முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 28
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77971
271
எந்த இடத்தில் சட்டம் தண்டனை
அளிக்காமல் இருக்கிறதோ,
அந்த இடத்தில்
அது செயல்பட முடியாது.
***
272
யார் வாழ ஆரம்பிக்கிறானோ,
அவன் மரணமடையவும்
ஆரம்பிக்கிறான்.
***
273
நேர்மையான முறையில் வாழ்.
நேர்மையான முறையில்
இறப்பாய்.
***
274
மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்
இருப்பதைப் பார்ப்பதில்
ஆச்சரியப்படுவதற்கு
எதுவுமே இல்லை.
அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்
அவமானப்பட்டு நிற்கிறார்கள்
என்பதைப் பார்க்காமல்
இருக்கிறோமே என்பது
பெரும்பாலும் ஆச்சரியப்படக்
கூடிய விஷயமே.
***
275
நூல்களை படிப்பதை விட,
மனிதர்களைப் படிப்பது
மிகவும் அவசியம்.
***
276
காயத்தை அனுப்பி வைத்த
கடவுள் மருந்தையும்
அனுப்பி வைப்பார்.
***
277
நிறைய பேசி, மனதில் இருக்கும்
எல்லா சந்தேகங்களையும்
இல்லாமற் செய்வதை விட,
அமைதியாக இருந்து கொண்டு
ஒரு முட்டாளைப் போல
நினைத்துக் கொண்டிருப்பது
எவ்வளவோ மேலானது.
***
278
பணத்தின் மீது கொண்ட ஆசையும்,
கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்
எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.
***
279
சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,
இதயத்திலும் அன்னை என்பதுதான்
கடவுளின் பெயர்.
***
280
அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.
ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.
***