
உன்னுடைய கடிதங்களையே
எப்போதும் திரும்பத் திரும்ப
டித்துக் கொண்டிருக்காதே.
***
யார் எப்போதும் வாழ
ஆரம்பித்துக் கொண்டே
இருக்கிறார்களோ,
அவர்கள் மோசமாகத்தான்
வாழ்வார்கள்.
***
எல்லா மாமிசங்களும்
புல்லைப் போன்றவையே.
அங்கிருக்கும் நல்லவை,
வயலில் இருக்கும் மலர்களுக்கு
நிகரானவை.
***
மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து
சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.
ஆனால், அவன் கொடுத்த
தொல்லைகள் அதிகம்.
***
உருண்டு கொண்டே இருக்கும்
கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,
அதே போல ஊசலாடும்
இதயம் பாசத்தைச் சேகரிக்காது.
***
இடையில் இருக்கும் ஒரு வேலி,
நட்பை பசுமையாக வைத்திருக்கும்.
***
பணிப்பெண்கள் கட்டாயம்
மென்மையானவர்களாகவும்,
பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,
பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்
அவர்கள் இருக்க வேண்டும்.
***
அனுசரித்துச் செல்வதில்தான்
உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
***
முதல் காதலில் இருக்கும்
மாயத் தன்மையே நம்முடைய
அறியாமைதான்.
அது எந்தச் சமயத்திலும்
முடிவடைந்து விடும்.
***
தங்களுடைய தலைகளை
பழைய இயற்கையின்
டியில் வைத்து தூங்குவதற்கு
நிகராக எந்தவொரு மனிதனும்
அவ்வளவு அமைதியாக
தூங்க முடியாது.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook