கௌரி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7445
கௌரி பாரம்பரிம் மிக்க வசதியான குடும்பத்தில் நன்கு கவனம் செலுத்தி வளர்க்கப்பட்ட அழகான பெண். அவளுடைய கணவர் பரேஷ் தன்னுடைய சொந்த முயற்சிகளால் தன்னுடைய சூழ்நிலைகளை அமைத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்.
அவர் ஏழையாக இருந்த காலத்தில், கௌரியின் பெற்றோர்கள், தங்களின் மகளை வீட்டிற்குள்ளே வைத்திருந்தார்கள். வெளியே போவதற்கே அவளை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவள் ஒன்றும் சிறுமி இல்லையே! இறுதியில் அவள் தன் கணவரின் வீட்டிற்குச் சென்று விட்டாள். தனக்குப் பொருத்தமானவள் அவள் என்பதை எந்த சமயத்திலும் பரேஷ்நினைத்துப் பார்த்ததே இல்லை. மேற்கிலிருந்த ஒரு சிறிய நகரத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவருக்கென்று நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லை. அவருடைய சிந்தனை எப்போதும் மனைவியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே கூட அவர் வீட்டிற்கு வந்துவிடுவார். அவர் ஏன் திடீரென்று வீட்டிற்கு வருகிறார் என்பதை ஆரம்பத்தில் கௌரி புரிந்து கொள்ளாமல் இருந்தாள். சில நேரங்களில் காரணமே இல்லாமல் அவர் வேலைக்காரர்களில் ஒருவரைவேலையை விட்டு போகும்படி கூறுவார். யாரும் நீண்ட நாட்களுக்கு அவருக்கு ஏற்றபடி இருக்க முடியாது. யாராவதொரு வேலைக்காரனை நல்லவன் என்று கௌரி கூறிவிட்டால் போதும், அது ஒன்று போதும் அவனை அவர் வேலையை விட்டு வெளியே அனுப்புவதற்கு. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கௌரி அதற்காக பெரிதும் கவலைப்பட்டாள். ஆனால் அவளுடைய கவலை அவளின் கணவரின் நடத்தையை மேலும் அதிகமாக்கியது.
இறுதியில், அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாத பரேஷ், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வேலைக்காரியிடம் கௌரியைப் பற்றி கேள்விகள் கேட்டு விசாரிக்க ஆரம்பித்தார். அந்த விஷயங்கள் அனைத்தும் அவருடைய மனைவியின் காதுகளில் போய் சேர்ந்தது. அவள் சில சொற்களையே பேசக் கூடியவள். அந்த அவமதிப்பான செயல்கள் காயம்பட்ட சிங்கத்தைப்போல அவளுடைய நன்னடத்தையைச் சோதித்துப் பார்த்தன. அந்த பைத்தியக்காரத்தனமான சந்தேகம் ஒரு பகைவனின் வாளைப் போல அவர்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தது. தன்னுடைய மனதிற்குள் இருக்கும் எண்ணத்தை தன் மனைவி தெரிந்து கொண்டு விட்டாள் என்று எப்போது நினைத்தாரோ, அதற்குப் பிறகு பரேஷ், கௌரியிடம் நேருக்கு நேராகப் பேசுவதைத் தவிர்த்தார். அவருடைய மனைவி அதை அமைதியான வெறுப்பாக நினைத்து நடந்து கொள்ள, அவருடைய பொறாமைத் தீ மேலும் அதிகமானது.
திருமண வாழ்க்கையின் சந்தோஷம் எதுவும் இல்லாமல், குழந்தை பாக்கியம் இல்லாத கௌரி மத விஷயங்களில் ஈடுபட்டு ஆறுதல் தேட ஆரம்பித்தாள். மத சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி வழிபாட்டு மன்றத்தில் சொற்பொழிவு ஆற்றும் வயது குறைந்த பரமானந்த சுவாமிகளுக்கு அவள் கடிதம் எழுதினாள். அதில் அவரைத் தன்னுடைய ஆன்மிக குரு என்று அவள் குறிப்பிட்டிருந்தாள். பகவத் கீதையைப் பற்றி தனக்கு விளக்கும்படி அவள் அதில் கூறியிருந்தாள். அவளுடைய இதயத்தில் இருந்து வீணாகிக் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளியேற்றிய அவள் அதை தன் குருவின் கால் பாதத்தில் சமர்ப்பித்தாள்.
