
நல்ல குணங்கள் இல்லாத அழகு,
வாசனை இல்லாத மலரைப் போன்றது.
***
மிகப் பெரிய
ஆடம்பரங்களைத் தேடுவதை விட,
ஒரு நல்ல பெயரைத்
தேடுவது உயர்ந்தது.
***
சட்டம் என்பது
வலிமையானவர்களைக்
காப்பாற்றுவதற்கே
இருக்கிறது.
***
வாழ்வு என்பது
ஒரு புனிதமான ஜூவாலை.
நாம் நமக்குள் இருக்கும்
ஒரு கண்ணுக்குத் தெரியாத
சூரியனைக் கொண்டு
வாழ்கிறோம்.
***
நீதிபதிகள் சட்டத்திற்குக்
கீழ்ப்படிய வேண்டும்.
அதே நேரத்தில்
அதை செயல்படுத்தவும்
வேண்டும்.
***
இயற்கை சுற்றுகிறது.
அதனால், மனிதகுலம்
முன்னேறுகிறது.
***
பிரச்சாரம் செய்யாதே.
ஏனென்றால், நீ ஏதாவது
கூறியாக வேண்டும்.
ஆனால், கூறுவதற்கு
சில விஷயங்கள் இருக்கின்றன.
***
ஒரு முட்டாள் பணத்தை
உண்டாக்கலாம்.
ஆனால், அதை எப்படி
செலவு செய்வது என்பதற்கு
ஒரு புத்திசாலி மனிதன்
வேண்டும்.
***
உன்னுடைய நம்பிக்கையை
பணத்தின் மீது வைக்காதே.
ஆனால், உன்னுடைய பணத்தை
நம்பிக்கையின் மீது வை.
***
எவன் குழந்தையை
கையால் தூக்குகிறானோ,
அவன் தாயை இதயத்தால்
எடுக்கிறான்.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook