விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
கண்ணாடி இருந்திருந்தால் தன்னுடைய களைத்துப்போன முகத்தை அவளால் பார்த்திருக்க முடியும். உடல் மிகவும் சோர்வடைந்து இருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவளுடைய கண்களின் மேற்பகுதி வீங்கிக் காணப்பட்டது. சிவந்து கலங்கிய கண்கள்! கண்கள் இறுக மூடப்பட்டிருந்தாலும், அவளால் தன்னுடைய நினைவுகளைத் தடை செய்ய முடியவில்லை. அந்த நினைவுகளை- அந்த அனுபவத்தை அவளால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஞாபகங்களின் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக அவள் கண்களைத் திறந்தாள்.
சுசீலா தனியாக இருந்து, அமைதியின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மிகவும் பெரிய அந்த பிரம்மாண்டமான மாளிகையில் தான் மட்டுமே இருப்பதைப்போல முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. எங்கிருந்தும் எந்தவொரு வகையான சத்தமும் கேட்கவில்லை. எப்போதும் விரும்பக்கூடிய கிளிகளின் கலகல சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவற்றின் சத்தங்கள் சுசீலாவை அவளுடைய கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றன.
உடனடியாக எழுந்து வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. முன்னு அழைக்கிறான். முன்னு அழுகிறான். முன்னு... சுசீலா நினைவுகளில் மூழ்கினாள். ஒரே அமைதி... ஆமாம்...
ஒரே அமைதி. முழு அமைதி மட்டுமே... தன்னுடைய அன்றாடச் செயல்களைச் செய்ய முடியாத அமைதி...
"என் வீடு... என் தங்கக் குழந்தைகள்... என்னுடைய அனைத்துமாக இருக்கும் அவர்...''
ஆனால்... விசாலமான மாளிகையின் அந்த அறையில் எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தனிமையிலும் இருந்து கொண்டு வேதனை கொண்ட உடலுடன் அவள் தவித்தாள். விருப்பம் இருந்தாலும், அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அது மேலும் தாங்கிக் கொள்ள முடியாததாகவும் சிரமமானதாகவும் இருந்தது. இறுதியில் அவள் எழுந்து கதவைப் பார்த்தாள். அது வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அவள் சாளரத்திற்கு அருகில் சென்று நின்றுகொண்டு வெளியே பார்த்தாள். ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். தான் வீட்டில் செய்வதைப்போலவே அந்தப் பெண்ணும் காலை நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தாள். விஸ்வத்தின் மனைவி ருக்மிணிதான் அவள். தன்னுடைய வேலைகளை வேறொரு ஆள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயத்தை அவள் அறிந்திருக்கவில்லை.
சுசீலா தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்: "இது யாராக இருக்கும்?" அவள் சிந்தனையில் மூழ்கினாள்: "அவர் இப்போது எங்கே இருப்பார்? என்ன செய்து கொண்டிருப்பார்? இனி நான் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியதிருக்கும்? இந்த மாளிகைக்கு வெளியே இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும்?"
கணவர், குழந்தைகள், தான் என்று மட்டுமே இருந்த அந்த உலகத்திலிருந்து தான் எப்படிப் பிரிந்து வந்தோம் என்ற சிந்தனை அவளை அமைதியற்றவளாக ஆக்க ஆரம்பித்தது. "இதெல்லாம் எப்படி நடந்தது?" சுசீலாவின் உள் மனதில் அசாதாரணமான ஒரு அனுபவம் உண்டானது. அவமானம், கவலைகள் நிறைந்த அனுபவம்...
சாளரத்தை விட்டு விலகி அவள் கதவிற்கு அருகில் சென்றாள். அவள் அதைத் திறக்க முயற்சித்தாள். கதவு வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருக்கவில்லை. அதை திறந்தவுடன், அவள் ஆச்சரியப்பட்டுவிட்டாள். சந்தோஷம் தரக்கூடிய ஒரு ஆச்சரியம்.
உண்மையாகக் கூறப்போனால்- நான் இந்த அறையில் ஒரு கைதியாக இருக்கவில்லை. விருப்பம்போல் நான் அறையை விட்டு வெளியே போகலாம்.
