ ஆழமா சிக்கிக் கிடக்குறேன்...'

'சந்திரா, யார்டா உன்னோட காதலி? சொல்றதுக்கு தயக்கமா இருந்தா... வேண்டாம்...'

'தயக்கமும் இல்லை... ஒரு மண்ணும் இல்ல. சொல்லப் போனா உன்னைப் போல உள்ள ஒரு நெருங்கிய நண்பன்கிட்ட எல்லாத்தையும் மனம் திறந்து சொல்லணும்னுதான் நான் நினைக்கிறேன்.'

'சரி... ஆரம்பத்துல இருந்து சொல்லு...'

சந்திரன் சொன்னான்: 'என்னோட காதலி வேற யாருமில்ல.... நம்மோட இனப் பகைவனும் அரசாங்கத்துக்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற காக்கிச் சட்டை போட்ட போலீஸ் சூப்ரெண்ட்டுமான சங்கரமேனனோட மகள் ராதிகாதான். நான் சொல்றதைக் கேட்டு உனக்கு அதிர்ச்சியா இருக்கா?

நான் சொன்னேன் : 'அதிர்ச்ச்சியடையத்தான் செய்றேன். மரியாதைக்குரிய மாணவர்கள் தலைவனும் எதிர்காலத்துல இடதுசாரி அமைப்போட உயர்ந்த தூண்கள்ல ஒருவனுமான நீ ஒரு காவல் துறை அதிகாரியோட அதிர்ச்சியாத்தான் இருக்கு. சே... நீ செய்யிற காரியம் இயக்கத்துக்குச் செய்யிற துரோகமா உனக்குத் தெரியலையா? உன் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிற என்னைப் போல உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களைக் காட்டிக் கொடுக்குறதுதான் உன்னோட எண்ணமா?'

'தோழரே, ராமா! உன்னோட கேள்விகள் அர்த்தம் நிரம்பியவைதாம். கொள்கைன்னு வர்றப்போ.... ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ. ராதிகாவை நான் காதலிக்கிறேன்ற ஒரே ஒரு காரணத்துக்காக போலீஸ் எனக்கு பெருசா ஆயிடுச்சுன்னு நீ தப்பு கணக்கு போடாதே. அவளோட அப்பா, அந்த சங்கரமேனன் கேடு கெட்ட அரசாங்கத்தின் காலை வருடி பிழைக்கிற ஒரு ஆள்ன்றதை நான் மறக்கவே இல்ல... ஹாஸ்டல் அறை ஜன்னல் வழியா எஸ்.பி.யோட பங்களாவின் மாடியில நின்னுக்கிட்டு இருந்த அவளை எதேச்சையா பார்த்த உடனே, என் மனசுல வந்து தோணினது எது தெரியுமா? நம்முடைய அடிப்படை அரசியல் கொள்கைகள்தான்...'

'நிறுத்து... கொள்கைகள் ஒரு பக்கம் கிடக்கட்டும். ராதிகாவைப் பற்றி சொல்லு!’

'ராமா... அவள் நல்ல அழகி. வயசு பதினெட்டு இல்லாட்டி பத்தொன்பது இருக்கும். உடலழகை வர்ணிக்கணும்னா...'  சந்திரன் இலேசாக நிறுத்தினான்.

'பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த அவளை நீ எதேச்சையா பார்த்தே சரி... பிறகு?' - நான் கேட்டேன்.

'ராமா, நான் நம்முடைய அடிப்படை அரசியல் கொள்கைகளைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். ஒரு போலீஸ் அதிகாரியோட மகள் மீது காதல் தோணுறதுன்றது அவ்வளவு சரியான விஷயமான்னு ஒரு நிமிடம் நினைச்சுப் பார்த்தேன். இருந்தாலும் அவளோட உடலழகு என்னை...'

நான் இடையில் புகுந்து சொன்னேன் : 'சந்திரா, பால்கனியில நின்னுக்கிட்டு இருந்த அவளைப் பார்த்ததும் அவள் போலீஸ் சூப்ரெண்டின் மகள்னு எப்படி கண்டுபிடிச்சே?'

நான் இப்படிக் கேட்டதும் சந்திரனின் புருவங்கள் வளைந்தன. 'இது ஒரு தேவையில்லாத கேள்வி. நான் சொல்லிக்கிட்டு வந்த விஷயத்தை விட்டு வேற எங்கேயோ என்னைத் தேவையில்லாம கொண்டு போற கேள்வி இது. நான் சொல்றதைக் கேட்க உனக்கு விருப்பமில்லைன்னா சொல்லிடு. நான் இதுக்கு மேல சொல்லாம நிறுத்திக்கிறேன்....'

'அய்யோ... எனக்கு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கணும். ப்ளீஸ்... நீ சொல்லி வர்றதை ஒழுங்கா சொல்லு!'

'ராதிகாவோட உடலழகால கவரப்பட்ட நான் கையை ஆட்டி காட்டினேன். ஸ்டைலா நான் கையை ஆட்டினேன்னு வச்சுக்கயேன். அப்போ...'  - சந்திரன் நாடகத்தனமாக நிறுத்தினான்.

'அப்போ...?' - எல்லாவற்றையும் விவரமாக தெரிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

'அப்போ அவளும் நான் செய்ததற்குப் பதிலா நடந்தா. அதாவது - என்னை மாதிரியே அவளும் கையை ஆட்டினா. நான் வாய் விட்டு சிரிச்சுக்கிட்டே மீண்டும் கையை இப்படியும் அப்படியுமா ஆட்டினேன். அவளும் அதே மாதிரி கையை அசைச்சா. எனக்கு அப்போ ரொம்பவும் தைரியம் வந்திடுச்சு. என் உதடுகள்ல விரலை வச்சு ஒரு ஃப்ளையிங் கிஸ் நான் அனுப்பினேன்... ஒரு வெடி குண்டை கையால எறியிறதைப் போல அந்த கிஸ்ஸை அவளை நோக்கி செலுத்தினேன்.'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel