சிவப்பு தீபங்கள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
மைனர் பொண்ணுகளை விபச்சாரத்துக்கு கொண்டு வர்றது சட்ட விரோதம்னு உங்களுக்குத் தெரியாதா? இந்த வீட்டுல இருக்குற மைனர் பொண்ணுகளைப் பற்றி ஆளுங்க எப்படியெல்லாம் பேசுறாங்க தெரியுமா? அதுவும் அக்கா உங்களோட நண்பர்கள்னு சொல்லிக்கிறவங்க... அவங்க பேரை நான் சொல்ல மாட்டேன்.”
“என் மைனர் பொண்ணுகளைப் பற்றி யார் சொன்னாங்க?”- அழுது சிவந்து போன கண்களுடன் மீராவின் படுக்கையைவிட்டு வேகமாக எழுந்த ஆயி கேட்டாள். “அந்தப் பிசாசு சிந்துத்தாயியா சொன்னா? இல்லாட்டி... இன்ஸ்பெக்டர் ஐயாவா?”
ரகசியங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்துடன் கவுசல்யா தலையைக் குலுக்கியவாறு சிரித்தாள். “நான் இங்கே பொய் சொல்றதுக்காக வரல. அக்கா உங்களுக்கு ஆறுதல் சொல்லணும் போல இருந்துச்சு. அதுனாலதான் வந்தேன்.”
புதிதாக மலர்ந்த பாசத்துடன் கவுசல்யாவை ஆயி இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “உனக்கு மட்டும்தான் என்மேல அன்பு இருக்கு...”
“நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து நிற்போம்”- கவுசல்யா பதில் சொன்னாள். “நமக்கு பொதுவான எதிரிகள் இருக்காங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து நின்னா நமக்கு யாரும் தொந்தரவு தர முடியாது. ஏன் போலீஸ்காரங்க கூட...”
கறுப்பு நிறமுள்ள சரஸ்வதி தன்னுடைய பொருட்களுடன் மீராவின் அறையை நோக்கி வந்தாள். “மற்ற எல்லாரையும்விட என்கிட்டத்தான் நிறைய பேரு வர்றாங்க”- ஏதோ விளக்கிச் சொல்வதைப் போல் அவள் சொன்னாள். “முன்னாடியிருந்தே இந்த அறைமேல எனக்கு ஒரு கண்ணு இருக்குது. இங்கேயிருந்து பார்த்த அகலமான தெரு தெரியும். ஜன்னல் படியில உட்கார்ந்து கார்ல போற ஆளுகளை கைகாட்டி இழுக்குறதுக்கு இந்த அறையில இருக்குறதுதான் சரியா இருக்கும்.”
அதைக் கேட்டு ராதாவிற்கு பயங்கர கோபம் உண்டானது. ஆனால் அவளைவிட வீட்டுக்கு அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துத் தரும் சரஸ்வதியுடன் நியாயம் பேசிக் கொண்டிருக்க அவளால் முடியவில்லை. மற்றொருத்தியின் காதில் மெதுவான குரலில் ராதா சொன்னாள். “இவ உண்மையிலேயே ஒரு தேவடியாதான். யாராவதொரு ஆம்பளை கண்ணை உயர்த்தி பார்த்துட்டாபோதும்... இப்படியும் அப்படியுமா இவ பின் பக்கத்தை ஆட்டிக்கிட்டு நடக்குறதை நீ பார்த்திருக்கேல்ல?”
வாசலில் இருந்த திண்ணையில் உட்கார்ந்து தலையைக் குனிந்தவாறு ஆயி அழுவதும் மூக்கைச் சிந்துவதும் மீராவின் நன்றி மறந்த செயலை நினைத்துப் பார்த்து கோபமாகப் பேசுவதுமாக இருந்தாள். அப்போது அந்த வழியே தொழிலாளர்களும் மில் பணியாட்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் வந்தபோது மதியநேரம் முடிந்திருந்தது. அவர் ஆயியைப் பார்த்து ஆச்சரியம் மேலோங்கக் கேட்டார்.
“லட்சுமிபாயி இந்த விஷயத்தை முன்கூட்டியே என்கிட்ட நீங்க சொல்லியிருக்கலாம்ல?”
