சிவப்பு தீபங்கள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6736
அந்தப் பழைய கதைதான்... தாய் தன் உறவினர் வீட்டு விருந்திற்குப் போயிருந்த சமயத்தில் வயதுக்குவராத மகளை வளர்ப்புத் தந்தை பலாத்காரம் செய்த கதை. துருப்பிடித்த ஆணியைப் போல தேய்ந்துபோன, வெற்றிலைக் காவி பிடித்த இரண்டு பற்களை வெளியில் காட்டியபடி ஆயி என்று வீட்டிலுள்ளவர்கள் அன்புடன் அழைக்கும் அந்தத் தடிமனான பெண் தரையில் உட்கார்ந்தவாறு சுவரில் சாய்ந்து கொண்டு உரத்த குரலில் சிரித்தாள்.
“அனுசூயா, உன்னோட கோவிந்தனைப் போல ஒரு திருட்டு பயகிட்ட இருந்து வேற என்ன நீ எதிர்பார்க்க முடியும்? பன்னிரண்டு வயதுள்ள மகளை விற்பதற்காக அங்கு கொண்டு வந்திருந்த மெலிந்து போய்க் காணப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்து ஆயி கேட்டாள் : “சரி... போனது போகட்டும். அழகான உன்னோட இந்த மகளைப் பற்றி இனிமேல் நீ கவலையே படவேண்டாம். இங்கே இவ நல்லா சந்தோஷமா இருப்பா. கொஞ்ச நாட்கள் கழிச்சு உனக்கே இவளை அடையாளம் தெரியாது. இவளுக்கு முதல்ல தேவை நல்ல உணவு. என்கிட்ட இருக்குற பொம்பளை பசங்களைப் பாரு. அவங்க யாராவது எந்தக் குறையுடனாவது இருக்குறது மாதிரி உனக்குத் தெரியுதா, அனுசூயா? காலையில அவங்களுக்கு முட்டையும் புரோட்டாவும் நான் தர்றேன்.”
அந்தச் சிறிய பெண் சுற்றிலும் பார்த்தாள். இங்குமங்குமாய் தரையில் ஆறேழு இளம் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர். கையில் ஆரஞ்சு நிலத்தில் வளையல்கள் அணிந்திருந்த சற்று மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு இளம் பெண் மறைந்து நின்றுகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவளுக்குப் பதினைந்து வயதிற்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ‘இவள்தான் அனேகமாக என் தோழியா ஆகப் போறவளா இருக்கும்!’ என்று அந்தச் சிறிய பெண் அப்போது நினைத்துக் கொண்டாள்.
“ருக்மிணி, இங்கே வா...” தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய பருமனான மார்பகத்தோடு சேர்த்து அந்தச் சிறிய பெண்ணை ஆயி வாஞ்சையுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.
“பாவம் உன் அம்மா... அவளைப் போகச் சொல்லு. உன் அம்மா ரொம்பதூரம் போக வேண்டியதிருக்கு. இப்பவே நேரம் அதிகமாயிடுச்சு...”
அப்போது தபால்காரன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தான்.
“எனக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கா?”- ஆயி கேட்டாள். சைக்கிளின் வேகத்தைச் சற்று குறைத்த தபால்காரன் அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு புன்னகை செய்தான்.
“பத்து வருடங்களுக்கு முன்னாடி வீட்டைவிட்டு ஓடிப் போன காசுக்குப் பிரயோஜனமில்லாத என் தங்கமகன் என்னைக்காவது ஒருநாள் எனக்கு ஒரு கடிதம் எழுத மாட்டானான்னு நான் காத்திருக்கேன்” என்றாள் ஆயி.
“கடிதம் வராம இருக்காது”- புடவைத் தலைப்பை எடுத்துத் தன்னுடைய சிவந்த மூக்கைத் துடைத்தவாறு ருக்மிணியின் தாய் ஆயிக்கு ஆறுதல் சொன்னாள். “உங்க மனசு ரொம்பவும் சுத்தமானது. ரொம்ப நாளு கடவுள் உங்களைக் கவலையில இருக்கவிட மாட்டாரு.”
உயிர்ப்பற்ற கண்களால் ருக்மிணி தன் தாயைப் பார்த்தாள். வீட்டைவிட்டு பிரிந்திருப்பதில் அவளுக்குச் சிறிதுகூட வருத்தமில்லை. அவளுடைய தந்தை காணாமல் போன பிறகு வீட்டிற்குள் வந்த வளர்ப்புத் தந்தை ஒரு மிருகமாக இருந்தான். எல்லா நாட்களிலும் இரவில் அவன் அவளுடைய தாயைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். வீட்டில் அவள் மட்டும் தனியாக இருக்கும்பொழுது, அவன் அப்பொழுதுதான் மொட்டாக வந்து கொண்டிருந்த அவளுடைய பிஞ்சு மார்பகங்களை கையால் தடவி வேதனைப்படுத்திக் கொண்டிருந்தான். கடைசியில் கடந்த வாரம் அவன் அவளுக்குள் பலவந்தமாக நுழைந்தான். தரை முழுவதும் அவளுடைய ரத்தம் பரவிக்கிடந்தது.
