முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 32
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77971
311
சந்தோஷம் என்பது
கொண்டாட்டத்திற்கு நிகரானது.
இரண்டு மோசமான நாட்களுக்கு
நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.
***
312
மிகவும் மென்மையான சட்டங்கள்
எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.
மிகவும் கடுமையான சட்டங்கள்
எந்த காலத்திலும்
நிறைவேற்றப்படுவதில்லை.
***
313
அவன் மிகவும் கடுமையான
இதயத்தைக் கொண்டவன்.
அது 'மே' மாதத்தில் காதலிக்காது.
***
314
வானம் நீல நிறத்தில் இல்லை
என்பதை ஞாபகத்தில்
வைத்துக் கொள்.
ஏனென்றால்,
கண் பார்வை இல்லாதவர்கள்
அதை பார்க்க முடியாது.
***
315
அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்
ஒரு மனிதனின் நேரத்தை
முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.
எந்தவித வேலையையும் விட,
அது அவனை அவனுடைய
முதலாளிக்கு முன்னால் கேவலமாக
நிற்க வைக்கிறது.
***
316
வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.
அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.
***
317
உண்மையிலேயே
வெளிச்சம் என்பது
மிகவும் இனிமையானது.
கண்களால்
சூரியனைப் பார்ப்பது
என்பது எவ்வளவு அருமையான
ஒரு விஷயம்!
***
318
நாம் கவலையில் இருக்கும்போது,
முன்பு சந்தோஷமாக
இருந்த நாட்களை
அசைபோட்டுப் பார்ப்பதை விட
துயரங்கள் தரக் கூடிய
விஷயம் வேறொன்றில்லை.
***
319
எந்தச் சமயத்திலும்
நாம் சந்தித்திராத
மோசமான சம்பவங்கள்தான்
தாங்கிக் கொள்வதற்கு
மிகவும் கஷ்டமானவையாக
இருக்கும்.
***
320
அன்பான சொற்கள்
நாக்கைக் களைப்படையச்
செய்யாது.
***