
வேதகிரியில் தினமும் பார்த்துப் பழகியவர்கள்...
ஆனந்தனின் சப்தநாடிகளும் நின்றுவிட்டன.
“ஆனந்தன்... நீ... வார்த்தை தவறிவிட்டாய். சொன்ன வாக்குறுதி மீறியிருக்கிறாய். ஆனால், நாங்கள் அதை ஒப்புக் கொள்ள முடியாதே! வா... நாம் புறப்படலாம்... வேதகிரிக்கு... ஒரு நிமிடம் தாமதமானா லும், இந்த பூமியில் ஒரு விதவை உண்டாகிவிடுவாள். சரியான நேரத்தில் நாங்கள் வந்துவிட்டோம்... இவளை வாழவிடு... உன் வழி இது அல்ல...''
எல்லாரும் செயலற்று நின்று விட்டார்கள்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை.
கருப்பு ஆடை அணிந்த மனிதனின் குரல்- அதிர்ச்சியடைந்து நின்றிருந்த ஆனந்தனின் இதயத்திற்குள் ஒரு இடியைப்போல நுழைந்து கொண்டிருந்தது.
“வேதகிரியின் கோட்பாடுகளிலிருந்து உனக்கு விடுதலை கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு. அந்த கோட்பாடுகளிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது...''
அவர்கள் இருவரும் ஆனந்தனை ஆட்களின் கூட்டத்திற்கு நடுவில் இறுகப் பிடித்துக் கொண்டு நடத்திச் சென்றார்கள்.
ஆனந்தன் நடந்தான்- உணர்ச்சியே இல்லாமல்...
ஜெய்ஷாவின் கட்டுப்பாட்டை விட்டு விலகி ஒலித்த அழுகைச் சத்தத்தை வெளியே ஜீப்பில் ஏற்றப்பட்ட ஆனந்தன் கேட்கவேயில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook