
சுராவின் முன்னுரை
வங்காள மொழியின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பிரேமேந்திர மித்ரா (Premendra Mitra), ‘ஷ்யாம் அண்ணன்‘ (Shyam Annan) என்ற இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். இதைக் கதை என்று கூறுவதைவிட, பல விஷயங்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
இதன் கதாநாயகனான ஷ்யாம் அண்ணனைப் போன்ற மனிதர்களை நம் வாழ்க்கையில் தினமும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!
எந்த விஷயத்தைப் பற்றிப் பேச நேர்ந்தாலும். அது ‘எனக்குத் தெரியும்’ என்று கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் எத்தனையோ மனிதர்களை நாம் தினமும் சந்திக்கிறோம்!
அது போன்றதொரு கதாபாத்திரத்தை மையமாக வைத்துக் கொண்டு அரிய- அற்புதமான பல விஷயங்களை இந்நூலில் பிரேமேந்திர மித்ரா வெளியிடுகிறார் என்பதை நினைக்கும்போது அவர்மீது ஆச்சரியம்தான் உண்டாகிறது. உலகத்தின் பல பகுதிகளுக்கும் போய் வந்த ஒரு உணர்வு இதைப் படிக்கும்போது நமக்கு உண்டாகும்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook