நெருப்பு
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சுராவின் முன்னுரை
மலையாளத்தில் பேசப்படும் நவீன எழுத்தாளர்களில் ஒருவர் இ.ஹரிகுமார் (E.Harikumar). அவர் எழுதிய பல கதைகளை நான் படித்திருக்கிறேன். அவரது படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற என் எண்ணத்தின் விளைவே இந்த நூல். வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத பல புதிர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஆன்மிகத்துடன் கலந்து நாவலாக எழுதியிருக்கிறார் ஹரிகுமார். மூத்த மலையாளக் கவிஞரான இடசேரி கோவிந்தன் நாயரின் மகனான ஹரிகுமாரும் மிகச் சிறந்த எழுத்தாளரே. அவரின் கதை எழுதும் திறமையை இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணரலாம். காலம் என்ற புதிரால் விளைந்த மாற்றத்தைப் பல வருடங்களுக்கு முன்பு நான் ‘ரிப் வேன் விங்கிள்’ என்ற ஆங்கிலக் கதையில் படித்திருக்கிறேன்.
அந்த விஷயத்தை ஹரிகுமார் தன் கதையில் கையாண்டிருப்பதைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். உண்மையிலேயே காலம் என்பது புதிரானதுதான். அதில் சிறிதளவுகூட சந்தேகமே இல்லை.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி
அன்புடன்,
சுரா (Sura)