அந்த செருப்பு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7871
சாலையில் விட்டெறியப்பட்டுக் கிடைத்த பழைய குதிரை லாடம், வரவிருக்கும் அதிர்ஷ்டத்தைக் குறிப்பாக உணர்த்துகிற ஒரு பொருள் என்ற நம்பிக்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சில இந்திய பெரிய மனிதர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது அல்லவா? ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான பங்களாக்களில் வாசற்படியின் மீது "ளீ” என்று எழுதப்பட்டதைப்போல பழைய குதிரை லாடத்தைப் பதித்து வைக்கக் கூடிய விநோதமான பழக்கம், சில கேரள வீடுகளிலும் பின்பற்றப்படத் தொடங்கியிருக்கிறது.
வாசலின் மேற்படியின்மீது நல்ல சந்தனத்தைக் குழைத்து "நமசிவாய” என்றோ "ஸ்ரீ பகவதி விளையாட வேண்டும்” என்றோ மங்களகரமான வார்த்தைகளை அழகாக எழுதி வைக்கும் பழைய கேரள பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக ஏதோவொரு குதிரையின் குளம்பிலிருந்து ஆணி கழன்று கீழே விழுந்த ஒரு லாடத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து பதித்து வைப்பதைப் பார்க்கும்போது கிண்டல் பண்ணும் ஆட்கள், எங்களுடைய லாட்ஜுக்கு முன்னால் இருக்கும் வாசற்படிக்குமேலே அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி செருப்புகளைப் பார்க்கும்போது என்ன கூறுவார்களோ? குதிரையின் காலில் இருந்து விழுந்ததைவிட மனிதனின் காலில் இருந்து விழுந்தவை என்று சிந்தனை செய்து நாங்கள் அந்த செருப்புகளை அங்கு இடம் பெறும்படிச் செய்யவில்லை. அதற்குப் பின்னால் சுவாரசியமான கதை இருக்கிறது.
நாங்கள் மொத்தம் ஏழு பேர். அந்த காரணத்தால்தான் எங்களுடைய லாட்ஜுக்கு "we are seven” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சில கிண்டல் பண்ணக்கூடிய மனிதர்கள் "செருப்பு இல்லம்” என்று கிண்டல் பெயருடன் அதை அழைப்பார்கள். லாட்ஜுக்கு மட்டுமல்ல- எங்கள் ஒவ்வொருவருக்கும் கிண்டலான பெயர்கள் இருக்கின்றன. லாட்ஜில் இருக்கும் மனிதர்களில் ஒருவன் இன்னொருவனை அந்த கிண்டல் பெயரைக் கூறி அழைத்தால், அவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக ஆகிவிட்டார்கள் என்று அர்த்தம். அந்த அளவிற்கு நெருக்கம் இல்லாத மனிதனின் வாயிலிருந்து எப்போதாவது அந்த கிண்டல் பெயரோ அதை ஒட்டிய சாயல் உள்ள வார்த்தையோ வந்து விழுந்தால், அதற்குப் பிறகு சண்டை உண்டாக ஆரம்பித்துவிடும்... பிரச்சினை உண்டாகும்... வாக்குவாதம் உண்டாகும். இறுதியில் அடி, உதை, போலீஸ் என்பதில் போய் முடியும்.
அவருடைய ஜாதகப் பெயர் கிருஷ்ணன் நம்பியார் என்றாலும், எங்களுக்கு மத்தியில் அந்த நண்பர் "அனுபவம்” என்ற கிண்டல் பெயரில்தான் குறிப்பிடப்பட்டார். பார்ப்பதற்கு எந்தவித தொந்தரவும் தராத மனிதர் என்று தோன்றக்கூடிய அந்த குள்ளமான மனிதர் நடமாடும் அறிவியல் களஞ்சியமாக இருந்தார். அறிவாளித் தனமாகப் பேசக்கூடிய மனிதராக இருந்தார். ஆனால், வாலும் தலையும் இல்லாமல் வாயில் தோன்றக் கூடியதைப் பேசி மனிதர்களைக் கஷ்டப்படுத்தக் கூடிய மனிதராக அவர் இல்லை. மெதுவான, தாழ்ந்த குரலில், எளிமையான ஒரு முழு இலக்கிய மொழியில் அவர் பேச ஆரம்பிப்பதைக் கேட்பதற்கு ஓரு ஆர்வமும் சந்தோஷமும் உண்டாகும். ஆனால், ஆரம்பம் எப்படி இருந்தாலும், "அதுதான் நம்முடைய அனுபவம்” என்ற தனித்துவமான வார்த்தையில்தான் இறுதிப் பகுதி இருக்கும். அந்த காரணத்தால் தான் அவருக்கு "அனுபவம்” என்ற செல்லப் பெயர் கிடைத்தது. நமக்கு மத்தியில் இருக்கும் சில எழுத்தாளர்களைப்போல "ஆல்டுவஸ் ஹக்ஸ்லி என்ன கூறுகிறார்?', "சீன சிந்தனைவாதியான சீ-பூ கூறுவதைப் பாருங்கள்' என்றெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத சில அரைவேக்காட்டுத்தனமான சொற்பொழிவுகளை உருட்டிக் கொண்டு வந்து, சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தை வெறுப்படைய வைக்காமல், தன்னுடைய சொந்த அனுபவங்களையும் சாதாரணமான சம்பவங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சில சுவாரசியமான விஷயங்களைத் தேவைக்கேற்றபடி பரிமாறித் தரக்கூடிய அந்த அனுபவசாலிமீது எங்களுக்கு ஒரு மரியாதை உண்டாகாமல் இல்லை. அவருடைய சொற்பொழிவை நாங்கள் மிகவும் கவனமாகக் கேட்போம். எங்களுடைய லாட்ஜில் ஒரு மனிதன் கூறுவதை இன்னொரு மனிதன் வாயை மூடிக்கொண்டு கேட்பது என்பது, எங்களைப் பொறுத்த வரையில் இருப்பதிலேயே பின்பற்றுவதற்கு மிகவும் கஷ்டமான விரதம் என்பதுதான் உண்மை. அது தியாகத்திற்கு நிகரானது. சொற்பொழிவுக்கு ஆற்றக்கூடிய- அளிக்கக்கூடிய மிகப் பெரிய மரியாதை அது. நாங்கள் திருமணமாகாதவர்கள். மனைவி என்று கூறப்படும் ஏதோ ஒரு முறையான படைப்பு உள்ளே நுழைந்து வந்து, எங்களுடைய பேச்சு சுதந்திரத்தையும் தட்டிப்பறித்து தாங்களே பயன்படுத்திக் கொள்வது வரை மட்டுமே, ஏதாவது தோன்றக் கூடியதை வெளியே கூறி எங்களால் குதூகலம் அடைய முடிகிறது என்ற விஷயம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையாகக் கூறுவதென்றால், நாங்கள் ஏழு பேரும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு, ஒருவன் கூறும் வார்த்தைகள் முழுவதையும் கேட்க வேண்டும் என்ற அக்கறையோ பொறுமையோ நல்ல குணமோ இன்னொருவனுக்கு இருக்கவில்லை. ஆனால், அனுபவத்தின் விஷயத்தில் மட்டும் நாங்கள் சிறிய அளவில் சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்து விட்டிருந்தோம்.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. மதிய தூக்கம் முடிந்து நாங்கள் ஒவ்வொருவரும் கனமான முகங்களுடன் வாசலில் ஒவ்வொரு பொருட்களின்மீதும் இடம் பிடித்தோம். வேலைக்காரன் சுப்புவின் சூடான காப்பியை எதிர்பார்த்து மவுனமாக உட்கார்ந்து கொண்டிருந்த போது, அனுபவம் அந்தப் புதிய க்யான்வாஸ் நாற்காலியில் சற்று முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்து கொண்டே மெதுவாக இருமினார். அனுபவம் ஏதோ ஒரு புதிய சொற்பொழிவுக்குத் தன்னை தயார் பண்ணிக்கொள்கிறார் என்பதற்கான அடையாளம் அது. ஒரு புதிய மலையாள பண்டிதருக்கு முன்னால் இருக்கும் மாணவர்களைப்போல நாங்கள் அக்கறையுடன் உட்கார்ந்திருந் தோம். “மிகவும் அழகான இளம் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய கணவன்மார்கள் மிகவும் அவலட்சணமானவர்களாகவோ மிகவும் மோசமான குணங்களைக் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். அழகான தோற்றத்தைக் கொண்ட இளைஞர்களின் மனைவிமார்களின் கதையும் அதேதான். அதுதான் நம்முடைய அனுபவம்.''
தலையை இடதுபக்கமாக சாய்த்துக்கொண்டு, வலது கண்ணைச் சற்று சுருக்கியவாறு, உதடுகளைச் சுளித்தவாறு, சொற்பொழிவின் ஆரம்பத்தில் வெளிப்படுத்தக் கூடிய தன்னுடைய இயல்பான செய்கைகளுடன் அனுபவம் உறுதியான குரலில் கூறினார்.
கட்டிலின்மீது எழுந்து உட்கார்ந்து கொண்டு தன்னுடைய சிறிய பூனையை மடியில் வைத்துக்கொண்டு ஏதோ புத்தகத்தில் இருந்த படங்களை ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அப்துல்லா திடீரென்று தலையை உயர்த்தி இனிய ஒரு புன்சிரிப்பைத் தவழ விட்டுக் கொண்டே, விழிகளை அசைத்தவாறு ஒப்புக்கொண்டு சொன்னான்: “உண்மைதான்...'' கூறுவதற்கு மத்தியில்... இந்த அப்துல்லா இருக்கிறானே... ஆள் மிகவும் நல்லவன். ஒரு மனிதனின் மனதை என்று கூட கூற வேண்டியதில்லை.