இருண்டுபோயிருந்த நெற்றியில் கையால் அடித்துக் கொண்டு வருத்தம் கலந்த குரலில் ஆயி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஓடிப்போன அந்தப் பொண்ணை எப்படியாவது இங்கே திரும்பி கொண்டு வந்திருப்பேன். ரெயில்வே ப்ளாட்ஃபாரங்களையும் பஸ் ஸ்டேஷன்களையும் நல்லா பார்க்கும்படி நான் ஆளுங்களை அனுப்பியிருப்பேன். அந்தப் பிச்சைக்காரப் பயல பிடிச்சிட்டு வந்து ஜெயில்ல போட்டிருப்பேன். இந்நேரம் அவங்க நகரத்தைக் கடந்து ஏதாவது கிராமத்துக்குள்ள போயி ஒளிஞ்சிருப்பாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அந்தப் பையனை சிறைக்குள்ள போட்டு என்ன பிரயோஜனம்?”- ஆயி கேட்டாள். “தான் விருப்பப்பட்டுத்தான் மீரா அவன்கூட போயிருக்கா. அவ ஒண்ணும் மைனர் பொண்ணு இல்ல. அந்தப் பையனை மீரா யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சிக்கிட்டான்னு ருக்மிணி என்கிட்ட சொன்னா.”
“கல்யாணமா?”- இன்ஸ்பெக்டர் உரத்த குரலில் கத்தினார். “மதிப்புள்ள ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒரு தேவடியாதான் கிடைச்சாளா? அவன் ஒரு கூட்டுக் கொடுக்குற ஆளா இருப்பான். அவளை வச்சு பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருப்பான். இந்த சூது வாது நிறைஞ்ச உலகத்தைப் புரிஞ்சிக்க முடியாத ஒரு சுத்தமான மனசைக் கொண்ட பெண் நீங்க. என் லட்சுமிபாயி தன்னைத் தொடக் கூட என்னை அவ அனுமதிக்கல. அந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? ஒருநாள் நான் அவ முன்னாடி முப்பது ரூபாயை நீட்டினேன். அப்போ அவ சொன்னா “வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார்... நான் காதலிக்கிற அந்த ஆளை ஏமாற்ற என்னால முடியாது”ன்னு. உங்களோடது போல உள்ள ஒரு விபச்சாரம் நடக்குற வீட்டுல இருக்குற ஒருத்தி மதிப்பான ஒரு மனிதர்கிட்ட இப்படியா பேசுவாங்க? என் லத்தியால அங்கேயே அவளை நாலு போட்டு சரி பண்ணியிருக்கணும். ஆனால் உங்க வீட்டுல தேவையில்லாம ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம்னு நினைச்சு நான்தான் அமைதியா இருந்துட்டேன். நீங்க என் அக்கா மாதிரி லட்சுமிபாயி...”
“நீங்க உண்மையைச் சொல்றீங்க இன்ஸ்பெக்டர்”- ஆயி அழுதாள். “நீங்க என் சகோதரர்தான். மனசுல வருத்தம் உண்டாகுற ஒவ்வொரு நேரத்துலயும் நான் உங்களைத்தான் தேடுறேன். உங்க உதவி மட்டும் இல்லாமலிருந்தா இந்த திசையில என்னால வாழ்ந்திருக்கவே முடியாது. இன்னும்கூட நல்ல இடமா பார்த்து க்ராண்ட்ரோடு பக்கமோ இல்லாட்டி வேற ஏதாவது நல்ல இடம் பார்த்து என் பொண்ணுகளை அழைச்சிக்கிட்டு போனா என்னன்னு பல தடவை நான் யோசிச்சிருக்கேன். என் பொண்ணுக முதல்தரமா வளர்ந்தவங்க. நான் சொல்றது உண்மைதானே? இங்கே வர்ற ஒவ்வொரு ஆளையும் ஆச்சரியப்பட்டு நிக்க வைக்கிறா என் சின்ன பொண்ணு ருக்மிணி. அவளுக்கு அந்த அளவுக்கு அழகான உடம்பு அமைஞ்சிருக்கு. நல்ல வாசனையும் அவள்கிட்ட இருக்கு. இன்ஸ்பெக்டர் அவ நேற்று என்கிட்ட சொன்னா. உங்களை அவளுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்காம். நீங்க ஒரு அழகன்னு அவ சொன்னா.”
“எங்கே அவ?”- இருண்ட இடைவெளியைப் பார்த்தவாறு அவர் கேட்டார்.
“அந்த ஹால்ல படுத்து அவ உறங்கிக்கிட்டு இருப்பா”- ஆயி சொன்னாள். “மீரா இங்கேயிருந்து ஓடிப்போனதுல அவளுக்கு ரொம்பவும் வருத்தம். பாவம்... அவ எப்படி அழுதா தெரியுமா? காலையில மீராதான் அவளைக் குளிப்பாட்டுவா. பாட்டு பாடக் கூட அவ இவளுக்குச் சொல்லித் தந்தா.”
“நான் ருக்மிணியைக் கொஞ்சம் பார்க்கட்டுமா?” அவர் கேட்டார்.
அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டுவர ஆயி உள்ளே போனாள். கணவனும் மனைவியுமாக வேடங்கள் அணிவிக்கப்பட்ட இரண்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்துக் கொண்டு அப்போது ருக்மிணி விளையாடிக் கொண்டிருந்தாள். சீதா தரையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தவாறு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.