வேதகிரி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
ஆனந்தனின் மனதில் ஒரு இருட்டின் நிழல் வந்து விழுந்து கொண்டிருந்தது.
எதிர்பார்த்து வந்ததற்கு நேரெதிர் திசையில் செல்லக்கூடிய பயணம்...
என்னென்ன மாற்றங்களெல்லாம் உண்டாகி விட்டிருக்கின்றன.
நிர்மலா இப்போது "அம்மா'வாக ஆகிவிட்டிருக்கிறாள்.
தன்னைத் தெரிந்து கொண்டிருப்பாளா?
அறை முழுவதும் நிர்மலாவின் பெரிய, சிறிய அளவுகளில் இருந்த படங்கள்!
என்ன ஒரு மாறுதல்!
அவள் எப்படி இப்படி ஆனாள்?
பாம்பின் அழகின்... பளபளப்புகள் கொண்ட உடல் அழகையும், உடலுறவு விஷயத்தில் மேலான திறமையையும் கைக்குள்ளேயே வைத்திருக்கும் அபூர்வமான பெண்களில் ஒருத்தியாக நிர்மலா இருந்தாள். ஆணை உடலுறவுக் கலையின் உன்னத உச்ச நிலையில் கொண்டு போய்ச் சேர்த்து முழுமையான மனத்திருப்தியை அடையக் கூடிய நிபுணி...
"எனக்குத் தேவை உங்களுடைய முழுமையான திருப்தி அல்ல... எனக்கு... என்னுடைய முழுமையான திருப்தி. அதுதான் என்னுடைய லட்சியம். ஆனால், நீங்கள் வேறு யாரையும்விட அந்த விஷயத்தில் என்னை தளர்ச்சியடையச் செய்பவர்... ஆனந்தன், உங்களை எனக்கு எவ்வளவோ பிடித்திருக்கிறது! மிகவும் அபூர்வமாகக் காணக்கூடிய ஆண்மைத் தன்மை!'
ஒருமுறை நிர்மலா கூறியது ஞாபகத்தில் வந்தது.
அதற்குப் பிறகு அந்த உறவு அவளுடன் நீண்ட காலம் நிலை பெற்று நின்றுகொண்டிருந்தது.
ஒரு ஏற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் நிர்மலா நெருங்கி வந்த போது, அவன் அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.
இப்போது நிர்மலா அவன் கையைவிட்டு நழுவிப் போயிருக்கி றாள்.
சிந்தனைகள் மேலும் அதிகமாவதற்கு முன்பே அழைப்பு வந்தது.
“அம்மா அழைக்கிறாங்க...'' ஒரு மஞ்சள் நிற ஆடை அணிந்த மனிதன் உள்ளே அழைத்துச் சென்றான்.
மிகப் பெரிய ஒரு கூடத்தில் நடுமையத்தில் போடப்பட்டிருந்த பீடத்தில் நிர்மலாமயி அமர்ந்திருந்தாள். முன்பு இருந்ததைவிட கவர்ந்திழுக்கக் கூடிய அழகுடன்...
மஞ்சள் நிற பட்டாடை அணிந்திருந்தாள். மூக்கில் மின்னிக் கொண்டிருக்கும் மூக்குத்தி. காதுகளில் பளபளத்துக் கொண்டிருக்கும் கம்மல்... கூந்தலை விரித்துப் போட்டிருந்தாள்.
“வாங்க, ஆனந்தன்... தீர்த்தயாத்திரை எல்லாம் முடிந்ததா?''
நீண்ட காலம் பழகியவளைப்போல நிர்மலாமயி கேட்டாள்.
முதலில் ஒரே குழப்பமாக இருந்தது.
என்ன கூறுவது? சாதாரண வார்த்தைகளுக்கு அங்கு இட மில்லையே!
இப்போது நிர்மலா ஒரு துறவி... அம்மா!
“வாங்க... உட்காருங்க ஆனந்தன்.''
முன்னால் விரிக்கப்பட்டிருந்த பாயைச் சுட்டிக் காட்டியவாறு நிர்மலாமயி தேவி கூறினாள்.
ஆனந்தன் மெதுவாக தரையில் போய் உட்கார்ந்தான். தோள் பையை தன்னுடைய மடியில் வைத்தான். சுற்றிலும் பயபக்தியுடன் சிஷ்யைகளும் சிஷ்யர்களும். ஆனந்தன் அவர்களையே பார்த்தான்.
“நீங்க வெளியே போங்க...'' அம்மா கட்டளையிட்டாள். அங்கு நின்றிருந்தவர்கள் வெளியேறினார்கள். மாதா நிர்மலாவும் ஆனந்தனும் மட்டுமே அங்கு இருந்தார்கள்.
ஒரு நிமிட தயார் நிலைக்குப் பிறகு ஆனந்தன் கேட்டான்:
“நம்ப முடியவில்லை.... இவ்வளவு திடீரென்று... இப்படி...?''
“அப்படி நடந்துவிட்டது ஆனந்தன்... ஒரு நிரந்தர இடம் வேண்டுமல்லவா? அதனால் இப்படியொரு வேடத்தை அணிந்தேன். நீங்கள் என்னிடமிருந்து விலகிச் சென்றுவிட்டீர்கள். வேறு சிலரும்...
ஆனால், அவர்களைவிட நான் நம்பியது உங்களைத்தானே?''
பதில் கூற முடியவில்லை. அவள் கூறியதென்னவோ உண்மைதான்.
“ஆனந்தன், நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன... கூறுவதற்கு மட்டும்...''
“விசேஷமான திறமைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நோய்களைக் குணப்படுத்துகிறீர்கள்... செல்வத்தைத் தருகிறீர்கள்... தேடி வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறீர்கள் என்றெல் லாம்... எப்படி இவ்வளவு திடீரென்று...?''
“எல்லாம் குருவின் அருள்... அவ்வளவுதான்...''
குரு!
நினைத்துப் பார்த்தான்- ஒருமுறை நிர்மலா கூறியதை...
"நான் சுவாமி ஞானேந்திராவைப் பார்த்தேன் ஆனந்தன். அவர் எந்த அளவிற்கு ஒளி படைத்த துறவி தெரியுமா? எழுபது வயதைத் தாண்டியிருப்பார். சுவாமிக்கு என்னை நன்கு புரியும்படி செய்தேன். ஆசீர்வாதம் பெறுவதற்காக அவருடைய பாதங்களில் தலையை வைத்தேன். திடீரென்று சுவாமி என்னைக் கட்டிப் பிடித்தார். தொடர்ந்து அறையின் கதவு அடைத்தது. எழுபது வயது மனிதரின் முரட்டுத்தனத்தைப் பார்த்து நான் திகைத்துப்போய்விட்டேன். மூன்று பகல்களும் இரவுகளும் சுவாமியின் உடலில் நான் படர்ந்து கிடந்தேன். கில்லாடி!'
அந்த மனிதர்தான் நிர்மலாவின் இந்த நிலைக்குக் காரணமாக இருக்க வேண்டும்.
“ஓ... சுவாமி ஞானேந்திரா... இல்லையா? அந்த ஆள் திருடனாச்சே!''
ஆனந்தனின் கேள்வியைக் கேட்டு நிர்மலா சிரித்தாள்.
“திருடனாக இல்லாதவர்கள் யார்?''
“அப்படியென்றால் அந்த வழியை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அப்படித்தானே? இந்த செப்படி வித்தைகள் எப்படி உங்களுக்கு வந்து சேர்ந்தன?''
“அனைத்துமே குரு சொல்லிக் கொடுத்த வித்தைகள்தான்... இப்போது நான் மிகவும் திடீரென்று ஒரு பெரிய நிலையை அடைந்து விட்டேன். இனி இதை வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு மிகப் பெரிய அமைப்பாக இதை மாற்ற வேண்டும். ஆனந்தன், நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களா? நம்பிக்கையுடன் யாரையும் உடனிருக்க வைக்க முடியவில்லை.''
உடனடியாக ஒரு பதிலைக் கூற ஆனந்தனால் முடியவில்லை.
துறவு என்ற போர்வையில் பண சம்பாத்தியம்...
மனிதர்கள் துறவிகளின் ஆச்சரியமான வித்தைகளில் மயங்கிவிடு கிறார்கள். தங்களுடைய சொத்துகள் அனைத்தையும் சித்து வேலை செய்பவர்களின் பெயர்களில் எழுதி வைக்கிறார்கள். சிஷ்யர்களாக அரை நிர்வாண கோலத்தில் நாமங்களைக் கூறிக்கொண்டு உடன் நிற்கிறார்கள்.
இந்த நூற்றாண்டிலேயே மிகவும் லாபம் அளிக்கக் கூடிய தொழில்...
துறவு பூண்ட ஆணின்- துறவு பூண்ட பெண்ணின் கடந்த கால- நிகழ்கால வாழ்க்கையைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.
“ஆனந்தன், என்ன பதிலே கூறாமல் இருக்கிறீர்கள்?''
ஆனந்தன் அமைதியாக இருந்தான்.
“ஆனந்தன், உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இங்கே இருக்கின்றன. நான் உடலளவில்தான் வேஷத்தை மாற்றியிருக்கிறேன். உங்களுக்கு முன்னால் இருப்பது அதே பழைய நிர்மலாதான்... இன்னும் சொல்லப்போனால், உங்களுடன் இன்பமாக இருப்பதற்கு எத்தனையெத்தனை அழகிகள் வேண்டுமானாலும் இங்கு இருக்கி றார்களே! சொல்லப் போனால்- ஆனந்தன், என்னைவிட உங்களுக்கு அந்த விஷயத்தில் திறமைசாலியாக யார் கிடைப்பார்கள்? ஆனந் தன், இப்போதும் நான் உங்கள்மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்ப வள் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள்...''
நிர்மலாவின் கண்களில் தெரிந்த பிரகாசம் அதே பழைய நிர்மலாவை மீண்டுமொரு முறை மனதில் கொண்டு வந்து நிறுத்தியது.
“குளித்து ஓய்வு எடுங்க... நம்முடைய அந்த பழைய படுக்கையறை இப்போதும் இருக்கிறது. புதிய கட்டடங்கள் உண்டாக ஆரம்பித்திருக் கின்றன. அவ்வளவுதான். என்ன, சம்மதமா? ஏற்பாடு செய்யட்டுமா?''