![பூவிதழ் புன்னகை poovithal punnagai](/images/poovithaz-punnagai.jpg)
நிறைய அட்வைஸ் பண்ணாங்க. அப்போ அவங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனா அவங்களுக்குத் தெரியாம இன்ட்டர்நெட்டை நோண்டும் போது த்ரில்லிங்கா இருக்கு...''
''ச்சீ... பாவம்க்கா ராதா ஆன்ட்டி. அவங்களை ஏமாத்தாதே...''
''லைஃப்ல கொஞ்சம் என்ஜாய்மெண்ட்டும் வேணும். சும்மா... எப்பப் பார்த்தாலும் பாடப் புத்தகத்தையே படிச்சுக்கிட்டுக்க முடியுமா? படிப்பைத் தவிர எத்தனையோ விஷயங்கள் இருக்கு நாம ஜாலியா இருக்கறதுக்கு...''
''உனக்கு உங்கப்பாவோட ஜீன் இருக்குல்ல அதான் அவரைப் போலவே பேசற. பேசறதோட நிறுத்திக்கோ ஸ்வாதிக்கா...''
''ஏய்... ஒரே ஒரு தடவை அந்த ரம்யா அவளோட பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட போவாளே அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு போய் நல்லா சாப்பிட்டுட்டு டிஸ்கொதே போலாமா?''
''ஐய்யய்யோ... எனக்கு பயம்மா இருக்கு. நான் மாட்டேன்ப்பா...''
''ஏய்... சும்மா... ஒரே ஒரு நாள்தான் மஞ்சு... ப்ளீஸ் எனக்காக...''
''ஏங்க்கா இப்பிடி கெஞ்சறே... நீ கெஞ்சறதைப் பார்த்தா... எனக்கு சரின்னு சொல்லணும் போல இருக்கு. ஆனா... அதுக்கு நிறைய பணம் வேணுமே...''
''அதுக்கு ஏன் நீ கவலைப்படறே? எங்கப்பாவோட ஷர்ட் பாக்கெட்ல நிறைய பணம் கத்தை கத்தையா வச்சிருப்பாரு. நைஸா எடுத்துட்டு வந்துடறேன்...''
''எனக்கு பயம்மா இருக்குக்கா.''
''பொட்டை பாவக்கா. பயப்படாதடி...''
''சரிக்கா. ஆனா ஒரே ஒரு தடவைதான்.''
''சரி. சரி. நாளைக்கு ஸ்கூல் பங்க் பண்ணிடலாம்...''
''உங்க வீட்ல அப்பா தப்பு பண்றாரு. எங்க வீட்ல அம்மா தப்பு பண்றாங்க... நாமளும் அதே மாதிரி தப்பு பண்றது சரியா... ஸ்வாதிக்கா...?''
''ஒரு தடவைன்னு சொல்லிட்டேன். அதையே நூறு தடவை சொல்ல வைக்காதே. தப்பை ஒரே ஒரு தடவை பண்ணிடுவோம். அதுக்கப்புறம் ஸ்டாப் பண்ணிடுவோம்...''
''ஒரு தடவை...'' என்று சொல்ல வந்த மஞ்சுவை தமாஷாக அடிக்கப் போனாள் ஸ்வாதி.
''சரி... சரி... இனி ஒரு தடவை கூட... ஒரு தடவைன்னு சொல்லமாட்டேன்....''
''அது... ஆமா, நம்ம ப்ளான்?''
''கையில காசோட வா ஸ்வாதிக்கா. உப்பு இல்லாம பப்பு ருசிக்காது...''
''உனக்கு வாயில கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு.''
''எனக்கும் எங்கம்மாவோட ஜீன் இருக்கும்ல?''
''சரி. சரி. போதும் அம்மா அப்பா புராணம். க்ளாசுக்கு நட...''
இருவரும் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
ஆபிஸில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் திலீப். அவனது மொபைல் ஃபோனின் ரிங் டோனில் 'புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே' பாடல் மெல்லிசை மன்னர் எம்.யெஸ். விஸ்வநாதன் அவர்களின் குரல் தேனில் குழைத்து இசைத்தது.
திலகாவின் அழைப்பிற்கு அடையாளமாக அப்பாடலை வைத்திருந்தான் திலீப். கைவேலையை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்து, குரல் கொடுத்தான்.
''ம்மா....''
''என்னப்பா திலீப்? வேலையா இருக்கியா?''
''பரவாயில்லம்மா. சொல்லுங்க. என்ன விஷயம்? இந்த நேரத்துல கூப்பிட மாட்டீங்களே...''
''அது... அது... வந்துப்பா. இந்த வீட்டுக்கு சொந்தக்காரி வீட்டை மாத்த சொல்றா. அவளோட பொண்ணு கனடாவுல இருந்து இங்கே குடி வர்றாளாம்...''
''அதனால என்னம்மா? வேற வீடு பாருங்க. காலி பண்ணிக் குடுங்க...''
''நீ பாட்டுக்கு அங்க இருந்து லேசா சொல்லிட்டப்பா. வீடு கிடைக்கறது இங்க குதிரை கொம்பா இருக்கு. வாடகையே யானை விலை சொல்றாங்க...''
''என்னம்மா நீங்க? யானை... குதிரைன்னுக்கிட்டு?! வாடகை முன்ன பின்ன ஆனா என்னம்மா? பேசி முடிங்க...''
''அதுக்கில்லப்பா... நாம இப்ப குடி இருக்கற வீட்ல இருக்கற வசதி... வாடகை அதிகமா குடுக்கற வீட்ல இல்லப்பா... அது மட்டுமில்ல திலீப்... வெட்டியா... 'உண்ணாம திண்ணாம அண்ணாமலைக்குக் குடுக்கணும்'ங்கற மாதிரி ஆயிடும்...''
''அப்பிடின்னா ஒண்ணு பண்ணுங்கம்மா... வீட்டை காலி பண்ணி இங்கே பெங்களூருக்கு வந்துடுங்க. இங்கே மூணு ரூம் இருக்கு. நல்ல காத்தோட்டம், வெளிச்சம். நீங்களும், அப்பாவும் மட்டுதானேம்மா? தாராளமா இங்கே இருந்துக்கலாம்.''
''அப்பிடின்னாத்தான் நீ பெங்களூர் போகும்போதே உன் கூட வந்திருப்பேனேப்பா. இங்கே பழகின இடம், மனுஷங்க, பழகின கோயில், குளம்ன்னு இதையெல்லாம் விட்டுட்டு என்னால அங்க வர முடியாதுப்பா. இவ்ளவு வயசான காலத்துல மனசுக்குப் பிடிச்ச விதமா வாழ்ந்துட்டு போறதுதாம்பா நல்லது. புரிஞ்சுக்கப்பா...''
''ஒண்ணும் பிரச்னை இல்லைம்மா. வாடகை ஜாஸ்தியானா கூட பரவாயில்லை. நல்ல, வசதியான வீடா பாருங்க...''
''திலீப்... நான் ஒண்ணு சொல்றேன். அது... அது... வந்து... ராதாவோட அம்மா வீட்ல அவங்க ரெண்டு பேர் மட்டும்தான். நாங்களும் பேசாம அங்கே போய் இருந்துக்கறோமே... அது ராதா பேர்லதானே இருக்கு? நம்ம ராதா வீடுதானே அது...?''
''ஆனா அம்மா... அவங்க கூட போய் நீங்களும் அங்கே போய் எப்பிடிம்மா...?''
''அதனால என்னப்பா? எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. அது மட்டுமில்லப்பா... வீடு நல்ல வசதி. மாசா மாசம் வாடகை மிச்சம். நல்ல காத்தோட்டமான வீடு. நாங்க என்னப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருப்போம். இருக்கற வரைக்கும் அங்கேயே வாழ்க்கையை ஓட்டிடுவோம்...''
''..........''
''என்னப்பா இவ்ளவு யோசிக்கற...? ராதாவோட வீட்ல நமக்கு உரிமை இல்லையாப்பா...?''
''சச்ச... அப்பிடியெல்லாம் இல்லம்மா...''
''சரிப்பா... நீ யோசிச்சு சொல்லு....''
''சரிம்மா...''
திலீப் மொபைலை மௌனமாக்கி விட்டு மறுபடியும் வேலைகளில் மூழ்கினான்.
அதன்பிறகு வந்த நாட்களில் திலீப்பிற்கு தினமும் ஃபோன் செய்து பேசி அவனுக்கு வேப்பிலை அடித்து, வீடு மாறி, ராதாவின் அம்மா வீட்டிற்கு குடி போவதற்கு சம்மதம் பெற்றாள்.
வருடத்திற்கு ஒரு முறை அதிகபட்சமாக பத்து நாட்கள் மட்டுமே ராதாவை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பான் திலீப். இந்த வருடமும் விடுமுறைக்காக வந்திருந்தாள் ராதா. அங்கே இருக்கும் அந்த பத்து நாட்களையும் சொர்கமாக மதிப்பிடுபவள் ராதா.
மகளுக்குப் பிடித்ததை சமைத்துப் போட்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து சந்தோஷப்படுவாள் வனஜா. பேத்தி ஸ்வாதி என்றால் வனஜாவிற்கும் சுந்தரபாண்டிக்கும் உயிர்.
ஸ்வாதி வந்து விட்டால் தங்களையே மறந்து அவளைக் கொஞ்சி மகிழ்வர். வெளியே அழைத்துச் செல்வார்கள். ராதா எங்கேயும் கிளம்பமாட்டாள்.
சாப்பிடுவாள். படுத்துத் தூங்குவாள். ஒரு வருடத்து உழைப்பின் களைப்பை அம்மா வீட்டில் இளைப்பாறிக் கொள்வாள்.
மருமகன் திலீப் மாறவே இல்லை, திருந்தவே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட வனஜா, மனம் வருந்தினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook