
சுராவின் முன்னுரை
ரஷ்ய மொழியில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஃப்யோடர் தாஸ்தாயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky) 1848ஆம் ஆண்டில் எழுதிய ‘White Nights’ என்ற புதினத்தை ‘வெளுத்த இரவுகள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
நாஸ்தென்கா என்ற அழகு தேவதையை இரண்டு இளைஞர்கள் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் மிகுந்த நட்புணர்வுடன் பழகுகிறாள் நாஸ்தென்கா. ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, அவர்களில் ஒருவனைத்தான் அவள் காதலனாக ஏற்றுக் கொள்ள முடியும்.
அவள் அவர்களில் யாரைக் காதலனாக ஏற்கிறாள்? இதுதான் ‘வெளுத்த இரவுகள்’ நாவலின் கதை.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தைத் தூண்டும் அளவிற்கு கதையை நகர்த்திச் செல்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. இது இத்தாலி மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இக்கதையை அடிப்படையாக வைத்து இந்தியில் ‘சாவேரியா’ (Saawariya) என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்ஸாலி (Sanjay Leela Bhansali) இயக்கியிருக்கிறார்.
உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook