
நீ நண்பனாக ஆக்கப்படும்போது,
அதைப் பற்றி ஞாபகத்தில் வைத்திரு.
நீ நண்பர்களைச் சேர்க்கும்போது,
அதை மறந்து விடு.
***
மிகவும் சிறியதற்கும்
மிகவும் பெரியதற்கும்
இடையில் இருக்கும்
ஸ்டேஷனுக்குப் பெயர்தான் -
சந்தோஷம்!
***
ஒரு தடவை
பேசுவதற்கு முன்னால்
இரண்டு தடவைகள் கேள்.
***
ஒரு வீடு இல்லாத
ஒரு மனிதன்
ஒரு கூடு இல்லாத
பறவையைப் போன்றவன்.
***
ஒரு செயல் நம்பிக்கையுடன்
செய்யப்படவில்லையென்றால்,
இதயம் நொறுங்கி விடும்.
***
சந்தோஷமற்று இருப்பவர்களிடம்,
நேரம் எவ்வளவு மெதுவாக
நகர்ந்து கொண்டிருக்கிறது!
***
தன்னால் அவன்
காயம்பட்டுக் கொள்ளலாமே தவிர,
அவனால் காயம்பட்டவர்கள்
யாரும் இல்லை.
***
எந்த இதயம்
பெருந்தன்மை கொண்டதாகவும்
அன்பு மயமானதாகவும் இருக்கிறதோ,
அது பெரும்பாலும் கடவுளை ஒத்தது.
***
தாவி குதிப்பதற்கு முன்னால்,
கூர்ந்து பார்.
***
ஏதாவது பயனுள்ள
ஒன்றைச் செய்வதற்காக
கிடைக்கும் நேரத்திற்குப்
பெயர்தான் ஓய்வு.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook