
இன்று என்னை
நன்றாக வாழ விடுங்கள்.
நாளை என்ன என்று
யாருக்குமே தெரியாது.
***
மனிதனின்
மிகப் பெரிய எதிரியே
மனிதன்தான்.
***
பிறருக்கு எதிராக இருக்கும்
நம் மனங்களைத் துடைத்து,
பிரகாசமாக வைத்துக் கொள்வது
நல்லது.
***
தனக்கு நினைவுச் சின்னம் என்ற
ஒன்று தேவையே இல்லை
என்று யார் நினைக்கிறார்களோ,
அவர்கள்தான் அதற்குத் தகுதியானவர்கள்.
***
அதிர்ஷ்டமற்ற தன்மையைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி
யாருக்கு இல்லாமலிருக்கிறதோ,
அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை
ஏற்றுக் கொள்வதற்கும்
தகுதி இல்லாதவர்களே.
***
எல்லா மனிதர்களிடமும்
மிகவும் சுதந்திரத் தன்மையுடன்
இருக்கக் கூடிய மனம் எதுவோ,
அதுதான் புனிதத் தன்மை
கொண்ட மனம்.
***
குழந்தைகள்
இருப்பதால் மட்டுமே,
நல்ல அன்னைமார்கள்
உண்டாகி விட முடியாது.
***
ஒரு நோய்வாய்ப்பட்ட
மனிதனுக்கு பொறுமைதான்
மிகச் சிறந்த மருந்து.
***
எவன் தன்னுடைய நாட்டை
மிகச் சிறந்த நாடாக
ஆக்க வேண்டும்
என்று முயற்சிக்கின்றானோ,
அவன்தான் தன் நாட்டின் மீது
அதிகமான அன்பு வைத்திருப்பவன்.
***
தன்னுடைய கருத்தை
எந்தச் சமயத்திலும்
மாற்றிக் கொள்ளாமல் இருப்பவன்,
தேங்கிக் கிடக்கும் நீருக்கு ஒப்பானவன்.
மனதின் தவளைகள்
அதில் பெருகிக் கொண்டிருக்கும்.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook