சிவப்பு தீபங்கள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
“யாரு?”- உள்ளேயிருந்து மீரா கேட்டாள்.
“கதவைத்திற”- ஆயியின் குரல் உயர்ந்தது. மீரா கதவைத் திறந்தாள். அவள் உடுத்தியிருந்த அந்த பட்டுப்புடவை அவள் உடம்பில் அப்படியே இருந்தது. படுக்கை விரிப்பில் சிறிதுகூட சுருக்கங்கள் விழவில்லை. அவன் அங்கே புகை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது அவளுக்கு புரட்சியைப் பற்றி பாடம் சொல்லித் தர்றதுக்கா என்ன?”
அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான் அந்த இளைஞன். “நான் பணம் கொடுத்திருக்கேன்” என்றான் அவன்.
ஆயி வெறுப்புடன் அவனைப் பார்த்தவாறு கோபமான குரலில் சொன்னாள் : “இது தேவடியாள்க இருக்குற இடம். யோகா கத்துத் தர்ற இடமில்ல. என்ன பண்ணணுமோ அதைப்பண்ணிட்டு சீக்கிரமா கிளம்புறதுக்கு வழியைப் பாரு. வழக்கமான வாடிக்கையாளுங்க வர்ற நேரமாச்சு.”
கதவு மீண்டும் அடைக்கப்பட்டது. முன்னறையை நோக்கிப் போன ஆயி நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். ஜரிகையும், பார்டர்களும் ஜொலித்துக்கொண்டிருந்த புடவைகளை இளம்பெண்கள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் முகங்களில் சாயம் தேய்த்துக் கொண்டும் தலைமுடியில் பூச்சூடிக் கொண்டும் இருந்தார்கள். தரையில் சாக்பீஸால் வரையப்பட்ட ஒரு பெரிய சதுரத்துக்குள் நின்றவாறு இரண்டு இளம்பெண்கள் ஓட்டுத் துண்டை எறிந்து நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“சின்னப்பிள்ளைங்க விளையாட்டை நிறுத்து சீதா. வாடிக்கையாளர்கள் வர்ற நேரமாச்சு”- ஆயி கண்டிப்பான குரலில் சொன்னாள்.
ஆயி அதைச் சொல்லி முடிப்பதற்குள் தடிமனான இன்ஸ்பெக்டர் வாசலைக் கடந்த உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் ருக்மிணிக்கு நேராக விரலைச் சுட்டிக்காட்டியவாறு ஆயியைப் பார்த்துக் கேட்டார் : “உன்னோட புதிய ஆளா?”
ஆயி அதைக் கேட்டு ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள். “வா” என்று கூறியவாறு அந்தச் சிறுமியை இழுத்துக் கொண்டு அந்த ஆள் உள்ளே நடந்தார். “கூட போ. அவர் நம்ம ஆளுதான்”-ஆயி ருக்மிணியைப் பார்த்துச் சொன்னாள்.
அறைக்குள் இருந்த கட்டில்மீது அந்தச் சிறுமியைத் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் அவளின் ஆடையை மேல்நோக்கி உயர்த்தினார். “ஓ... நீ ஜட்டி வேற போட்டிருக்கியா? சரியான ஆளுதான்...”- சிரித்துக் கொண்டே அவர் சொன்னார். அவரின் கைவிரல்கள் அவள் மீது மேல்நோக்கிப் படர்ந்தபோது ருக்மிணி அவரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். “என்னை ஒண்ணும் செய்யாதீங்க...” - தேம்பியவாறு ருக்மிணி அந்த ஆளைப் பார்த்துக் கெஞ்சினாள். “என்னை விடலைன்னா, உங்கக் கண்ணை நான் நோண்டி எடுத்துருவேன்...”
“நீ என்னடி சொன்னே காட்டுப் பூனை” வேண்டுமென்றே குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு அவர் கேட்டார் : ‘என் கண்ணைத் நோண்டி எடுத்துருவியா? ஏன்டி சின்னப்புள்ள...”
“நான் ஒண்ணும் தேவடியா இல்ல...” -ருக்மிணி அழுதுகொண்டே சொன்னாள். ஆனால், காமவெறி முற்றிப்போய் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் அதைக் கேட்கும் நிலையில் இல்லை.
ஒரு ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்றிருக்கும் ஆளைப் போல அவர் அவளை இறுகக் கட்டிப்பிடித்தார். அவருடைய வாயின் இரண்டு பக்கங்களிலும் நுரை தள்ளிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் கட்டிலில் திரும்பிப் படுத்தவாறு சொன்னார் : “உனக்கு நான் ஒரு சிவப்பு நிற ஃப்ராக்கும் லேஸ் வச்ச பாவாடையும் வாங்கித் தர்றேன்.” அடுத்த நிமிடம் அவர் உறங்க ஆரம்பித்தார்.
