முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 27
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77972
261
சாதாரணமாக தோன்றும்
மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகிறார்.
அவர்களை அதிகமாக
அவர் படைத்திருப்பதற்கு
அதுதான் காரணம்.
***
262
உணர்ச்சிவசப்படுவதிலிருந்து
உன்னை நீ காத்துக் கொள்.
கடவுள் உன்னை பாவத்திலிருந்து
விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
***
263
உலகில் ஏராளமான
விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
ஏனென்றால், பாராட்டுவதை விட,
விமர்சனம் செய்வது என்பது
மிகவும் எளிதானது.
***
264
உண்மையான வாக்குறுதி சிறியதாக இருக்கும்.
ஆனால், செயல்படுவது பெரிதாக இருக்கும்.
பொய்யான வாக்குறுதி மிகப் பெரியதாக இருக்கும்.
செயல்படுவதோ சிறிய அளவில் கூட இருக்காது.
***
265
எங்களை சந்தோஷமானவர்களாகவும்,
நல்லவர்களாகவும் ஆக்கு!
***
266
நல்ல உடல் நலம்,
நல்ல அறிவு -
இவை இரண்டுமே
மிகப் பெரிய கொடுப்பினைகள்.
***
267
சுயநலம் கொண்ட இதயம்
வேதனைப்படுகிறது என்றால்,
அதற்கு அது தகுதியானதே.
***
268
ஒரு புனிதமான செயல்
ஒரு கெட்ட ஆன்மாவை
மறைத்து வைக்காது.
***
269
சந்தோஷத்தைப் பின்பற்றி
கவலையை பயணிக்கச் செய்வது
சொர்க்கத்தின் கட்டளை.
***
270
உலக சந்தோஷங்களில்
யார் குளிக்கிறார்களோ,
அவர்கள் கண்ணீர்
நிறைந்த உலகத்தில் நீந்தித்தான்
ஆக வேண்டும்.
***