குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6452
அதுவரையில் ஜூலியா தன்னுடைய பெட்டிக்குள் தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தது. புதிய வீடும், சூழ்நிலையும், அறிமுகமில்லாத மனிதர்களும் சேர்ந்து அவளைக் குழப்பத்தில் மூழ்க வைத்திருப்பதைப்போல் இருந்தது. காற்றில் முகர்ந்து, இடையில் அவ்வப்போது கனைத்துக்கொண்டு, கோபத்தில் வேகமாக மிதித்து, தன் பெட்டிக்குள் அவள் நின்று கொண்டு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தாள்.
ஜூலியா மிகவும் அழகாக இருந்தாள். அழகு, நிறம், ஆரோக்கியம்- இவை அனைத்தும் எந்த அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு அவளிடம் இருந்தன.
ஷானவாஸ்கான், உள்ளே அறைகளிலிருந்து ஊன்றுகோல் என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டதைப்போல ஓடிவந்தார். படிகளில் அவர் இறங்க சாரா உதவினாள். அவருடைய முகம் சந்தோஷத்தில் சிவந்திருந்தது. பார்க்காமல் இருந்த மனைவியையோ மகளையோ பார்த்துவிட்டதைப் போல, அவருடைய கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
நாகராஜ் சாய்த்து வைத்த பலகையில் மிகவும் கவனமாக மிதித்தது, ஜூலியா தன்னுடைய பல்லக்கில் இருந்து இறங்கினாள். கால்களை எடுத்து வைப்பதைப் பார்க்கும்போது, அவளுக்கு மனிதர்களைவிட அறிவு அதிகமாக இருப்பது தெரியும்.
நாகராஜ், கான் சாஹிப்பன் அருகில் சென்று மிகவும் பணிவுடன் பயணத்தைப் பற்றிய விஷயங்களை விளக்கிக் கூறினான். ஊட்டியை விட்டுப் புறப்பட்டபோது மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. நல்ல நிலவு உதித்துக்கொண்டிருந்த இரவு நேரமாக இருந்ததால் எந்தவித சிரமமும் இல்லாமல் இங்கு வந்துசேர முடிந்தது. சிறிய அளவு மழை பெய்தப்போது, வண்டியை நிறுத்தி அவர்கள் ஒய்வெடுத்தார்கள். மீண்டும் பொழுது விடியும் நேரத்தில் அவன் வண்டியை கிளப்பினான். ஜூலியா கொஞ்சம் களைத்துப்போயிருந்தது மாதிரி தோன்றியதால், வரும் வழியில் மீணடும் ஒரு இடத்தில் அவன் வண்டியை நிறுத்தினான்.
கான் மிகவும் பாசத்துடன் தட்டியப்போது, ஜூலியா அவருக்கு மிகவும் நெருக்கமாக நின்றாள். அதுவரை திகைப்புடனும் பதைபதைப்புடனும் ஒதுங்கி நின்றிருந்த அவள் ஏதோ மந்திரத்தனமான தொடல் தன்மீது பட்டதைப்போல் அடக்கத்துடன் நின்றிருந்தாள்.
குதிரையைப் பற்றிய மர்மங்களை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் மனிதர் கான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நேரம் தேவையில்லை.
“உள்ளே நுழைஞ்சு பார்க்கணுமா ஸாப்?” - நாகராஜ் மிகவும் ஆர்வத்துடன் கேட்டான்.
“இன்றைக்கு வேண்டாம். அவள் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்காளே!”- கான் சொன்னார்.
அப்போது அவர் தன்னுடைய சொந்தக் காலில் இருந்த தொந்தரவைக்கூட முற்றிலுமாக மறந்துவிட்டதைப்போல இருந்தது.
ஜூலியா வந்து சேர்ந்ததை அனுசரித்து, அன்று பணியாட்களுடன் சேர்த்து எல்லோருக்கும் இனிப்பான பலகாரங்கள் கிடைத்தன.
அந்தப் பெண் குதிரையின் வருகை அடிவாரங்களில் மிகவும் சோகமாகக் கடந்து கொண்டிருந்த நாட்களுக்குப் புதிய ஒரு நிறம் கொடுத்தது.
வீட்டில் ஒரு புதிய வாரிசு பிறந்திருப்பதைப்போல, சாராவிடமும் தாமுவிடமும் பிறரிடமும் உற்சாகம் வந்து சேர்ந்தது. தூர இடங்களில் இருந்துகூட குதிரைப் பைத்தியம் பிடித்த சில நண்பர்கள் கானின் ஐந்து லட்ச ரூபாய் விலை கொண்ட அந்தக் குதிரையைப் பார்ப்பதற்காக வந்தார்கள். போளம்மா ஓய்வு நேரம் பார்த்து, குதிரை இருக்கும் இடத்தில் சுற்றித் திரிந்தாள். நாகராஜ்மீது அவளுக்கு மெல்லிய ஒரு வீரத்தனமான வழிபாடு தோன்றிவிட்டிருப்பதை பிரசாந்த் புரிந்துகொண்டான். ஒரு நடு இரவு நேரத்தில் ஜப்போய் அவள்மீது ஏறவேண்டும் என்று ஒரேயடியாக பிடிவாதம் பிடித்தான். அவனுடைய எல்லாவித செயல்களுக்கும் மிகவும் அமைதியாக எதிர்வினை காட்டும் கான் அன்றைய ஆசை நடக்கவே நடக்காது என்று கடினமான குரலில் கூறியதை பிரசாந்த் கேட்டான்.
சாயங்கால கூட்டத்தில் இசையுடன் குதிரைகளைப் பற்றிய வீரத்தனமான கதைகளும் பேசப்பட்டன.
“அந்த காலத்தில் ஒரு குதிரை, சிங்கம் இரண்டுக்குமிடையில் யாருக்கு அதிகமான பார்வைசக்தி என்பதைபற்றி ஒரு போட்டி நடந்தது” - கான் தன்னுடைய கதைகளின் சேகரிப்பலிருந்து ஒரு புதிய கதையை எடுத்து வெளியே விட்டார்: “வெண்மையான பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பாலில் முழ்கிக் கிடந்த வெள்ளை நிற முத்தைக் கண்டுபிடித்து எடுத்த சிங்கம் தன்னோட கண்களில் அபூர்வ சக்தியை எல்லோருக்கும் தெரியும்படி சொன்னது. குதிரையைச் சோதித்துப் பார்ப்பதற்காக கறுப்பு நிறத்தில் இருந்த ஒரு முத்தை பயன்படுத்தியிருந்தாங்க. கருப்பு நிறப் பாத்திரத்தில் நிறைக்கப்பட்டிருந்த கருப்பு நிற முத்தை ஒரே நிமிடத்தில் குதிரை கண்டுபடிச்சிடுச்சு. அடுத்த நிமிடம் சிங்கம் குதிரைக்கு முன்னால் அடிபணிந்துவிட்டது.”
ஒவ்வொரு இரவிலும் கூறுவதற்கு கானிடம் புதிய புதிய குதிரைகளைப் பற்றிய கதைகள் இருந்தன. எல்லா கதைகளிலும் வெற்றி பெறுவது என்னவோ குதிரைதான்.
ஜூலியாவிற்கு லாயம் மிகவும் பிடித்திருக்கிறது என்று நாகராஜ் சொன்னான். லாயத்தின் முன் வாசல் இரண்டு பலைககளால் செய்யப்பட்டிருந்தது. மேலே இருந்த பலகை பெரும்பாலும் திறந்தே இருந்தது. திறந்திருக்கும் பலகை வழியாக முகத்தை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு, விரிந்து கிடந்த அடிவாரங்களைப் பார்த்துக்கொண்டே ஜூலியா ஓய்வெடுத்தாள்.
தன்னுடைய சொந்தத் தொழிலின் அளவற்ற ஈடுபாட்டை கொண்டிருந்தான் நாகராஜ். அதிகாலையில் எழுந்து, ஒரு தாய் தன் குழந்தையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதைப்போல, அவன் ஜூலியாவை மிகவும் ஆர்வத்துடன் குளிப்பாட்டினான்.
அதற்காக ஜூலியா தான் இரவில் அணிந்திருந்த ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக நின்றிருப்பாள். அவளுடைய உடம்பில் இருக்கும் தூசியையும் அழுக்கையும் படுக்கையில் இருக்கும்போது ஒட்டியிருக்கும் வைக்கோல் துண்டுகளையும், அவன் ப்ரஷ் செய்து நீக்கினான். வாலிலும் சிறு சிறு ரோமங்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் வைக்கோல் துண்டுகளையும் புற்களையும் மிகவும் கவனம் செலுத்தி இல்லாமல் செய்தான். மூக்கையும் கண்களையும் பிற துவாரங்களையும் பஞ்சு கொண்டு சுத்தம் செய்தான்.உடம்பு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அவள் ஒரு ராணியுடைய கம்பீரத்துடன் ஒவ்வொரு காலையும் எடுத்து நாகராஜின் மடிமீது வைத்தாள். மசாஜ் பார்லரில் அழகுக்காலை நிபுணரின் சிரத்தையுடன் குதிரைக் காலின் அடிப்பகுதியிலும் குளம்புகளிலும் அவன் குளம்பு எண்ணெய்யைத் தடவினான்.
அதற்கு பிறகுதான் நடத்திக் கொண்டு செல்வதற்கும் உடற்பயிற்சிகும் அவளை அவன் வெளியே அழைத்துச் சென்றான். அப்போது புதிய பகல் நேர ஆடைகளை அணிந்து ஜூலியா அழகானவளாக மாறிவிடுவாள். நாகராஜ் அவள்மீது உட்கரார்ந்திருப்பான்.
கேட்டைக் கடந்து பரந்து கிடக்கும் அடிவாரங்களை நோக்கி நடையாகவும் இல்லாமல், ஓட்டமாகவும் இல்லாமல் ஒரு வேகத்தில் அவன் அதை அழைத்துக்கொண்டு சென்றான். திரும்ப வந்தவுடன் அவளை அவன் திரும்பவும் லாயததின் அருகில் கொண்டுபோய் நிறுத்தி, குளம்பிற்கு அடியில் ஒட்டியிருக்கும் புற்களையும் காய்ந்த சருகுகளையும் ஒரு ‘ஹூஃப்பிக்’ மூலம் குத்தி எடுப்பதில் அவன் எப்போதும் கவனமாக இருப்பான்.