படுக்கையிலிருந்து வேகமாக எழுந்த ருக்மிணி முன்னறையை நோக்கி ஓடினாள். அவள் தலைமுடி முழுவதும் விரிந்து பரவிக் கிடந்தது. வியர்வைத் துளிகள் நெற்றியில் பொட்டுவிட்டிருந்தன. வந்தவுடன் அவள் சதுரத்துக்குள் நுழைந்து பழைய மாதிரியே நொண்டி விளையாட ஆரம்பித்தாள். சீதா அவளுக்கு உற்சாகம் ஊட்டியவாறு அவள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விளையாட்டில் முழுமையாக மூழ்கிவிட்டிருந்த ருக்மிணி திடீரென்று அதீத மகிழ்ச்சியுடன், “நான் ஜெயிச்சிட்டேனே” என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்த அதே நேரத்தில ஆயியைப் பார்த்துச் சிரித்தவாறு அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர்.
“அவ ஒரு குட்டிப்பூனை. இருந்தாலும் இந்தத் தொழிலைப் பற்றிய எல்லா விஷயங்களும் அவளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. எனக்கு அவளை ரொம்பவும் பிடிச்சிருக்கு”- இன்ஸ்பெக்டர் ஆயியைப் பார்த்துச் சொன்னார்.
தன்னுடைய நகங்கள் உண்டாக்கின கீறல்களால் சிவந்து போயிருந்த அந்த மனிதரின் சதைப்பிடிப்பான முகத்தை ருக்மிணி பார்த்தாள். அவர் எதையும் கவனிக்காதது மாதிரி நின்றிருந்தார்.
“மீராவோட அறைக்குள்ள யாரு பேசிக்கிட்டு இருக்கிறது?”- இன்ஸ்பெக்டர் ஆயியைப் பார்த்துக் கேட்டார்.
உண்மையான கவலையுடன் தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டே ஆயி சொன்னாள் : “அவன்தான்... அந்த மாணவன்... அவன் திரும்பவும் அவளுக்கு ரகசியப்பாடம் சொல்லித்தர வந்திருக்கான்!”
“இந்த இடத்தைவிட்டு அவனை விரட்ட என்னால முடியும். ஒருநாள் முன்கூட்டியே என்கிட்ட சொல்லிட்டா போதும். அவனைக் கைது பண்ணி சிறையில அடைக்கக்கூட என்னால முடியும்”- இன்ஸ்பெக்டர் சொன்னார்.
“உங்களால அது முடியும்னு எனக்கும் நல்லா தெரியும்” - ஆயி சொன்னாள் : “மீரா அவனை வெறுக்குறதுவரை நாம பொறுமையா இருப்போம். மீரா எனக்கு மகள் மாதிரி. உயிரைவிட பெரிசா அவளை நான் நினைக்கிறேன். அவ கவலைப்பட்டு நிக்கறதைப் பார்க்குறதுக்கு நான் விரும்பல...”
“நீங்க அவளைக் கெடுத்துட்டீங்க லட்சுமிபாய்...”- இன்ஸ்பெக்டர் சொன்னார். “ஏதோ பெரிய பணக்கார வீட்டைச் சேர்ந்தவ மாதிரிதான் அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும்.”
“யாருக்கும் தெரியும். அவ ஒரு பெரிய பணக்கார வீட்டைச் சேர்ந்தவளா இருக்க மாட்டான்னு”- ஆயி கேட்டாள் : “என் வீட்டு வாசல்ல யாரோ விட்டுட்டுப் போன நிலையிலதான் அவ எனக்குக் கிடைச்சா. என் கையில அவ கிடைக்கிறப்போ ஒரு சில்க் புடவையால சுற்றப்பட்டிருந்தா. எங்களைப் போல உள்ளவங்க கட்டுறதுக்கு நினைச்சுப் பார்க்கக் கூட முடியாத உயர்ந்த தரத்தைச் சேர்ந்த புடவை அது!”
“அவளோட அம்மா யாராவது ஒரு பணக்காரியோட வீட்டுல வேலை செய்த வேலைக்காரியாக்கூட இருக்கலாம். தீபாவளிக்கோ, வேற ஏதாவது பண்டிகைக்கோ அவளோட முதலாளியம்மா அந்தப் புடவையை வாங்கித் தந்திருக்கலாம்ல?” அப்படிக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிய இன்ஸ்பெக்டர் ஆயியின் வெற்றிலைப் பெட்டியைக் கையை நீட்டி எடுத்தார்.
“எது எப்படியோ... ஒரு ஏழை பொண்ணோட மகளைப் போல அவ இல்ல. நான் என் பொண்ணுகளை அழைச்சிக்கிட்டு நகரத்துக்கு பொருட்கள் வாங்க போறப்போ ஏக்கம் நிறைஞ்ச கண்களோட ஆண்கள் அவளையே பார்த்துக்கிட்டு நிக்கிறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.