பரமானந்தாவின் புனிதத்தைப் பற்றி யாரிடமும் எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் அவரை வழிபட்டார்கள். அவருக்கு எதிராக எந்தவித சந்தேகக் கேள்விகளையும் கேட்க முடியாது என்பதால், பரேஷின் பொறாமை அவருடைய இதயத்திற்குள் ஒரு மறைமுக புற்று நோயைப் போல ஒளிந்திருந்தது.
ஒருநாள் சில அற்பமான சூழ்நிலைகள் விஷத்தை அதிகமாக்கியது. பரேஷ் தன் மனைவியிடம் பரமானந்தாவை ஒரு கயவன் என்று சொன்னார். அவர் சொன்னார்: ‘‘துறவி என்று சொல்லிக் கொண்டு திரியும் அந்தக் கொக்கிடம் உனக்கு காதல் இல்லை என்று சத்தியம் பண்ணி சொல்ல முடியுமா?’’
கௌரி பாம்பைப் போல சீறி எழுந்தாள். அவருடைய சந்தேகப் புத்தியால் வெறி பிடித்தவளைப் போல ஆன அவள் கிண்டலும் கசப்பும் கலந்த குரலில் சொன்னாள்: ‘‘அப்படி நான் இருந்தால் என்ன?’’ அடுத்த நிமிடம் பரேஷ் வெளியேறி கதவை அவள் முகத்தில் வேகமாக படும்படி அறைந்தார்.
இறுதியாக நடந்த அந்த மோதலில் சூடான கௌரி எப்படியோ கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.
பரமானந்தா தன்னுடைய தனி அறையில் மதிய வேளையின் அமைதியில் இருந்துகொண்டு நூலில் இருந்த வார்த்தைகளை வாய்விட்டுக் கூறிக் கொண்டிருந்தார். மேகங்களே இல்லாத வானத்தில் திடீரென்று மின்னல் அடிப்பதைப்போல, கௌரி அவர் படித்துக் கொண்டிருப்பதற்கு இடையில் புகுந்தாள்.
‘‘நீ இங்கேயா?’’ - ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.
‘‘என்னைக் காப்பாற்றுங்க குருவே...’’ - அவள் சொன்னாள்: ‘‘என் இல்லற வாழ்க்கையின் அவமானங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுங்க. உங்க பாதங்களில் என்னை நானே ஒப்படைக்க என்னை அனுமதியுங்கள்.’’
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பரமானந்தா கௌரியை வீட்டிற்குத் திரும்பிப் போகும்படி கூறினார். மூடப்பட்ட நூலில் இருந்த கயிறை மீண்டும் அவர் தொடுவாரா என்று ஆச்சரியம் எனக்கு உண்டானது.
வீட்டிற்குத் திரும்பி வந்து, கதவு திறந்திருப்பதைப் பார்த்த பரேஷ் கேட்டார். ‘‘இங்கே யார் வந்தது?’’
‘‘யாரும் இல்ல...’’ அவருடைய மனைவி பதில் சொன்னாள்: ‘‘என்னுடைய குருவின் வீட்டிற்கு நான் போயிருந்தேன்.’’
‘‘எதற்கு?’’- பரேஷ் கேட்டார். அதைக் கேட்கும்போது வெளிறியும் சிவந்தும் அவர் இருந்தார்.
‘‘நான் போகணும்னு நினைச்சேன்.’’
அந்த நாளில் இருந்து வீட்டைக் கண்காணிப்பதற்கு ஒரு ஆளை பரேஷ் நியமித்தார். அவருடைய நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்தன. அவருடைய பொறாமை பற்றிய கதை நகரம் முழுக்க எல்லோராலும் பேசப்பட்டது.
தன்னுடைய சிஷ்யை மீது தினந்தோறும் குவிக்கப்படும் வெட்கப்படத்தக்க அவமானங்கள் பற்றிய செய்திகள் பரமானந்தாவின் ஆன்மிக தியானங்களை மிகவும் தொந்தரவு செய்தன. உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவர் நினைத்தார். அதே நேரத்தில் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைக் கைவிடவும் அவர் தயாராக இல்லை. அந்த பயங்கரமான பகல்களையும் இரவுகளையும் அந்த அப்பிராணித் துறவி எப்படிக் கழித்தார் என்று யாரால் சொல்ல முடியும்?
கடைசியில் ஒருநாள் சிறைக் கைதியைப்போல இருந்த கௌரிக்கு ஒரு கடிதம் வந்தது. ‘என் குழந்தையே...’- கடிதம் இப்படி ஓடியது: ‘ஏராளமான புனிதப் பெண்கள் தங்களை முழுமையாக கடவுளிடம் அர்ப்பணித்துக் கொள்வதற்காக உலக வாழ்க்கையைத் துறந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.