திலகன் என்ற மகாதிலகம் - Page 18
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6291
Page 18 of 23
இந்த அழகான கரையில் தருவாயா இனியொரு பிறவியை...?
சுரேந்திரநாத திலகன் 1935 – 2012
தமிழில்: சுரா
- பிறப்பு : டிசம்பர் 8, 1935. முண்டக்கயத்தில்.
- தந்தை : பாலப்புரத்து கேசவன்
- தாய் : தேவயானி
- கல்வி : சி.எம்.எஸ்.பள்ளி, முண்டக்கயம்
- எம்.டி.செமினாரி, கோட்டயம்
- எஸ்.என். கல்லூரி, கொல்லம்
- படிப்பு காலத்தில் எஸ்.எஃப். (மாணவர் இயக்கம்)-ல் சேர்ந்து பணியாற்றினார்.
- ஜாதியின் பெயரை எழுதாத காரணத்திற்காக, இன்டர்மீடியட் படிக்கும்போது, கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார் (1954).
- ‘அவன் கம்யூனிஸ்ட்... எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று தொழில் அதிபரிடம் காங்கிரஸ்காரரான தந்தை கூறியதைத் தொடர்ந்து, வேலை இல்லாதவராக ஆனார்.
- நாடகத்தில் நடித்ததைப் பற்றி கூறியதற்காக, பரிமாறப்பட்ட சாதத்திற்கு முன்னால் தன் அன்னையிடம் சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார் (1955).
- நடிப்புடன், நாடகங்களில் பாடகராகவும் ஆனார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் ‘முண்டக்கயம் திலகன்’ புரட்சிப் பாடல்கள் பாடினார்.
- சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு மனைவிகள்.
- ராணுவத்தில் சேர்ந்தார் (1961). இரண்டு வருடங்கள் கழித்து, தானே அங்கிருந்து வந்துவிட்டார்.
- நாடக நடிப்பிற்கு மத்தியில் காதலித்த முதல் மனைவியுடன்
- 12 வருடங்கள் வாழ்ந்தார். மூன்று பிள்ளைகள் – ஷாஜி, ஷம்மி, ஷோபி.
- இரண்டாவது மனைவி மூலம் மூன்று பிள்ளைகள் – ஷிபு, சோனியா, சோஃபியா.
- 32 வருடங்கள் நாடகத் துறையில் வரலாறு படைத்தார். நடித்த முக்கிய நாடக குழுக்கள்: கெ.பி.எ.ஸி., காளிதாஸ கலா கேந்திரம், கோட்டயம் நேஷனல், சங்ஙனாசேரியில் மெட்ரோ, சாலக்குடி சாரதி, சங்ஙனாசேரி கீதா, இடப்பள்ளி பி.ஜெ. தியேட்டர்ஸ்.
- நாடகத் துறையில் 18 நாடக குழுக்களில் முக்கியமான நடிகராக இருந்தார். பத்தாயிரம் மேடைகள். 43 நாடகங்களை இயக்கினார்.
- 1996, 2005, 2007 வருடங்களில் இயக்குனர், நடிகர் என்ற நிலைகளில் மாநில நாடக விருது.
- சங்கீத நாடக அகாடெமி ஃபெல்லோஷிப்.
- அவசர காலத்தின்போது ‘காளராத்ரி’ என்ற எதிர்க்கட்சி நாடகத்துடன் அரங்கத்தில்.
- தெய்வத்தையும், மதத்தையும் மறுத்து ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று எப்போதும் பெருமையுடன் கூறிக் கொண்டு திரிந்தார்.
- பி.ஜெ.ஆண்டனியுடன் கொண்டிருந்த நட்பு, படவுலகிற்குள் கொண்டு வந்தது.
- முதல் திரைப்படம் : பெரியார் (1973)
- முதல் திருப்பம் : யவனிக (1981)
- சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது : ருதுபேதம் (1988)
- சிறப்பு தேசிய விருது : ஏகாந்தம் (2007)
- இரண்டாவது சிறந்த நடிகருக்கான மாநில விருது : யவனிக (1982), யாத்ர (1985), பஞ்சாக்னி (1986), தனியாவர்த்தனம் (1987), முக்தி (1988), காற்றத்தொரு பெண் பூவு (1998)
- சிறந்த நடிகருக்கான மாநில விருது : பெருந்தச்சன் (1990), கமனம், சந்தானகோபாலம் (1994)
- சிறப்பு ஜூரி மாநில விருது (1989)
- பத்மஸ்ரீ (2008)
- கடுமையான ‘லாபி’ காரணமாக ‘பெருந்தச்சன்’ படத்தின் நடிப்பிற்காக தேசிய விருது கிடைக்காமற் போனவுடன், ஜூரி மற்றும் ‘அக்னிபத்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற அபிதாப் பச்சனையும் எதிர்த்து அறிக்கை... பேட்டிகள்... (1990)
- ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்திலிருந்து வெளியேற்றபட்ட காரணத்திற்காக, நெடுமுடி வேணுவிற்கு எதிராக கோபமான வார்த்தைகள்...
- படவுலகில் மைல் கற்கள் : பெருந்தச்சன், கிரீடம், ஸ்ஃபடிகம், யவனிக, மூணாம் பக்கம், யாத்ர, நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள், ருதுபேதம், நாடோடிக் காற்று, தனியாவர்த்தனம், கமனம், கண்ணெழுதி பொட்டும் தொட்டு, சந்தானகோபாலம், ஏகாந்தம், சந்தேசம், கிலுக்கம், குடும்ப புராணம், நரசிம்ஹம், இந்தியன் ருப்பி, உஸ்தாத் ஹோட்டல்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டு, மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்விற்கு திரும்பி வந்த சம்பவம்... (2000)
- பிடித்த ரிங் டோன் : ஈ மனோஹர தீரத்து தருமோ... இனியொரு ஜன்மம் கூடி...
- திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்களின் அமைப்பான, ‘ஃபெப்கா’வின் ஆணைப்படி, ‘கிறிஸ்டியன் ப்ரதர்ஸ்’ திரைப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். வினயனின் ‘யக்ஷியும் ஞானும்’ என்ற படத்தில் நடித்ததுதான் காரணம். (2010)
- தன் மீது கட்டுப்பாடு விதித்ததற்காக ஃபெப்காவிற்கும் சூப்பர் ஸ்டார்களுக்கும் எதிராக வாதங்கள்...
- ‘சினிமாவை வழிபடும் என்னை வெளியேற்றுவதற்கு சில சூப்பர் ஸ்டார்கள் முயற்சிக்கிறார்கள். படவுலகை நாசம் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்’ என்ற அறிக்கை.
- ‘அறுபது வயது கொண்ட நடிகர்கள் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, பதினெட்டு வயது கொண்ட புதிய நடிகர்களை ரசிகர்கள் கூச்சல் போட்டு அழிக்க பார்க்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு.
- ‘அம்மா’ என்ற நடிகர் – நடிகைகளின் அமைப்பு விளக்கம் கேட்டு, வரவழைத்திருந்த கூட்டத்தில் ‘இடைவேளை’ பாபுவைப் பார்த்து கேள்வி கேட்டதற்காக, சித்திக் வெளியேற்றுகிறார் (2010). ‘அம்மா’விலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- ‘ஃபெப்கா’வின் கட்டளைப்படி ஸோஹன் இயக்கிய ‘டாம் 999’ என்ற படத்திலிருந்து நீக்கப்பட்டார். 7 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கிடைத்தது.
- திரைப் படங்கள் எதுவும் இல்லாததால், நாடகத் துறைக்கு மீண்டும் வந்தார். நாடகம் : ஆலப்புழை அக்ஷர ஜ்வாலாவின் ‘இதோ தெய்வங்களுடெ நாடு.’ கதாபாத்திரம் : சூர்யநாராயணன் (2010)
- ‘அம்மா’ அமைப்பின் விலக்கி வைக்கலுக்கு மத்தியிலும் அலி அக்பரின் ‘அச்சன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
- நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்ட தீர்மானத்தை ‘அம்மா’ திரும்பப் பெற்றது (2011).
- ரஞ்சித்தின் ‘இந்தியன் ருப்பி’ திரைப் படத்தின் மூலம் மீண்டும் பட வாய்ப்பு...
- ஒற்றப்பாலத்தில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் (2012 ஆகஸ்ட் 19)
- திருசூர் ஜூபிலி மருத்துவமனையில் சிகிச்சை (ஆகஸ்ட் 21, 2012)
- திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் ஒருமாத காலம் வென்டிலேட்டரில். சிகிச்சைக்குச் செலவான 10.58 இலட்சம் ரூபாய்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.
- இறுதியில் அழைத்த வார்த்தை : ‘அம்மா...’
- மரணம் : 2012 செப்டெம்பர் 25.