முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 34
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77972
331
ஒரு காலத்தில்
நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,
அடுத்த காலத்தில் வணங்கப்படும்
துறவிகளாக ஆவார்கள்.
***
332
அமைதியானவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் பூமியை ஆட்சி
செய்வார்கள்.
***
333
அமைதியான மனதுடன் இருப்பதே
தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.
நான் எப்போதும் வாழ்வது இல்லை.
ஏனென்றால், என்னுடைய நாட்கள்
தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.
***
334
மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.
சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.
கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.
***
335
திருமணத்தின் கனியாக
பெரும்பாலும் காதல் இருக்கிறது.
ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.
***
336
என்னுடைய
பக்கத்து வீட்டுக்காரரின்
தோட்டத்தில்
ஒரு மைல் தூரம்
நடக்காதவரையில்,
நான் அவரை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
***
337
தான் அன்பு செலுத்தப்படுவதை விட,
எவன் எல்லோரிடமும்
எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,
அவன் தன் மீது அதிகமான
அன்பை வைத்திருக்கிறான்.
***
338
அமைதியைப் பரப்பும்
நல்ல செய்தியைக்
கொண்டு வரும்
அவனுடைய கால் பாதங்கள்
மலைகளின் மீது நடக்கும்போது
எவ்வளவு அழகாக இருக்கின்றன!
***
339
ஒரு பவுண்ட்
துக்கத்திற்கு நிகரானது
ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.
***
340
பாத்திரம் கல்லில் மோதினாலும்,
கல் பாத்திரத்தில் மோதினாலும் -
பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.
***