முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 33
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77971
321
கிரேக்க கடவுள்களைப் போல,
கலைஞர்கள் ஒருவரோடொருவர்
வெறுமனே வெளிப்படுத்திக்
கொள்கிறார்கள்.
***
322
நாம் யாரை காயப்படுத்தினோமோ,
அவர்களை வெறுக்கிறோம்.
***
323
நீங்கள் கேட்கப்படுவதற்கு முன்னால்,
அறிவுரை கூறவோ உப்பைப் போடவோ
செய்யாதீர்கள்.
***
324
தன்னுடைய மோகங்களை
கவனிப்பதன் மூலம்
அவன் கண்காணிப்பாளராக இருக்கிறான்.
அவற்றிற்கு சேவை செய்வதன் மூலம்,
அவன் பணியாளனாக இருக்கிறான்.
***
325
ஒரு நாள் முழுமையான
உயிர்ப்புடன் இருப்பதற்காக,
ஒரு நாள் முழுமையான
ஓய்வில் இரு.
***
326
மக்கள் எந்த அளவிற்குத்
தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களோ,
அதைவிட அவர்கள் மீது
அன்பு செலுத்துவதற்குப்
பெயர்தான் கருணை.
***
327
நிறைய பணம் சம்பாதிப்பதை விட,
ஒரு நல்ல பெயரைப் பெறுவது மேலானது.
***
328
எந்த தடைகளும் இல்லாமல்,
அறிவாளிகளின் இதயம் எல்லாவற்றையும்
பிரதிபலிக்க வேண்டும்.
***
329
நட்சத்திரங்களையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஒரு மனிதன்,
சாலையில் உள்ள ஒவ்வொரு
பள்ளத்தின் கருணையையும்
நம்பியிருக்கிறான்.
***
330
சிறிது காலம் தரிசாகக்
கிடப்பது கூட நல்லதுதான்.
***