முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 31
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77971
301
எந்த இடத்திற்கு
தான் சென்று கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாமல்
ஒரு மனிதன் இருக்கும்போது,
எந்த காற்றுமே
சரியான காற்றாக இருக்காது.
***
302
எப்போதும் சாப்பிட்டால்
பலசாலியாக ஆகலாம்
என்பதை எதிர் பார்.
அதேபோல
எப்போதும் படிப்பதன் மூலம்
அறிவாளியாக ஆகலாம்
என்பதையும் எதிர் பார்.
***
303
தன்னுடைய இதயத்தில்
ஒரு புழுவை
வைத்திருக்கக் கூடிய ஆப்பிள்,
மிகவும் அழகானதாகவே இருந்தாலும்,
அதைப் பற்றி சிறப்பித்துக்
கூறுவதற்கு என்ன இருக்கிறது?
***
304
ஒரு பெண்ணின்
காதலை நோக்கிச் செல்லும்
அனைத்துப் பாதைகளிலும்
பரிதாபத்திற்குரியது
நேராக செல்லும் பாதைதான்.
***
305
திருமணம் என்பது
ஒரு லாட்டரியைப் போன்றது.
அதில் ஆண்கள் தங்களின்
சுதந்திரத்தை இழக்கிறார்கள்.
பெண்கள் தங்களின்
சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
***
306
ஒரு மனிதன் தன் தந்தையையும்,
தாயையும் விட்டு நீங்களாம்.
தொடர்ந்து அவன் தன் மனைவியிடம்
அடைக்கலம் ஆகிறான்.
***
307
கடவுளின் பெருமையை
சொர்க்கங்கள் கூறுகின்றன.
எல்லா செயல்களும்
வனின் கை வேலைகளே.
***
308
உறையில் ஒரு அம்பு இருப்பதை விட,
இரண்டு அம்புகள் இருப்பது நல்லதுதான்.
மூன்று அம்புகள் இருப்பது அதை விட நல்லது.
***
309
உடல் நலம், சந்தோஷம் -
இரண்டும் ஒன்றையொன்று
சார்ந்திருக்கிறது.
***
310
ஒரு சோம்பேறி மனிதன்
மூச்சை விடலாம்.
ஆனால், அவன் வாழவில்லை.
***