“உனக்கு நான் கல்யாணம் பண்ணி வச்ச அந்த நல்ல புருஷனை நீ துரத்திவிட்டிருக்கக் கூடாது, அனுசூயா...”- ஆயி சொன்னாள்.
“அவன் ஒவ்வொரு நாளும் தவறாம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தான்ல? சொல்லப்போனா, அவன் ஒரு குடிகாரன் கூட இல்ல. ஆனா? மணவாழ்க்கை நடந்துக்கிட்டு இருக்குறப்போ நீ கொஞ்சம் கம்மியான வயசு உள்ள ஒருத்தன்மேல ஆசை வைக்க ஆரம்பிச்சுட்டே. இப்போ உனக்குத் திருப்திதானா?”
“ஆயி, இப்படி சொல்லிச் சொல்லி என் மனசை நோகடிக்காதீங்க”-அனுசூயா ஆயியைப் பார்த்துக் கெஞ்சினாள். “நான் பாவம் செஞ்சவ. என் பொண்ணையாவது காப்பாத்துங்க. அவள் எந்தப் பாவமும் செய்யாத அப்பிராணி.”
அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுகளை தாளில் சுற்றி அனுசூயாவின் இடுப்பில் சொருகினாள் ஆயி.
“உங்கக்கிட்ட இருந்து நான் பணமே வாங்கமாட்டேன். ஆயி”-இடறிய குரலில் அவள் சொன்னாள்: “வீட்டுல முழு பட்டினி. குழந்தைக்கு ஒரு தேநீர் மட்டும்தான் இன்னைக்குக் கொடுத்தேன். மத்தியானம் ஒரு பழம். அவ்வளவுதான்...”
அவள் அங்கிருந்து புறப்பட்டாள். பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து செல்லும் தன் தாயை வாசலில் இருந்த கம்பிகளைப் பிடித்தவாறு நின்றுகொண்டு ருக்மிணி பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய தாய் ஒரு பச்சைப் புள்ளியாக தூரத்திலிருந்த மற்ற நிறங்களுடன் கலந்து மறைந்தபோது அவள் திரும்பி தன்னுடைய புதிய தாயைப் பார்த்தாள். இடது உள்ளங்கையில் புகையிலையையும் சுண்ணாம்பையும் வைத்து நக்கிக் கொண்டிருந்தாள் ஆயி. உள்ளேயிருந்து வந்த மெலிந்து காணப்பட்ட இளம்பெண் கண்களைச் சிமிட்டியவாறு ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தாள். நீலநிறத்தில் பாவாடையும் லேசாகக் கிழிந்திருந்த வெள்ளை ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். அவளுடைய கையில் வளையல்கள் நிறைந்து காணப்பட்டன. “உனக்கு இதுல ஏதாவது வேணுமா?” அந்த இளம் பெண் கேட்டாள். “நைலான் வளையல் ப்ளாஸ்டிக் இல்ல... போனமாதம் பொருட்காட்சியில ஆயி எனக்கு வாங்கித் தந்தது இது.”
“இங்கே உள்ள விஷயங்களை நீ ருக்மிணிக்குச் சொல்லித் தரணும்” - ஆயி சீதாவைப் பார்த்துச் சொன்னாள்: “சீதா, உன்னை விட ரெண்டு வயது இளையவ ருக்மிணி.”
ருக்மிணியின் கையைப் பிடித்துக் கொண்டு சீதா சொன்னாள்: “வேணும்னா உனக்கு என்னோட வளையல்களைத் தர்றேன்” அவள் கைகளைச் சீதா பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ அவள் சிரித்தவாறு ஆச்சரியம் தொனிக்கும் குரலில் சொன்னாள்: “ஓ... வயசுக்கு மீறிய வளர்ச்சி தெரியுது உன் உடம்புல” சீதாவின் மெலிந்து போன கைகளைப் போலல்லாமல் சதைப்பிடிப்புள்ள கைகளை கொண்டிருந்தாள் ருக்மிணி. சீதா சொன்னதைக் கேட்டு ருக்மிணிக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் சொன்னாள் : “என் கறுப்பு நிறத்துக்கு ஆரஞ்சு நிறத்துல இருக்குற வளையல்கள் பொருத்தமா இருக்காது.” அதைக் கேட்டு ஆயி “நீ ஒண்ணும் கறுப்பு இல்லயே! வெயில்ல நடந்துதானே நீ பள்ளிக் கூடம் போற? அதனாலதான் உன் தோல்ல இப்படியொரு கறுமை தெரியுது மகளே, ஒரே மாசத்துல உன் நிறம் எப்படி மாறுது பாரு...” என்றாள்.