முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 29
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77972
281
அமைதி இல்லாத மனதிற்கு
இசை மருந்தாக இருக்கிறது.
***
282
ஒவ்வொரு மனிதனும்
கேட்கும் விஷயத்தில்
மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.
பேசும் விஷயத்தில்
மிகவும் மெதுவானவனாக
இருக்க வேண்டும்.
***
283
தாவரங்கள் சூறாவளியை
எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,
ஓக் மரங்கள் கீழே விழலாம்.
***
284
உன்னை விட
புத்திசாலித்தனமான
அறிவுரையை உனக்கு யாரும்
தர முடியாது.
***
285
ஏராளமான சொத்துக்களை
தன்னிடம் வைத்துக் கொண்டு
அதை அனுபவிக்காமல்
இருக்கும் மனிதன்,
பொன்னை ஏற்றிக் கொண்டு
செல்லும் கழுதை,
செடிகளைச் சாப்பிடுவதைப்
போன்றவன்.
***
286
ஒரு மனிதன் இறக்கும் வரையில்,
அவன் முழுமையாக பிறக்கவில்லை
என்றுதான் அர்த்தம்.
***
287
அமைதியான மனம்தான்
நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.
***
288
இறந்து போன துறவிகளை பாராட்டுவது,
உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -
இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.
***
289
எல்லா விஷயங்களுடனும்
அனுசரித்துச் செல்வது -
இதுதான் வாழ்க்கையின்
பொன்னான சட்டம்.
***
290
கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,
கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.
***