அறைக்குள்ளிருந்து வெளியே செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு சுசீலாவால் முடியவில்லை. வெளியே செல்வது ஆபத்தான விஷயமாக இருக்குமா? சரி... மாளிகையில் இருக்கும் மற்றவர்கள் எங்கே? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அந்தப் பெண் யார்?
வெளியே போவதா அல்லது வேறு ஏதாவது நடப்பது வரை இங்கேயே இருப்பதா என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானத்தையும் அவளால் எடுக்க முடியவில்லை. அப்படி இல்லையென்றாலும் என்ன நடக்கும் என்று சிந்தித்துக் கொண்டே சுசீலா அறைக்குள்ளிருந்து மெதுவாக வெளியே வந்தாள். மெதுவாக... மெதுவாக... அவள் நடந்து கொண்டிருந்தாள்.
13
உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அது ஒரு மிகப் பெரிய மாளிகைதான். "பிறகு... அங்கே..." அடுத்த நிமிடம் நடந்து கொண்டே சுசீலா அந்த இன்னொரு பெண்ணின் அருகில் சென்றாள். தம்பியின் மனைவி ருக்மிணி மிகவும் அருகில் நின்றிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன செய்ய
வேண்டுமென்றா, பேச வேண்டுமென்றோ, இருவருக்குமே தெரியாமல் இருந்தது. இறுதியில் சுசீலாதான் மவுனத்தைக் கலைந்தாள்.
"பற்களைத் துலக்கி கொஞ்சம் குளித்தால் நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது.'' சுசீலா சொன்னாள்.
"அங்கே...'' சைகை மூலம் கூறியவாறு அவள் தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
"அவளுக்கு என்மீது வெறுப்பு." சுசீலாவிற்குத் தோன்றியது. அவளுடைய உள் மனதில் ஒரு சிறிய வேதனை உண்டானது. இனிமேலும் இவளிடமிருந்து அவமானப்பட வேண்டியதிருக்குமோ? உடனே இங்கிருந்து வெளியேறினால் என்ன? சுசீலா நினைத்தாள்: "எனக்கென்று ஒரு இடமில்லாத, என்னை யாருமே விரும்பாத இந்த மாளிகையில் இனிமேல் என்ன காரணத்தைக் கொண்டும் இருக்க முடியாது. " அவள் வெளியே செல்வதற்கான வழியைத் தேடினாள். ஆனால், எங்கும் கதவைப் பார்க்க முடியவில்லை. “உண்மையாகவே இது ஒரு மிகப் பெரிய மாளிகைதான்... அவள் மனதில் நினைத்தாள். தான் மேலும் கையற்ற நிலையில் இருப்பதைப் போல சுசீலாவிற்குத் தோன்றியது. ஒரு கைதி தான் மட்டும் தனியாக ஒரு கெட்ட பெண்ணுடன்...”
ஒரு வேலைக்காரி அவளுக்கு அருகில் வந்தாள். பெயர் - போச்சம்மா.
"கொஞ்சம் உமிக்கரி வேணும்.'' சுசீலா சொன்னாள். போச்சம்மா உள்ளே போய் உமிக்கரியுடன் வந்தாள்.
பிறகு, அவளிடம் கேட்டாள்: "குளியலறை எங்கே இருக்கு?''
போச்சம்மா குளியலறைக்குச் செல்லும் வழியைக் காட்டினாள்.அப்படியொன்றும் தான் கைதியாக இல்லை என்று சுசீலா
இப்போது சிந்தித்தாள். தலையில் இருந்த கனத்திலிருந்து சற்று விடுதலை பெற்றதைப்போல அவள் உணர்ந்தாள்.
அடுத்த நிமிடம் அவள் குளியலறைக்குள் சென்றாள். குளியலறைக்குள்ளிருந்து வெளியே வந்தபோது தனக்கு முன்னால் அஞ்சய்யா நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப்போல அவருடைய முக வெளிப்பாடு இருந்தது. ஒருமுறை அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, அஞ்சய்யா குளியலறைக்குள் சென்றார்.
சுசீலாவின் இதயம் இப்போது மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. வேகமாக ஓடி அவள் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டாள். உள்மனதில் மீண்டும் வேதனை நிறைந்த அதே அலை! கோபம், அவமானம், வஞ்சனை ஆகியவை அலைகளாக ஓடிக் கொண்டிருந்தன.