
தன்னுடைய எழுத்துகளால் ஆரம்ப காலத்திலேயே விவாதங்களை உண்டாக்கியவர் நேடின் கார்டிமர். அவருடைய முதல் நூலான "பட்ங் ப்ஹ்ண்ய்ஞ் க்ஹஹ்ள்" 1953-ஆம் ஆண்டு பிரசுரமானதுடன், ஒரு ஐரோப்பியனின் ஆப்ரிக்காவைப் பற்றிய சிந்தனைகள் சமூகத்தில் மாறின. ஆப்ரிக்காவின் சமீபகால வரலாற்றுக்கு ஒரு புதிய வடிவம் தருவதில் கார்டிமரின் படைப்புகளின் பங்கு அதிகம். வண்ணமயமான வெளிப்பாட்டுடன் கடுமையான அணுகு முறையை அவர் தன் எழுத்துகளில் கையாண்டார்.
அழுத்தப்பட்ட சமூகத்தின் அன்றாட பிரச்சினைகள்தான் கார்டிமரின் படைப்புலகம். ஆப்ரிக்காவில் எழுதி வாழவேண்டும் என்று அவர் எடுத்த தீர்மானம், அவர் விஷயங்களுடனும் சமூகத்துடனும் கொண்டிருந்த ஈடுபாட்டையும் பொறுப்பையும் காட்டுகிறது என்று கூறுவார்கள்.
கதை, நாவல் என்ற பிரிவுகளில் உட்படாத தன்னுடைய படைப்புகளை ஐரோப்பிய ரியலிசத்தின் சட்டத்திற்குள் நிறுத்த கார்டிமர் விரும்பினார். அவரின் மூன்று படைப்புகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
"அரசியல்தான் தென் ஆப்ரிக்காவின் குணம்" என்று நேடின் கார்டிமர் கூறுகிறார். பெண் விடுதலை போன்ற விஷயங்களில் ஈடுபடாததைக் கூறி, கார்டிமருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுண்டு. ஆனால், "மனிதத்துவம்தான் தன்னுடைய படைப்புகளின் ஆதார அம்சம்" என்று அவர்களுக்கு பதில் கூறினார் கார்டிமர்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook