Lekha Books

A+ A A-
10 Mar

ராணுவ அதிகாரி

ranuva athikari

சுராவின் முன்னுரை

ங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான டி.எச். லாரன்ஸ் (D.H. Lawrence) எழுதிய ‘The Prussian officer’ என்ற புதினத்தை ‘ராணுவ அதிகாரி’ (Raanuva Adhikari) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

மிகவும் வறுமை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர். இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட.

Read more: ராணுவ அதிகாரி

10 Mar

புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை

pugai vandi nilayathil valkai

சாம்பல் நிறத்தில் இருந்த புகையை வெளியே விட்டவாறு, ஒரு பாம்பைப்போல வளைந்து வளைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியை, மஞ்சள் நிறத்தைக் கொண்ட கோதுமை வயல்கள் நிறைந்த அந்தச் சமவெளிப் பகுதி விழுங்கியது. புகைவண்டி துப்பிய புகை அந்த வெப்பம் நிறைந்த வெளியில் கலந்தது. அதேபோன்று அந்த பரந்து விரிந்து கிடந்த சமவெளியில் நிறைந்திருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு புகைவண்டியின் கர்ண கொடூரமான சத்தமும் அந்தக் காற்றில் கரைந்து போனது. சமவெளிக்கு மத்தியில் அமைதியைக் கெடுப்பதைப் போல ஒரு சிறிய புகைவண்டி நிலையம் கண்களில் தெரிந்தது.

Read more: புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை

10 Mar

மாஷ்கா

masha

ரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சிறு குழந்தைகளைப்போல அவள் தன்னுடைய கால்களால் சேற்றையும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டிருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.

Read more: மாஷ்கா

09 Mar

தாலி

thali

சுராவின் முன்னுரை

பிரேம்சந்த் (Prem Chand) இந்தியில் எழுதிய ‘மங்கள்சூத்ரா’ (Mangalsutra) என்ற புதினத்தை ‘தாலி’ (Thaali) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். இதுதான் பிரேம்சந்த்தின் இறுதி நாவல். 1880-ஆம் ஆண்டில் காசிக்கு அருகிலுள்ள லமாஹி என்ற கிராமத்தில் பிறந்த பிரேம்சந்த்தின் இயற்பெயர் தனபத் ராய்.

Read more: தாலி

09 Mar

சிலையும் ராஜகுமாரியும்

silayum rajakumariyum

சுராவின் முன்னுரை

1945-ஆம் ஆண்டில் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தில் பிறந்த பி.பத்மராஜன் (P.Padmarajan) மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய சிறந்த புதினங்கள் பல திரைப்படங்களாக வடிவமெடுத்திருக்கின்றன. பத்மராஜனின் முதல் நாவலான ‘நட்சத்திரங்களே காவ’லுக்கு 1972-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பரதன் இயக்கிய முதல் படமான ‘பிரயாண’த்திற்கு திரைக்கதை எழுதியவர் பத்மராஜன்தான்.

Read more: சிலையும் ராஜகுமாரியும்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel