வேதகிரி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
இப்போது மாலதி விருப்பப்படுவது ஆதைத்தான்.
நிரந்தரமான ஒரு உறவு.
இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு நிழலாக இருப்பது.
ஆனால், இன்று வரை ஆனந்தன் தன் மனதைத் திறந்து காட்டியதேயில்லை.
காரணம்- அவனுக்கு மாலதி வேண்டும் என்பதுதான்.
வாழ்க்கைத் தோழியாக அல்ல- சினேகிதியாக. எல்லா உறவு களையும் கொண்டிருக்கும் சினேகிதி... விருப்பம்போல மாலதியின் அக்கவுண்டில் பணம் இருக்கிறது.
நாள் வருமானத்திற்கு எல்லையே இல்லை.
தனக்கு ஆனந்தன் முழுமையான சொந்தமாக ஆகமாட்டான் என்ற விஷயம் மாலதிக்கு நன்றாகத் தெரியும்.
அவள் பலமுறை மனதைத் திறந்து கூறியிருக்கிறாள்.
"ஆனந்தன், இந்த வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்று தோன்றவே இல்லையா? இங்கே பாருங்க... இப்படி நாம் இரண்டு துருவங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக் கிறது? உங்களுக்கு எந்த முறை பிடித்திருக்கிறது? நான் அனுசரித்துச் செல்லத் தயார்...'
ஆனால், ஆனந்தனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
"ஆனந்தன், உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா?'
"அப்படியில்லை மாலதி. உங்களை எனக்கு எவ்வளவோ பிடித்தி ருக்கிறது. இந்த விருப்பத்திற்கு ஒரு நிறம் இருக்கிறது... ஒரு அழகு இருக்கிறது.... ஒரு இசை இருக்கிறது... அது இல்லாமல் போவதை நான் விருப்பவில்லை.'
ஆனந்தனின் பதில் மாலதியைக் கவலையில் கொண்டு போய் சேர்க்கும். காதலியாக இருக்கும் ஒரு பெண் தனக்கு மிகவும் அருகில் இருக்க வேண்டும் என்பதைத்தான் ஆனந்தன் எப்போதும் விரும்பி னான். கணவன் இல்லாத- சதைப் பிடிப்புடன் இருக்கும் ஒரு அழகான பெண்ணின் நடவடிக்கைகளில் கிடைக்கக்கூடிய எல்லை யற்ற ஆனந்தம், மனைவியாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலிலிருந்து கிடைக்காது என்ற விஷயம் ஆனந்தனுக்கு நன்கு தெரியும்.
அது ஒரு தத்துவ விஞ்ஞானமாக இருக்கலாம்.
தன்னுடைய நடைக்கு மேலும் சிறிது வேகத்தை ஆனந்தன் அதிகரிக்கச் செய்தானோ?
சாயங்கால காற்றுக்கு ஒரு தனிப்பட்ட சுகம் இருந்தது.
நீர்ப்பரப்பின்மீது வந்து விழுந்த காற்றுக்கு மெல்லிய குளிர்த் தன்மை இருந்தது.
ஆனந்தன் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான்.
கண்களுக்கு முன்னால் டாக்டர் மாலதி...
மெல்லிய இளம் ரோஸ் நிறத்தில் நைட்டி அணிந்து நின்றிருந்த மாலதியின் உதட்டில் ஒரு புன்னகை வெளிப்பட்டது. பல நாட்கள் மனதில் தயார் பண்ணி வைத்திருந்ததைப்போல... திடீரென்று கிடைத்த ஆனந்தனின் அண்மையால், மாலதியின் நரம்புகளில் ஒரு மின்னல் பாய்ந்தோடியதைப்போல இருந்தது.
“நான் வருவேன் என்று நினைத்திருக்கவில்லை. இல்லையா?'' சுத்தமான தமிழில் கேட்டான்.
ஆனந்தன் உள்ளே சென்றான்.
“மணிச் சத்தம் ஒலிக்கும்போதெல்லாம் மனதில் இருப்பது இந்த வருகைதானே? எங்கே இருந்தீர்கள்? இவ்வளவு அதிகமான நாட்கள் நீடித்த ஒரு பயணம்...?''
ஆனந்தனின் உடலோடு சேர்ந்து நின்று கொண்டு மாலதி கேட்டாள்.
“தெரியவில்லை... உண்மையிலேயே தெரியவில்லை. பயணம் என்பதென்னவோ உண்மை... எங்கு? எதற்கு? தெரியவில்லை.''
ஆனந்தன் அவளுடைய தோளில் மெதுவாகக் கையை வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் நின்றான்.
தீபுவும் நீதுவும்.
மாலதியின் எட்டும் ஐந்தும் வயதுகளைக் கொண்ட மகனும் மகளும்.
அவர்களுக்கு ஆனந்தன் அங்கிளாக இருந்தான்.
ஏராளமான அன்பைப் பகிர்ந்து தரக்கூடிய அங்கிள்.
ஆனந்தனிடம் குழந்தைகளுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைப்பட்ட கதையைக் கூறும் அங்கிள்...
தந்தையின் பாசம் கிடைத்திராத குழந்தைகளுக்கு ஆனந்தனின் இருப்பு ஒரு அனுபவமாக இருந்தது.
குழந்தைகள் உறக்கத்திற்குள் மெதுவாக மூழ்கியபோது மாலதி யின் படுக்கையறை ஒரு கொண்டாட்டத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஐந்தாறு மாதங்கள் இடைவேளைக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் ஒரு வசந்தத்தை முழுமையாக அடைவதற்கு அவளுடைய உடலின் ஒவ்வொரு சிறிய சிறிய அணுவும் அப்போது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தன.
“ஆனந்தன், ஏதாவது ட்ரிங்க்ஸ்...?''
“நான் வைத்திருக்கிறேன்.'' ஆனந்தன் தன் பையில் ஒரு புட்டி விஸ்கியை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
மதுவின் மெல்லிய வருடலில், மாலதியின் பேரழகு ஒரு மயக்க மருந்தைப் போல நரம்புகளில் படர்வதை அனுபவித்து உணர்வது என்பது...
அள்ளி அணைத்துக் கொள்வதற்கு மத்தியில் ஒரு விஷயம் ஆனந்தனுக்குப் புரிந்தது. மாலதி சற்று களைத்துப் போய்விட்டிருக்கிறாள். அதாவது- மெலிந்து போயிருக்கிறாள்.
“என்ன... என்ன ஆனது? உடலில் ஒரு களைப்பு இருப்பதைப்போல...''
“உணவு விஷயங்களைச் சிறிது கட்டுப்படுத்தினேன். அவ்வளவு தான். இந்த பருமன் எதற்கு? யாருக்காக? எப்போதாவது வரக்கூடிய உங்களுக்காகவா?''
பதில் கூற இயலவில்லை. உதடுகள் விடுதலை பெறாத சூழ்நிலையில் இருந்த நிமிடங்கள்.
மாலதி ஒரு புதிய அனுபவத்தின் படிகளில் ஆனந்தனைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். இதற்கு முன்பு எந்த இடத்திலும் கிடைத்திராத ஒரு இன்ப உணர்விற்குள் ஆழமாக இறங்கியபோது, மனதிற்குள் இப்படி நினைத்தான்- "எப்போது வந்து சேர்ந்தாலும், மாலதியின் கொடுத்து வைக்கப்பட்ட திறமையே தனிதான்... ஒருவேளை இன்னொரு பெண்ணிடமிருந்து எந்தச் சமயத்திலும் கிடைத்திராத உடலுறவு இன்பத்தின் பார்த்திராத பக்கங்களை வாசிப்பது என்ற விஷயம் மாலதிக்கு முடிகிறது என்றால், அவளிடமிருந்து ஆனந்தன் விலகிச் சென்று விடக்கூடாதே என்ற விருப்பம்தான் காரணமாக இருக்க வேண்டும்.'
பெண்ணின் ஆழமான தந்திரமே அதுதானே?
4
“நீஏன் அவளைத் திருமணம் செய்துகொள்ள கூடாது,
ஆனந்தன்?''
ஒரு மடக்கு விஸ்கியைப் பருகிவிட்டு, ஒரு சிகரெட்டிற்கு நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டே ஃபெலிக்ஸ் கேட்டான்.
“எதற்கு?'' ஆனந்தனின் இன்னொரு கேள்வி.
“வாழ்க்கையைச் சுவைப்பதற்கு... பிறகு வேறு எதற்கு?''
“இப்போதிருக்கும் இந்த சுகம் இருக்கிறதே? அவள் எனக்கு சொந்தமாகி விட்டால், அது கிடைக்கும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?''
“உன்னுடைய இந்த அலைச்சல் இல்லாமல் போகும். நிரந்தரமான ஒரு இடம்- ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை. அதுதானே நல்லது?''
ஃபெலிக்ஸ் ஆனந்தனை மடக்குவதைப்போல இருந்தது.
“அப்படியென்றால், ஒரு குடும்ப வாழ்க்கை... இரண்டு குழந்தை களின் அன்னையைச் சுமந்து கொண்டு... அப்படித்தானே?''
“அது ஒரு தவறான விஷயமில்லை. தேவையற்ற ஒன்றும் அல்ல. வாழ்க்கையில் அவை அனைத்தும் இயல்பான விஷயங்களே! நீ
அந்த குழந்தைகளின் தந்தையாக வாழவேண்டும்; அவ்வளவுதான். வேறு எங்கும் கிடைக்காத அன்பு உனக்கு மாலதியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் கிடைக்கும் என்ற விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதா?'' ஃபெலிக்ஸ் விடுவதாகத் தெரியவில்லை.
திடீரென்று ஆனந்தன் ஒரு எதிர் கேள்வியை விட்டெறிந்தான்.
“ஃபெலிக்ஸ், நீ ஒரு இடத்தில் போய் சேர்ந்து விட்டோம் என்றதால் உண்டான தன்னம்பிக்கையின் காரணமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறாயா?''