முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 36
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77972
351
பகல் என்பது
தூங்குவதற்காக இருப்பது.
இரவு என்பது
விழித்திருப்பதற்காகவும்
பிறரை விழிக்கச் செய்வதற்காகவும்
இருப்பது.
***
352
மற்ற நாடுகளைப் பற்றி
ஒவ்வொருவரும்
எந்த அளவிற்கு
தவறான கருத்துக்களைக்
கொண்டிருக்கிறார்கள்
என்பதை
நேரடியாக கண்டு கொள்வதற்காக
இருப்பதுதான்
பயணம்.
***
353
கடந்த காலத்துடன்
எவையெல்லாம் இருந்தனவோ,
அவையெல்லாம்
போய் விட்டன.
மிகச் சிறந்த விஷயங்கள்
இனிமேல்தான்
வர வேண்டும்.
***
354
நான்
நடிப்பதை விரும்புகிறேன்.
அது
வாழ்க்கையை விட
அதிகமான
உண்மைத் தன்மையுடன்
இருக்கிறது.
***
355
பயணம்
ஒரு மனிதனை
மிகவும் அடக்கமானவனாக
ஆக்குகிறது.
அவன்
இந்த அகன்ற உலகத்தில்
எவ்வளவு சிறிய இடத்தை
வகித்துக் கொண்டிருக்கிறான்
என்பதை
அது புரிய வைக்கிறது.
***
356
அழகாக இருப்பவர்கள்
எப்போதும்
நல்லவர்களாக இருப்பார்கள்
என்று கூறுவதற்கில்லை.
ஆனால்-
நல்லவர்கள்
எப்போதும்
அழகானவர்களாகவே இருப்பார்கள்.
***
357
வாழ்க்கை என்பது
ஒரு சொர்க்கம்.
நீ
அதில் தேவதை.
***
358
நான் எந்தச் சமயத்திலும்
வயதானவனாக
இருக்க மாட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில்
வயதானது என்பது
என்னை விட
பதினைந்து வருடங்கள் அதிகமானது.
***
359
ஒரு மனிதனிடம்
குறிப்பிடத்தக்க அம்சம்
என்பது
அவன் எதை அடைந்திருக்கிறானோ
அதுவல்ல.
எதை அடைய வேண்டும்
என்று நினைக்கிறானோ
அதுதான்.
***
360
உன் வாழ்க்கையில்
உயர்வு, தாழ்வு
எதுவுமே
இல்லையென்றால்
நீ
இறந்து விட்டாய்
என்று அர்த்தம்.
***