முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 35
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by sura
- Hits: 77971
341
தன்னுடைய சக மனிதர்களுக்கு
நல்ல செயல்களைச் செய்யாமல்,
மனிதர்கள் கடவுளை அணுகி
எதையும் பெற முடியாது.
***
342
எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,
கெட்ட பெயரை வாங்காதே.
***
343
நீண்ட காலம் வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்ந்ததென்னவோ -
ஒரு சிறிய கணம்தான்.
***
344
சாதாரண மனிதர்கள்
பொருட்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
முட்டாள்கள்
மனிதர்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
உயர்ந்த மனிதர்கள்
எண்ணங்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
***
345
நான்
ஏழைகளுக்கு
உணவு தரும்போது
அவர்கள் என்னை
ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.
ஏழைகளுக்கு
ஏன் உணவு இல்லை
என்று நான் கேட்கும்போது
அவர்கள் என்னை
ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.
***
346
நாம் எல்லோருமே
வாழ்க்கையில்
பல விஷயங்களையும்
தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் -
அவற்றுடன் வாழ்வதுதான்
மிகவும் சிரமமான ஒன்று.
ஆனால்,
அந்த காரியத்தில்
உங்களுக்கு உதவுவதற்கு
யாருமே இருக்க மாட்டார்கள்.
***
347
எந்தவொரு மனிதன்
யாரையுமே நம்பாமல்
இருக்கிறானோ,
அவனை யாருமே
நம்பமாட்டார்கள்.
***
348
வாழ்க்கை என்பது
ஒயினைப் போன்றது.
அதை கொஞ்சமாக சுவைத்தால்
அதனால்
எந்தக் கேடும் இல்லை.
ஆனால்,
புட்டியைக் காலி பண்ண வேண்டும்
என்று நினைத்தால்
ஒரு தலைவலியை நாமே
வரவழைக்கிறோம்
என்று அர்த்தம்.
***
349
தன்னுடைய
மனச்சாட்சியை
முழுமையாக இழந்து விட்டு
ஒரு மனிதன்
முழு உலகத்தையும்
ஆதாயமாக பெற்றாலும்
அதனால் என்ன பயன்?
***
350
இந்த தருணத்தை
நீ
தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.
ஆனால்,
இந்தத் தருணம்
உன்னைத்
தேர்ந்தெடுத்து விட்டது.
***